டிசம்பர் 21 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : இயேசு பிறந்த கதை
- சிறில் அலெக்ஸ்
| | Printable version | URL |

ஜோசப், தாவீதின் மகனே, நீ மரியாளை மனைவியாய் ஏற்றுக்கொள், அவள் கர்பமாயிருப்பது பரிசுத்த ஆவியின் அருளால். அவளுக்குப் பிறக்கும் மகனுக்கு இயேசு எனப் பெயரிடுங்கள் ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்.

கலிலியேயாவில் நாசரேத் எனும் ஊரைச்சேர்ந்த ஜோசப் எனும் தச்சனுக்கும் மரியாள் எனும் இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமாயிருந்தது. ஒர் இரவில் கடவுளின் தூதன் கபிரியேல், கன்னியான மரியாளிடம் தூதுவந்தான்.

"மரியே வாழ்க," தூதன் அறிவித்தான்,"ஆண்டவர் உம்முடனே, பெண்களிலெல்லாம் பேறுபெற்றவர் நீர்." என்றான்.

மரியாள் குழம்பினாள்.

Gabriel blessing Mary "அஞ்சாதே மரியே" வந்தவன் தொடர்ந்தான்,"கடவுளின் கருணையைப் பெற்றுள்ளாய். இதோ ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாய், அவனுக்கு இயேசு எனப் பெயரிடுவாய் அவன் கடவுளின் மகன் எனப்படுவான். தாவீதின் அரசை கடவுள் அவனுக்குத் தருவார். யாக்கோபின் சந்ததியை அவர் ஆள்வார் அவர் அரசுக்கு முடிவே இராது." என்றான் கபிரியேல்.

மரியாள் கபிரியேலிடம்,"இது எப்படி நடக்கும் எனக்கு இன்னும் மணமாகவில்லையே?" என்றாள். "தூய ஆவி உன்மேல் இறங்கும்; கடவுளின் அருள் உன்மேல் படரும். ஆகவே உன்னில் பிறப்பவரும் கடவுளின் மகன் எனப்படுவான்"பதிலளித்தான் கபிரியேல்,"மலடி என அழைக்கப்பட்ட உன் உறவினள் எலிசபெத்தும் வயதான காலத்தில் கருத்தரித்துள்ளாள்; அவளுக்கு இது ஆறாவது மாதம். கடவுளால் ஆகாதது எதுவுமில்லை".

"இதோ ஆண்டவரின் அடிமை; உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" எனப் பதிலளித்தாள் மரியாள்.

மரியாள் எழுந்து யூதாவின் நகரொன்றுக்குத் தன் உறவினள் எலிசபெத்தக் காணச் சென்றாள். மரியாள் எதிர்வந்ததும் எலிசபெத்தின் கருவிலிருந்தக் குழந்தை துள்ளியது.

எலிசபெத் குரலெடுத்துச் சொன்னாள்,"பெண்களில் பேறுபெற்றவள் நீ, உன் வயிற்றின் கனியும் பேறுபெற்றது. என் ஆண்டவரின் தாய் என்னைக் காணவர நான் என்ன பேறுபெற்றேன் உன் வாழ்த்து என் காதில் எட்டியதும் அன் வயிற்றில் குழந்தை சந்தோஷத்தில் துள்ளியது."

"என் ஆன்மா இறைவனை ஏறிப் போற்றுகிறது", மரியாள் பதிலுறுத்திப் பாடினாள்,"என் ஆவி இறைவனில் மகிழ்கின்றது. அவரின் அடியவர்களில் கீழானோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இனிவரும் தலைமுறையெல்லாம் எனைப் பேருடையாள் என்றிடும். வல்லமையுடையவர் மிகப்பெரும் செயலை எனக்குச் செய்துள்ளார் அவர் பெயர் புனிதப்படுத்தப்படுவதாக. தலைமுறை தலைமுறையாக, அவரை அஞ்சுபவர்களுக்கு அவர் கருணை புரிந்தார். அவரின் கரங்களின் வலிமையைக் காண்பித்துள்ளார். செருக்குற்றவரை சிதறடித்தார், வலிமைதங்கியவரை இருக்கைகளிலிருந்து வீழ்த்தினார், தாழ்த்தினார். பசியுற்றோருக்கு நற்பொருளளித்தார் செல்வந்தரை வெறுங்கயோடனுப்பினார்."

மரியாள் மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியபின் ஊர்திரும்பினாள்.

இளைஞன் ஜோசப் மரியாள் கற்பமாயிருப்பதை அறிந்தான். கவலை கொண்டான். நல்மனத்தோடு, ஊர்முன் அவளைக் கூட்டி அவமானப்படுத்தாமல் ஒதுக்கிவிட வேண்டும் என நினத்திருந்தான். ஜோசப்பின் கனவில் தேவதூதன் தோன்றி,"ஜோசப், தாவீதின் மகனே, நீ மரியாளை மனைவியாய் ஏற்றுக்கொள், அவள் கர்பமாயிருப்பது பரிசுத்த ஆவியின் அருளால். அவளுக்குப் பிறக்கும் மகனுக்கு இயேசு எனப் பெயரிடுங்கள் ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்." என்றார்.

ரோம அரசன் சீசரின் ஆணையின்படி ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பொன்று நடந்தது. ஜோசப்பும் மரியாளை அழைத்துக்கொண்டு கலிலேயாவிலிருந்து யூதாவிலிருந்த பெத்லேகம் எனும் ஊருக்கு கணக்கெடுப்பில் கலந்துகொள்ளும்படி வந்தார். விடுதிகளில் இடம் கிடைக்காததால் கால்நடைகளை கட்டிவைக்கும் தொழுவமொன்றில் தங்க நேர்ந்தது. அப்போது மரியாள் அழகிய ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.

தூரத்தில் கிடை போட்டிருந்த மேய்ப்பர்களுக்குத் தூதுவன் ஒருவன் தோன்றினான்."அஞ்சாதீர் இதோ நற்செய்தி ஒன்றை உங்களுக்குத் தருகின்றேன் தாவீதின் நகரத்தில் இன்று இயேசுக் கிறீஸ்து பிறந்துள்ளார் துணியில் பொதியப்பட்டு முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையைக் காண்பீர்கள்." என்றார்.

அப்போது, வானம் திறந்தது. வானகத்தில் தூதுவர்களின் பாடல் ஒலித்தது. "உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக. பூவுலகில் நல் மனத்தவருக்கு அமைதியும் ஆகுக."

அந்த தெவீகக் காட்சி அகன்றதும் மேய்ப்பர்கள் பெத்லகேமுக்குச் சென்று குழந்தை ஏசுவைக் கண்டனர்.

ஏரோது மன்னன் அரசாண்டுவந்தான் அப்போது. கிழக்கிலிருந்து மூன்று அரசர்கள் நட்சத்திரம் ஒன்று வழிகாட்ட எருசலேமுக்கு வந்தனர். ஏரோதை சந்தித்து,"யூதர்களின் அரசன் பிறந்துள்ளாரே அவர் எங்கே?" என்றனர். இதைக் கேட்ட ஏரோது கலங்கினான். தன் அவையின் அறிஞர்களை அழைத்து வினவினான். அவர்களும் "முன்னறிவிக்கப்பட்டபடி, பெத்லகேமில்." எனக் கூறினர்.

ஏரோது மூவரையும் அழைத்து,"போய் அந்தக் குழந்தையைத் தேடுங்கள். கண்டதும் எனக்கும் சொல்லுங்கள் நானும் அவரை வணங்கவேண்டும்." என்றான். ஏரோதின் அவையை நீங்கி வந்ததும் வெளியே நட்சத்திரம் மீண்டும் தோன்றி இயேசு இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தது.

கனவில் எச்சரிக்கப்படவே மூவரும் ஏரோதிடம் செல்லாமல் வேறுவழியே தங்கள் ஊரை நோக்கிப் பயணித்தனர்.

ஏரோது ஏமாற்றமடைந்தான்.பெத்லகேமில் இரண்டுவயதுக்குட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொல்லச்சொன்னான்.

தேவதூதனால் எச்சரிக்கப்பட்ட ஜோசப் மரியாளையும் குழந்தையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போனார். ஏரோதின் காலம் முடிந்ததும் திரும்பிவந்து நசரேத்தில் வாழலாயினர்.

(புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து கோர்க்கப்பட்டது)

| |
oooOooo
                         
 
சிறில் அலெக்ஸ் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |