Tamiloviam
டிசம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நடிகை லட்சுமி பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

அறிமுகம் தேவைப்படாத நடிகை திருமதி லட்சுமி. ஒரு காலத்தில் பெரிய திரையில் கலக்கியவர், தற்பொழுது சின்னத் திரையில் கலக்கிக் கொண்டு இருக்கிறார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். இவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்.

தமிழோவியம் :  எப்படி இருக்கிறீர்கள் மேடம். ?

பதில் :  நன்றாக இருக்கிறேன். இறைவனின் அருளாள் வாழ்க்கை நல்ல முறையில் ஓடிக் கொண்டு இருக்கிறது. மனசும் சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு அது தானே வேண்டும், இல்லையா?

தமிழோவியம் :- இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் திரைப்படத் துறைக்கு அதிகமாக வருகிறார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

பதில் :- ஒரு காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிக்க அதிகமாக வர யோசித்தார்கள். இப்பொழுது தயக்கமில்லாமல் வருகிறார்கள். அதற்கு இப்பொழுது பெண்களுக்கு அதிகமான சுதந்திரம் கிடைக்கிறது. சினிமாவில் நடித்தால் பெயர் கிடைப்பதோடு, பணமும் கிடைக்கும். அதனால் அதிகமாக நடிக்க வரலாம். நல்ல நடிகை என்றால் அவர்களை வரவேற்க திரையுலகம் தயாராகத் தானே இருக்கு. பெண்கள் திரைப்படத் துறைக்கு அதிகமாக வரவேண்டும் என்பது தான் எனது ஆசை.

தமிழோவியம் :- சென்னையில் நீங்கள் கலந்து கொண்ட பாரதியார் பிறந்த நாள் விழாவில் திரு.பாலச்சந்தருக்கு பாரதி விருது கொடுக்கப்பட்டதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?

பதில் :- பொருத்தமான ஆளுக்குத் தான் அந்த விருதை நண்பர் ரவி உள்பட்டோர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். நான் இன்று சினிமாத் துறையிலும், தொலைக்காட்சி துறையிலும் இருக்கிறேன் என்றால் அதற்கு எனது குருநாதர் பாலசந்தர் சார் தான் காரணம். அவர் ஒரு உதவும் மனப்பான்மை உடைய உயர்ந்த மனிதர். பெரிய திரையிலும் அவர் என்னை அறிமுகப் படுத்தினார். சின்னத் திரையிலும் என்னை அவர் தான் அறிமுகப் படுத்தினார். இரண்டிலுமே எனக்கு நல்ல பெயர் தான். இதனை தவிர ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேண்டும்.

தமிழோவியம் :- சின்னத் திரையில் நீங்கள் நடத்தும் அச்சமில்லை, அச்சமில்லை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி மனிதர்களின் சோகங்களை சொல்லி நிகழ்ச்சி நடத்துவதாக குற்றம் சொல்கிறார்களே?

பதில் :- யார் சொல்றாங்கனு எனக்குத் தெரியாது. ஆனால் அது நல்ல நிகழ்ச்சி;. ஏன் என்றால் பிரிந்தவர்களை சேர்த்து வைத்திருக்கிறோம். பிரிந்திருந்து சேர்ந்தவர்களையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். மனதர்கள் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் சகஜம் தான். அதனால் முடிந்த அளவு அன்பாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்பது தான் எனது கருத்து. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டங்க. அதனை புரிந்து கொள்வதில் தான் வெற்றி இருக்கிறது.

தமிழோவியம் :- தொலைக்காட்சிகளில் வருகின்ற நாடகங்களில் பெண்களை மோசமாக சித்தரிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- மொத்தமாக இந்த குற்றச்சாட்டை சொல்ல முடியாது. ஒரு சில சீரியல்களில் இருக்கலாம். மொத்தத்தையும் அப்படி சொல்ல முடியாது இல்லையா. பெண்களை ஆண்களை உயர்வாக, சிறப்பாக சித்தரிக்கின்ற நாடகங்கள் வரத் தான் செய்கிறது. எல்லா துறையிலும் நல்லது, கெட்டது இருக்கத் தானே செய்கிறது.

| |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |