Tamiloviam
டிசம்பர் 28 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : வாத்தியார்
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Arjun, Mallikaஅனாதை ஆசிரமம் நடத்தும் அர்ஜூன், நல்லவர்களுக்கு நல்லவனாகவும் ரவுடிகளுக்கு காலனாகவும் விளங்குகிறார். அர்ஜுன் கொல்வது ஊரையே கலக்கும் ரவுடிகள் என்பதால் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல ஒருவருமே முன்வருவதில்லை. தான் செய்யும் கொலைகளுக்கு சாட்சியே இல்லாமல் செய்யும் அர்ஜூனை கைது செய்ய சரியான தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார் அசிஸ்டெண்ட் கமிஷனர் பிரகாஷ்ராஜ். 

ரவுடிகளுக்கு எதிராக அர்ஜுன் எடுக்கும் இந்த அதிரடி நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது அம்மா சுஜாதா தன் மகளுடன் தனியே வாழ்கிறார். தாயின் மீதும் தங்கையின் அளவற்ற அன்பு செலுத்தும் அர்ஜுன் தன் தாயாருக்காக தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள மறுக்கிறார். ஆகவே அம்மா பிள்ளை இருவரிடமும் விரிசல் அதிகமாகிறது. ஒரு நாள் அர்ஜுனின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்து அவர் மேல் காதல் கொள்கிறார் மல்லிகா கபூர். அர்ஜுனின் மனதில் இடம் பிடிக்க வேண்டி அர்ஜுனின் அனாதை ஆசிரமத்தில் தானும் ஒரு அனாதை என்று பொய் சொல்லி சேர்கிறார் மல்லிகா. ஒரு கட்டத்தில் அர்ஜுன் இன்னொரு பெண்ணிடம் பழகுவதைப் பார்த்து அர்ஜூனை தவறாக நினைக்கும் மல்லிகாவுக்கு  அர்ஜுனின் ப்ளாஷ் பேக்கை சொல்ல ஆரம்பிக்கிறார் மணிவண்ணன்.

ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருக்கும் அர்ஜூன், தவறான காரியத்தில் ஈடுபடும் சக ஆசிரியர், பரீட்சை பேப்பரில் மதிப்பெண் போட சொல்லி மிரட்டும் மாணவர்கள் என கண்ணெதிரே நடக்கும் தப்பை தட்டி கேட்க ஆரம்பிக்கிறார். இதை அம்மா சுஜாதா கண்டித்தாலும் தொடர்ந்து தப்பு செய்பவர்களை தட்டிக்கேட்கிறார் அர்ஜுன். ஒருமுறை பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட விபத்தில் பல குழந்தைகள் கருகி சாக, அதற்கு காரணமானவர்களின் முகமூடியை கிழித்து தண்டனை வாங்கித் தருகிறார். இவரது நடவடிக்கையில் ஒரு அதிகாரி உயிரிழக்க 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுகிறார் அர்ஜுன். விடுதலையாகி வெளியே வருபவரை வெறுத்து ஒதுக்குகிறார் சுஜாதா. இந்நிலையில் சாதாரண வாத்தியாராக இருந்தால் மட்டும் இது போன்ற கொடுமைகளை தடுக்கமுடியாது என்று மணிவண்ணன் உசுப்பேற்ற, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு சமூக விரோதிகளுக்கு பாடம் கற்பிக்கும் வாத்தியாராக மாறுகிறார் அர்ஜூன்.

அர்ஜுனை கைது செய்யத் துடிக்கும் பிரகாஷ்ராஜ் அர்ஜுனை முன்னாள் முதல்வரும் மீண்டும் முதல்வராகத் துடிப்பவருமான நாச்சியாரிடம் ஒரு வேலைக்காக சிபாரிசு செய்கிறார். நாச்சியாரின் ஆட்கள் மாநிலத்தின் அனைத்து புண்ணியத்தலங்களிலும் குண்டு வைத்து குழப்பம் ஏற்படுத்த அர்ஜுன் மூலமாக முயல்கிறார்கள். அதை எதிர்த்து அவர்களைப் போட்டுத்தள்ளுகிறார் அர்ஜுன். இதனால் அவருக்கும் நாச்சியாருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட - ஒரு கட்டத்தில் அர்ஜுனைக் குத்தி உயிருடன் புதைத்துவிடுகிறார் நாச்சியார். அர்ஜுன் எவ்வாறு நாச்சியாரின் சதிகளை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுகிறார் - அர்ஜுனை பிடிக்க அலையும் பிரகாஷ்ராஜ் என்ன ஆனார் - அர்ஜுனின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்த சுஜாதா மீண்டும் அர்ஜுனுடன் சேர்ந்தாரா என்பதே மீதிக்கதை.

சமூக அக்கறையுடன் கூடிய கதையில் அர்ஜூன் அதகளம் செய்கிறார். அடிதடியில் மட்டுமல்லாது சமூக அவலங்களைக் கண்டு பொங்கும் காட்சிகளில் அவரது நடிப்பு அருமை. அம்மாவின் அன்பைப் பெற அர்ஜுன் துடிக்கும் காட்சிகள் சூப்பர்.. நல்லவரா, கெட்டவரா என்று இனம் பிரிக்கமுடியாத கேரக்டரில் போலீஸ் கமிஷனராக வரும் பிரகாஷ்ராஜ் வித்தியாசப்பட்டிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அருமை. மகனை முதலில் வெறுத்தாலும் பிறகு அவரது செயல்களைப் பற்றி ஊரார் புகழ்வதைப் பார்த்து மகனிடம் வரும் சுஜாதா மகனிடம் பேச முடியாமல் கலங்குவது அருமை.

படத்திற்கு பெரிய கலகலப்பூட்டுவது வடிவேலுவின் நகைச்சுவை. படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கிறார். கதையோடு ஒட்டிவருகிறது அவரது காமெடி. மல்லிகா கபூர் தன்னைத்தான் காதலிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு அவர் செய்யும் அலும்பல்கள் சூப்பர். அதிலும் பாடிகார்டுகளுடன் அவர் வரும் காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன. நாயகனை சுற்றி  வரும் வழக்கமான காதல் பொம்மையாக மல்லிகா கபூர். நடிக்க வாய்ப்பே அவருக்கு கிடைக்கவில்லை. வில்லன் நாச்சியார் வழக்கமான வில்லன்தான். விசேஷமாக ஒன்றுமே இல்லை.

இமான் இசையில் என்னடி முனியம்மா ஓக்கே.. பவர் பாஸ்ட்டின் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் பிரமாதம். அங்கங்கே சிலபல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் தொய்வில்லாமல் - பஞ்ச் டயலாக் கண்றாவிகள் ஒன்றும் இல்லாமல் படத்தை எடுத்ததற்காக இயக்குனர் வெங்கடேஷிற்கு பாராட்டுகள்.

வாத்தியாரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம்..

| | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |