Tamiloviam
டிசம்பர் 20 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : மரண தண்டனை ரத்து
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒரு பொதுவான விஷயம் மரண தண்டனை தேவையா - அல்லது அதை தடை செய்ய வேண்டுமா என்பதுதான். நார்வே உள்ளிட்ட சில நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்து அந்நாட்டு அரசுகள் சட்டம் போட்டுவிட்டன.

இந்தியாவை பொறுத்த மட்டில் இன்னமும் மரண தண்டனை வழக்கத்தில் உள்ளது. ஆனாலும் மரண தண்டனை வழங்கப்பட்ட பலருக்கும் அத்தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. அப்சல் குரு போன்றவர்கள் உதாரணம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கருணை காட்டி அவர்களது தண்டனையைக் குறைக்கலாம் என்ற மரபு இன்னும் நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வருவதால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பலரும்  ஜனாதிபதிக்கு ஒரு மனுவைப் போட்டுவிட்டு சிறையில் காலம்தள்ளி வருகிறார்கள். இவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி ஜனாதிபதிக்கு ஏகப்பட்ட அரசியல்வாதிகளிடமிருந்து பரிந்துரைக் கடிதங்கள் வரும் அவலமும் நம் நாட்டில் நடைபெற்றுவருகிறது.

அப்சல் குரு உள்ளிட்டவர்களால் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தாக்குதலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினர் கடந்த வாரம் நடைபெற்ற நினைவுக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்கள். பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி ஏராளமானவர்கள் உயிரிழக்கக் காரணமாய் இருந்த அப்சல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனபிறகும் அவனைத் தூக்கில் போடாமல் காலம் தாழ்திக்கொண்டிருக்கும் அரசின் போக்கை எதிர்த்தே தாங்கள் இந்தப்புறக்கணிப்பைச் செய்ததாகக் கூறியுள்ளார்கள் பாதிக்கப்பட்ட அக்குடும்பத்தினர்கள்.

NJ Governor John Corzineநம் நாட்டின் நிலை தான் இப்படி என்றால் உலகின் நாட்டாமையான அமெரிக்காவில், நியூஜெர்சி மாநிலத்தில் மரண தண்டனையை ரத்து செய்து அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் மக்களின் வெறுப்பை ஏகமாய் சம்பாதித்துள்ளது. கடந்த பல வருடங்களாக மரண தண்டனையே நிறைவேற்றப்படாமல் இருந்த நியூஜெர்சி மாநிலத்தில் தற்போது மொத்தம் 8 கைதிகள் மரண தண்டனைக் குற்றவாளிகளாம். அவர்களுக்கான தண்டனையை கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்றியாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த அம்மாநில அரசு அவசர அவசரமாக 75 சதவீத மக்களின் எதிர்ப்பையும் மீறி மரண தண்டனையை ரத்து செய்யும் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை இவர்கள். யாரைக் காப்பாற்ற போட்டனர் இந்த அவசரச்சட்டத்தை?

தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட கைதிகளை அவர்கள் ஆயுள் உள்ளவரை சிறையில் அடைத்து வைக்கவேண்டும் என்று கூறும் இவர்கள் நாளையே - நன்னடத்தைக் காரணமாக அவர்களை விடுதலைச் செய்கிறோம் என்று கூறத்தயங்கமாட்டார்கள். குற்றவாளி உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்தால் அவனுடைய சகாக்கள் யாரையாவது பிணைக்கைதியாக பிடித்து வைத்து இவர்களை வெளியே எடுப்பார்கள்.

அரசியல்வாதிகள் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்றால் அவன் எவ்வளவு பெரிய பாதகத்தைச் செய்திருக்கவேண்டும் ? பாதிக்கப்பட்டது உங்களின் ஒருவன் என்றால் நீதிமன்றத் தீர்பிற்கு வெகுகாலத்திற்கு முன்பே குற்றவாளியின் கதை முடிந்திருக்குமே ?

இறைவன் கொடுத்த உயிரை எடுக்க நமக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் வாதம் செய்யலாம். ஆனால் நிஜ வாழ்விற்கு இத்தகைய வாதங்கள் உதவாது. அப்சல்குரு - தனஞ்ஜெய் போன்ற மிருகங்களை - மிகக்கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை ஆயுள் தண்டனை கொடுத்து - மக்களின் வரிப்பணத்தில் ஆயுள் உள்ளவரை சாப்பாடு போட்டு - இவர்களைப் பாதுகாக்க சிறைக்காவலர்களை நியமித்து...  எப்படி கேவலமாக செலவழிக்கிறார்கள் வரிப்பணத்தை.

 

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |