டிசம்பர் 16 2004
தராசு
கட்டுரை
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கட்டுரை
சமையல்
திரைவிமர்சனம்
கட்டுரை
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : காபி மகாத்மியம்
  - ராமசந்திரன் உஷா
  | Printable version |

  காபி என்றால் அடிக்கிற காபி இல்லைங்க,  குடிக்கிற காபி. எனக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னால் தெரிந்த ஓரே சமையல் அறை சாகசம், காபி போடுவது.  காபி பில்டரில்  முக்கால் பாகத்துக்கு அமுக்கி அமுக்கி காபி பொடியைப் போட்டு, நன்றாக கொதிக்கும் நீரை ஊற்றி மூடிவைத்து, கள்ளிச் சொட்டாய் இறங்கும் டிகாஷனை நன்குக் காய்ச்சி பாலில் சில துளிகள் இட்டு, அரை சக்கரைபோட்டு கலக்கி குடித்தால், தேவாமிர்த்தம்! அதிலும் தோசை மிளகாய் பொடி தொட்டுக் கொண்டு, இட்லியோ, தோசையோ தின்றுவிட்டு இந்த காபியைக் குடித்தால் அடடா! அதிலும் அம்மா, காபிக்கு என்று எருமைபால் தனியாய் வாங்குவார்.

  பதினைந்து நாளுக்கு ஒருமுறை பாட்டி காபி பொடி அரைத்துக் கொண்டு வருவார். கொட்டையை மாற்றிவிட்டால் என்ன செய்வது என்று, ஒரு குறிப்பிட்ட கடையில், கண்ணுகுத்தி பாம்பு போல பார்த்து பார்த்து அரைத்து வருவார். பீபெரி கால்கிலோ, பிளாண்டேஷன் ஏ கால்கிலோ, இருபதுகிராம் சிக்ரி. இதுதான் சரியான அளவு.  காபி போர்ட்டில் காபி கொட்டை வாங்க ரேஷன் கார்ட் மாதிரி ஒன்று உண்டு.

  அதை வாங்கி வருவது அப்பா வேலை. என்னமோ பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தால் வயசான பீலீங் வருது.

  அப்புறம் கல்யாணம் ஆனதும் அஸ்ஸாம், உ.பி என்று வட நாட்டு பயணம். அதுவும் சைட் வேலை என்பதால் பக்கத்து கிராமத்திலிருந்து மஞ்சளாய் ஒரு திரவம் பால் என்ற பெயரில் மெதுவாய் மதியம் பன்னிரண்டு மணிக்கு வரும். பிறகு காபி பொடி, என்னதான் பிரிஜ்ல வெச்சாலும் பிளேவர் போய்விடும். டீயோ எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்காது. இன்ஸ்டண்ட் காபிக்கு தலைவிதியே என்று பழகிக் கொண்டேன்.

  கல்யாணம் ஆன புதியதில் என் அண்ணன் என்னைப் பற்றி புகழ்ந்து ஏதாவது சொல்ல வேண்டும் என்று நான் ஏ கிளாஸ்ஸாய் காபி போடுவேன் என்று சொல்லி வைத்தான். புதுகுடித்தனம் ஆரம்பித்ததும் மாமியார் என்னமோ சூப்பராய் காபி போடுவாயாமே, எங்கே போடு பார்க்கலாம் என்று சொன்னார். நானும் போட்டு, பவ்வியமாய் கணவரிடமும், மாமியாரிடமும் நீட்டினேன். ரிசால்ட் என்னவென்று சஸ்பென்சாய் மாமியாரை நோக்க, அவரும் தலையை ஆட்டிவிட்டு எழுந்துப் போனார். தாலி கட்டியவரை கேட்டதும், நல்ல இருக்கு என்று ரகசியமாய் கிசுகிசுத்தார். அதை பெரியதாய் சொன்னால் என்ன என்றுக் கேட்டதும், அம்மா தப்பா நினைச்சிப்பாங்க என்று மாணிக்கமாய் பதில் சொன்னார். (மாணிக்கம்- மெட்டிஒலி ஹீரோ)

  விமான பயணங்களில் காபி டிகாஷனும், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் சக்கரையும், ஜில் என்று காபிமேட் என்று பால்மாதிரி ஒன்று கொடுப்பார்கள். டிகாஷனும் சுமாரான சூட்டில் இருக்கும். எல்லாத்தையும் சேர்த்து கலக்கி குடித்தால் ஆலகால விஷம் இப்படிதான் இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம்.

  இதைவிட கொடுமை, ஒரு முறை நார்வேயில், தலைநகர் ஆஸ்லோவில் இருந்து, பெர்கன் என்ற ஊருக்கு காலை ஏழு மணிக்கு ரயில் ஏறினோம். ஹோட்டலில் ஏழு மணிக்கு பிறகுதான் பிரேக் பாஸ்ட் என்று சொல்லிவிட்டார்கள். நம் ஊர் மாதிரி தெருவுக்கு தெரு டீ கடை, சரவணபவனாவது ஒன்று.

  ஐந்து மணி நேர பயணம். ரயிலில் பிஸ்கெட்டை தின்று அழுது புலம்பும் வயிற்றுக்குப் போட்டுவிட்டு பார்த்தால், அங்கேயே காபி, டீ போட்டு குடிக்க எல்லாம் இருந்தது. வழக்கமாய் சூடாய் டிகாஷன். பாக்கெட்டில் இருந்த சக்கரையை, அதே கருத்த டிகாஷனில் கலக்கிவிட்டு, ஒரு ஸ்பூன் கொள்ளளவு இருந்த காபி மேட் நாலை எடுத்து கலக்கி ஒரு வாய் குடித்துவிட்டு பார்த்தால் பால் பாக்கெட்டில் ஓநாய் படங்கள்! பயந்துப் போய் கணவரை கூப்பிட்டால் ஓநாய் பாலாய் இருக்கும் என்றார் சர்வசாதாரணமாய்! காபி கலக்கும் குடலை இந்த ஓநாய் பால் மேலும் கலக்கியது. மெதுவாய் சுதாரித்துக் கொண்டு இன்னும் இரண்டு பாக்கெட்டுகளை திறந்துப் பார்த்தால் குருவி படம் ஒன்றில். குருவி பால் தராது என்ற விஞ்ஞான அறிவால் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

  துபாயிலும் காபி பொடி அரைத்து தருகிறார்கள். ஆனால் அதிகமாய் கருக்க வைத்து, காபி தீஞ்ச வாடை அடிக்கிறது. உடம்பு ஏறுகிறது என்று கொழுப்பு நீக்கிய பால், இன்ஸ்டண்ட் காபி பொடி என்று காபி குடிக்கும் ஆசையே போய்விட்டது. வாழ்க்கையே இப்படிதாங்க, நாம ஒண்ணுமேலே அதிக ஆசை வைத்தால், அது நம்மை விட்டுப் போய்விடுகிறது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |