டிசம்பர் 29 05
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின்கள்
- பத்மா அர்விந்த்
| Printable version | URL |

வைட்டமின் என்பவை நம் உடலுக்கு தேவையான மிக அத்தியாவசியமான அமின் என்ற வேதிப்பொருட்கள் இனத்த சேர்ந்தவை. (Vital+Amin). அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல ஒரு நாளைக்கு தேவையான அலவைவிட அதிகமாக உட்கொள்ளும்போது அது நச்சுப்பொருளாக மாறும்.

வைட்டமின்களில் தண்ணீரில் கரைபவை, கொழுப்பில் கரையக்கூடியவை என்று இரு வகை உண்டு. இதில் வைட்டமின் A, D, E, K இவை கொழுப்பில் மட்டுமே கரையக்கூடியவை. C, B, ஃபோலிக் அமிலம், நியாசின், பிரிடாக்சின், கோபாலமின் எனப்படும் பி12 இவை தண்ணீரில் கரையக்கூடியதாகும்.

Vitaminநிறைய வகையான உணவுகளை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடுகள் வருவதில்லை. ஆனால் அதிகம் காய்கறிகள் உண்ணாதவர்களுக்கு b12 குறைபாடு வரும். தாவர உண  வுகளை உண்பவர்கள் இதற்காக தனியாக மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல பழங்கள், காய்கறிகள் சேர்த்து கொள்ளாதவர்களுக்கும் குறைபாடுகள் வருவதுண்டு.

உடலில் வைட்டமின்களை சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது. எனவே தினமும் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அளவு அதிகமானால், சிறுநீரில் அவற்றை வெளியேற்றிவிடும். ஆனால் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நச்சாகி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். எனவே இவற்றை அதிகம் சேர்த்து கொள்வது தவறாகும். அதேபோல குடலில் புண், மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகமான க்ரான் நோய் இருப்பின் இத்தகைய வைட்டமின்கள் உறிஞ்ச படுவதில்லை. இதனாலும் வைட்டமின் குறைபாடுகள் வரலாம்.

முதலில் வைட்டமின் A பற்றி பார்ப்போம்.

வைட்டமின் A என்பது என்ன? இவை கண் பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பல  அமின்கள் சேர்ந்த ஒரு தொகுப்பு. உடலின் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கும் உதவுவதால், உடலின் எதிர்ப்பு சக்திக்கும் அவசியம். திசுக்களின் வளர்ச்சி, செல்கள் மேலும் பெருக , உடல் வளர்ச்சிக்கும் அவசியமான கொழுப்பில் மட்டுமே கரைய கூடிய அமின்களின் கூட்டு ரெடினால் என அழைக்கப்படும் வைட்டமின் A ஆகும்.

கண்களின் மேலே உள்ள படலம், மூச்சுகுழாய், மற்றும் சிறுநீர்க்குழாய், குடல் இவற்றின் திசுக்களின் மேலே உள்ள மெல்லிய திசுப்படலம் உருவாவதில் வைட்டமின்  A அ வ  சியம் அதிகம். அதேபோல மியுக்கஸ் படலம் சேர்ந்திருப்பதற்கு இவ்வைட்டமின் அத்தியாவசியமானது. இத்தகைய திசுப்படலம் இல்லை எனில் நுண்ணுயிர் கிருமிகள் உள்ளே நுழைந்து மேலும் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.

ரெடினால் பால், மிருகங்களின் கல்லீரல் இவற்றில் மிகுந்து காணப்படுகிறது. ரெடினாயிக் அமிலமாக இன்னும் சில வேறு ரெடினால் வேதிப்பொருளாக இயற்கையில் மாற்றம் அடைகிறது.

ரெடினால் அல்லது  வைட்டமின் A ஆ  க மாறும் முன் உள்ள வடிவம் (pre vitamin A) நிறம் அதிகம் உள்ள ஒரு பொருள். இது உடலில் வைட்டமின் A ஆ  க மாற்றப்படுகிறது. அமெரிக்காவில் 25% ஆண்களாலும் 34% பெண்களாலும் உட்கொள்ளப்படும் வைட்டமின் இந்த முன் வடிவத்தை (pre form) கொண்டிருக்கிறது. உணவில் சாதாரணமாக காணப்படுபவை காரட்டின், க்ரிப்டோசாந்தீன், காரட்டின், லைகோபீன் போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். இதில் காட்டின்எளிதாக வைட்டமின் A ஆக உடலில் மாற்றமடைகிறது.

இவை கண்பார்வைக்கும் மட்டும் அன்றி உடலின் உள்ள சில ஆக்சிஜன் அயனிகளின் எதிர்வினையை போக்கி உடல் சருமம் மற்றும் செல்களை காக்கவும் பயனாகிறது.

எந்த உணவுப்பொருட்களில் வைட்டமின் A இருக்கிறது? பொதுவாக பால், மிருகங்களின் கல்லீரல் இவற்றில் அதிகம்.முட்டை, காரட் போன்றவற்றிலும் செயற்கையாக செய்யப்பட்ட சில காலை உனவு செரியல்களிலும் இவை அதிகம். கீழே உள்ள அட்டவணை சில பொருட்களையும் அவற்றில் வைட்டமின் A யின் அளவையும் காட்டுகிறது.

புலால் உணவில் வைட்டமின் A அதிகம் உள்ளவை :

உணவு Vitamin A (IU)* %DV**
கல்லீரல் மாட்டிறைச்சி சமைத்தது, 3 அவுன்ஸ் 27,185 545
கல்லீரல், கோழி சமைத்தது 3 அவுன்ஸ் 12,325 245
பால் கொழுப்பு நீக்கியது, 1 கோப்பை 500 10
சீஸ், 1 அவுன்ஸ் 284 6
முழு பால் கொழுப்பு 4% 1 கோப்பை 249 5
முட்டை 1 226 5


வைட்டமின் A உள்ள சில தாவர உணவுகள் :

உணவு Vitamin A (IU)* %DV**
1 கோப்பை காரட் சாறு 22,567 450
வேகவைத்த காரட் ½ கோப்பை 13,418 270
உறையவைத்த கீரை ½ கோப்பை 11,458 230
Kale, frozen, boiled, 1/2cup 9,558 190
பச்சை காரட் (71/2 inches) 8,666 175
காய்கறி சூப் 1 கோப்பை 5,820 115
காண்டிலோப் 1 கோப்பை நறுக்கியது 5,411 110
பச்சை கீரை 1 கோப்பை 2,813 55
தோலுடன் உள்ள ஆப்ரிகாட் பழம் 1/2 கோப்பை 2,063 40
ஆப்ரிகாட் சாறு 1/2 கோப்பை 1,651 35
பப்பாளித் துண்டுகள் 1 கோப்பை 1,532 30
மாம்பழத் துண்டங்கள் 1 கோப்பை 1,262 25
ஓட்ஸ் 1 கோப்பை 1,252 25
பட்டாணி உறைய வைத்தது 1/2 கோப்பை 1,050 20
தக்காளி பழச்சாறு 1/2 கோப்பை 819 15
பீச் பழங்கள்  நறுக்கியது 1/2 கோப்பை 473 10
முழு பீச் 1 319 6
இனிப்புச்சுவை உள்ள சிவப்பு மிளகாய் 1 துண்டு 313 6


* IU = International Units.
** DV = Daily Value. தினமும் தேவையான அளவு ஒருநாளைக்கு குறிப்பிடப்பட்டுள்லது. %Dv என்பது ஒரு வேளை உனவில் எத்தனன சதவிகிதம் வைட்டமின் A இருக்க வேண்டும் என்பதாகும். சில உணவுகள் குறைந்த சடஹ்விகிதம் இருப்பினும் வைட்டமினுக்கு சிறந்த மூலப்பொருளாகும். Nutrient Database Web site: http://www.nal.usda.gov/fnic/cgi-bin/nut_search.pl.

கீழே உள்ள அட்டவணை நமக்கு ஒருநாளைக்கு எவ்வளவு வைட்டமின் A தேவை என்பதை குறிக்கும்.

வயது ஆண்டுகள்) குழந்தைகள்(mcg RAE) ஆண்கள்(mcg RAE) பெண்கள்(mcg RAE) கருவுற்ற பெண்கள் (mcg RAE) பால் கொடுக்கும் அன்னையர்(mcg RAE)
1-3 300 (1,000 IU) - - - -
4-8 400 (1,320 IU) - - - -
9-13 600 (2,000 IU) - - - -
14-18 - 900 (3,000 IU) 700 (2,310 IU) 750 (2,500 IU) 1200 (4,000 IU)
19+ - 900 (3,000 IU) 700 (2,310 IU) 770 (2,565 IU) 1,300 ()4,300 IU)


வரும் வாரம் வைட்டமின் A குறைபாடு ஏற்படுவதால் வரும் நோய்கள் அவற்றின் தன்மைகள் பற்றி பார்ப்போம்.

oooOooo
பத்மா அர்விந்த் அவர்களின் இதர படைப்புகள்.   உடல் நலம் பேணுவோம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |