டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  திரைவிமர்சனம் : மன்மதன்
  - மீனா
  | Printable version |

  பழைய சிவப்பு ரோஜாக்கள் படத்தை கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் புதுமை என்று கலந்து கட்டி வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் (சிம்பு) முருஹன். ரஜினி, சத்யராஜ் போன்ற சூப்பர் ஆண்டி-ஹீரோக்கள் வரிசையில் சிம்பு முதன் முறையாக இடம்பிடிக்கிறார்.

  முதல் காட்சியிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு பேஷண்டாக வருகிறார் சிம்பு. டாக்டர் மந்திராபேடி. அவரிடம் தான் காதலில் ஏமாற்றப்பட்டக் கதையைச் சொல்லி அழுகிறார். ஆறுதலாக கட்டி அணைக்கும் மந்திராவை நெருக்கமாக அணைக்கும் சிம்பு வில்லங்கமாக நம்மை நோக்கி ஒரு லுக் விடுகிறார். ஆரம்பிக்கிறது மன்மதனின் லீலைகள். ஆடிட்டிர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டே இசைக் கல்லூரியில் படிக்கும் மாணவர் சிம்பு. அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஜோதிகா. ஒரு நாள் தான் முன் பின் பார்த்தரியாத சிம்பு தன்னைக் கற்பழிப்பதாக கனவு காணும் ஜோ மறுநாள் சிம்புவை நேரில் பார்த்து மனம் பதைக்கிறார்.  முதலில் சிம்புவுடன் பழக பயந்து நடுங்கும் ஜோ, சிறிது நாட்களில் சிம்புவின் நெருங்கிய தோழியாகிறார்.

  நகரில் பல இளம் பெண்கள் திடீரென மாயமாக மறைகிறார்கள். அதைக் கண்டுபிடிக்க நியமிக்கப்படும் போலீஸ் அதிகாரி அதுல் குல்கர்னி. போலீஸ் குற்றவாளியைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருக்கையில், சிம்பு பைக்கில் ஒரு இளம் பெண்ணுடன் போவதைப் பார்க்கும் ஜோதிகா மறுநாள் அந்தப் பெண்ணைக் காணவில்லை என்ற செய்தியைப் பார்த்ததும் போலீஸிற்கு சிம்புவைப் பற்றி சொல்லிவிடுகிறார். கல்லூரிக்குள் நுழைந்து தடாலடியாக சிம்புவைக் கைதுசெய்யும் அதுல் குல்கர்னியிடம் விசாரணையில் கொலை செய்தது தான் இல்லை.. தன்னுடைய தம்பி தான் என்று சிம்பு கூறுகிறார். அதிலிருந்து ஆரம்பிக்கிறது பிளாஷ் பேக்.

  கிராமத்தில் மாமா கவுண்டமணியின் ஆதரவில் வளரும் தம்பி சிம்பு கல்லூரியில் படிப்பதற்காக நகரத்திற்கு வருகிறார். கல்லூரியில் கூடப்படிக்கும் சிந்து துலானியின் மீது காதல் கொள்கிறார். சிந்துவும் சிம்புவின் காதலை ஏற்றுக்கொள்ள, சிம்பு கிட்டத்தட்ட இறக்கை கட்டி பறக்காத குறையாக மகிழ்சியுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் சிந்துவும், கூடப்படிக்கும் இன்னொரு மாணவனும் வைத்திருக்கும் தகாத உறவை நேரில் பார்த்து அதிர்ச்சியடையும் தம்பி சிம்பு, அந்த ஆத்திரத்தில் இருவரையும் கொன்று விடுகிறார்.

  அன்றிலிருந்து மோசம் செய்யும் பெண்களைக் கண்டாலேயே கொலை வெறி கொள்ளும் தம்பி சிம்புதான் ஊரில் காணமல் போன பெண்களை கொன்றிருக்கவேண்டும் என்று கூறி  பிளாஷ்பேக்கை முடிக்கிறார் அண்ணன் சிம்பு. இதில் இவருக்குச் சாதகமாக தம்பி சிம்புவைப் பற்றி மாமா கவுண்டமணி முதற்கொண்டு தம்பி சிம்புவின் கல்லூரி நண்பர்கள் வரை அனைவரும் கூறும் சாட்சியால் போலீஸ் அண்ணன் சிம்புவை விடுதலை செய்துவிட்டு தம்பி சிம்புவைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்த நேரத்தில் தான் அவசரப்பட்டு சிம்புவை போலீஸில் மாட்டிவிட்டதற்காக மன்னிப்பு கேட்கும் ஜோ தன் காதலை சிம்புவிடம் கூறுகிறார். அதை ஏறக மறுக்கிறார் சிம்பு. ஏன் என்பதே கிளைமாக்ஸ்.

  சுயபுராணம் உண்டு என்றாலும் அதை ரொம்பவுமே அடக்கி வாசித்துவிட்டு நடிப்பில் போதிய கவனத்தை முதன்முறையாக செலுத்தியிருக்கிறார் சிம்பு. அண்ணன், தம்பி என்று இரு வேடங்களிலும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் நிறைய யாரையோ நேரடியாகத் தாக்குவதைப் போல அமைந்துள்ளன.. எல்லாப் படங்களிலும் ரஜினி ரசிகனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சிம்பு, இதில் ரொம்பவும் மாறுபட்டு அஜித் ரசிகராக வருகிறார்.

  படத்தில் மந்திரா பேடி, யானா குப்தா, சிந்து துலானி என்று ஏகப்பட்ட பெண் நட்சத்திரங்கள். ஆனாலும் ஹீரோயின் ஜோ. ஹீரோயின் என்றாலும் ஜோவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவிற்கு இல்லை என்பது ஒரு குறையே. அதிலும் ரொம்பவுமே இளைத்து வாட்டமாகவே படம் முழுவதும் வருகிறார் ஜோ. தமிழக ரசிகர்களுக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்பதை மறந்து விட்டார் போலிருக்கிறது. கவுண்டமணி நாலைந்து சீன்களில் மட்டுமே தலையக் காட்டியிருக்கிறார். மற்றபடி படம் முழுவது வியாபிப்பவர் சிம்பு மட்டுமே.

  யுவன் சங்கர் ராஜா இசையில் காதல் வளர்த்தேன், என்னாசை மைதிலியே பாடல்கள் சூப்பர். கணல் கண்ணன் சண்டைக் காட்சிகள் சுமார் ரகம். கதை, திரைக்கதை எல்லாம் சிம்பு தான். இயக்கம் முருஹன் என்று திரையில் போடுகிறார்கள். மொத்தத்தில் மன்மதன் ஒரு வித்தியாசமான படம். அடுத்த படத்திலிருந்து சிம்பு தைரியமாக நான் தான் இந்தப் படத்தின் இயக்குனர் என்று சொல்லிக்கொள்ளலாம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |