டிசம்பர் 22 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : நல்லதும், கெட்டதும்!
- SP.VR. சுப்பையா [lala@touchtelindia.net]
| Printable version | URL |

Illaiyaraja"அமெரிக்காவிற்கு முதன் முதலாகச் சென்றேன் நியூயார்க்கில் விமானத்தை விட்டுக் கீழே இறங்கினேன். வானத்தைப் பார்த்தேன்.. செல்வச் சீமான்களின் பூமி என்பதற்காகச் சூரியன் அங்கே மேக்கப் போட்டுக் கொண்டு வரவில்லை. நம் ஊரில் தெரியும் அதே சூரியன்தான் அங்கேயும் தெரிந்தது."

இந்த அற்புதமான விமர்சனத்தை விமரிசித்தவர் யார் என்கிறீர்களா?

வேறு யாருமில்லை - ஆறறைக்கோடி தமிழ் மக்களின் இதயங் களைத்  தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா அவர்கள்தான் அப்படிச் சொன்னவர்.

சாதாரண மனிதர்களின் கண்களுக்குச் சொர்க்கபூமியாகத் தெரியும் அமெரிக்கா, ஆன்மீக ஞானமும், மனிதநேயமும், பரந்த உள்ளமும் கொண்ட இசைஞானியாரின் கண்களுக்கு அப்படித்தான் தெரிந்தது.

இரவும் பகலும், பிறப்பும் இறப்பும், உறவும் பிரிவும், இன்பமும் துன்பமும், குறையும் நிறையும் என்று எல்லாம் இரண்டறக் கலந்ததுதான் வாழ்க்கை!

எதில்தான் குறையில்லை? யாரிடம்தான் குறையில்லை? எந்த நாட்டில்தான் குறையில்லை?

குறைகளை மறந்துவிட்டு, அல்லது ஒதுக்கித் தள்ளிவிட்டு நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு,  வாழ்க்கையை அதன்  வழியி லேயே நாம் எதிர் கொண்டால், நம் வாழ்வில் எல்லா நாட்களுமே இனிய நாட்கள்தான்.

தன் நாட்டின் தூதுவராகப் பல நாடுகளிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அமெரிக்கர் ஒருவரைப் பிரபலமான அமெரிக்க நாளிதழின் நிருபர் தன் பத்திரிக்கையின் வார மலருக்காக நேர் காணல் செய்தார்.

அந்த நிருபரின் முதற்கேள்வியே மிகவும் சுவாரசியமாக இருந்தது "ஐயா, நீங்கள் பல நாடுகளில் பணி புரிந்திருக்கின்றீர்கள். மனித வாழ்க் கைக்கு எந்த நாடு உகந்தது? அதாவது எந்த நாடு நல்லநாடு? "

அனுபவம் மிக்க அந்தப் பெரியவர் பதில் உரைத்தார்:

"மனிதர்களில்தான் நல்லவர்கள், நல்லவர் அல்லாதவர்கள் என்று இரண்டு வகையினர் உண்டு. நாடுகளில் அப்படி ஒன்றுமில்லை! எல்லா நாடுகளும் நல்ல நாடுகள்தான்!"

"உங்கள் பதில் முற்றிலும் சரியான பதிலாக இல்லை ஐயா"

"உங்கள் கேள்வியும் முற்றிலும் சரியான கேள்வியாக இல்லை தம்பி" என்று அவர் ஒரு போடு போட்டார்

நேர் காணலிற்காக வந்தவர் விடவில்லை. அதே கேள்வியைச்  சற்று மாற்றிக் கேட்டார்.

"சரி இப்போது சொல்லுங்கள் எந்த மாதிரி வாழ்க்கை அமைந்தால் மனித வாழ்க்கை நன்றாக இருக்கும்? "

பெரியவர் சொன்னார். " வசிப்பதற்கு இங்கிலாந்தில் இருப்பது போன்ற வீடு. வாழ்க்கைத்துணையாக ஜப்பானில் இருப்பது போன்ற  மனைவி. வாய்க்கு ருசியான உணவிற்குச் சீனத்துச் சமையற்காரர். வேண்டிய செலவுகளுக்கு அமெரிக்காவில் கிடைப்பதைப்போன்ற சம்பளம். இந்த நான்கும் கிடைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்!"

"சரி மோசமான வாழ்க்கைக்கு எதை உதாரணமாகக்கொள்வது?"

அவர் வேறு எங்கேயும் போகவில்லை - அந்த நான்கு நாடுகளை வைத்தே அதையும் சொன்னார்.

"ஜப்பானில் இருப்பது போன்ற வீடு. அமெரிக்காவில் இருப்பது போன்ற மனைவி. வாய்க்கு ருசியில்லாத  உணவிற்குச் இங்கிலாந்து சமையற்காரர். அன்றாட செலவுகளுக்குக்கூட சிரமப்படுவதற்குச் சீனாவில் கிடைப்பதைப்போன்ற சம்பளம். இந்த நான்கும் கிடைத்தால் வாழ்க்கை நன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை! "

எல்லா நாடுகளிலுமே நல்லதும், கெட்டதும் கலந்துதான் இருக்கிறது.

என்பதை எடுத்துக்காட்டவே அவர் உண்மையை உள்ளபடி சொன்னார். மனதில் பதிந்துவிட்ட அதை உங்களுக்காக நானும் எழுதினேன்

இந்து மதமும் அதைத்தான் சொல்கிறது!

ஆமாம்! இரவும் பகலும், பிறப்பும் இறப்பும், உறவும் பிரிவும், இன்பமும் துன்பமும், குறையும் நிறையும் என்று எல்லாம் இரண்டறக் கலந்ததுதான் வாழ்க்கை!

மேலைநாடுகள் விஞ்ஞானத்தால் வளர்ந்து நிற்கின்றன. நம்நாடு மெய்ஞானத்தால் மேம்பட்டு நிற்கின்றது.

oooOooo
SP.VR. சுப்பையா அவர்களின் இதர படைப்புகள்.   இந்து மதம் என்ன சொல்கிறது ? பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |