டிசம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
சமையல்
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கவிதை : சொல்லத்தான் நினைக்குமென் ஆசைகள் : (நேரிசை ஆசிரியப்பா)
  - இராஜ. தியாகராஜன்
  | Printable version |

   

  சொல்லவே யென்மனச் சிந்தனை வானில்
  உள்ளதே விடைக ளில்லா ஆசைகளாம்!
   
  மாநில முழுதும் மலிந்த ஊழல்
  காணின் பதைத்துக் கொதிக் காமல்
  கண்மூடிக் கரங் குவிக்கு(ம்) ஈனமே
  மண்ணி(ன்) அடியிற் புதைத்து விட்டு;
   
  உள்ளி(ல்) ஒன்றும் உதட்டி லொன்றும்
  கள்ளமாய்ப் பேசிடும் கோணற் கட்சியின்
  சாதிகள் அரசியல் சாக்கடை புத்தியை
  வீதியில் நிறுத்தி வெட்டி விட்டு;
   
  நாட்டின் செல்வமாம் நங்கையர் பிறந்ததும்
  காட்டில் விளையும் கள்ளிப் பாலதால்
  கொல்லும் வீணரின் கொடும் வழக்கைத்
  தலையற நிச்சயந் தட்டி விட்டு;
   
  உலகில் காணும் வன்முறை வாசம்;
  உலவு கின்ற பிறமொழி நேசம்;
  ஓரின(ம்) அழிக்கும் மதவெறி நாசம்;
  வீரிய(ம்) அறுக்கும் போதைப் பாசம்;
   
  எல்லா வற்றையும் ஓட்டி விட்டு,
  நல்லிணக் கமது நம்முன் எதிரே
  ஒருநாள் தோன்று(ம்) என்றே
  விரிவாய்ச் சொல்லிடத் தானென் ஆசையே!

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |