டிசம்பர் 30 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
முத்தொள்ளாயிரம்
சமையல்
அறிவிப்பு
திரைவிமர்சனம்
கட்டுரை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  கட்டுரை : சுப்ரமணியம் சுவாமியுடன் ஒரு சந்திப்பு - தொடர்ச்சி
  - திருமலை ராஜன்
  | Printable version |

  விலைமதிப்பற்ற இந்தியக் கலைப் பொருட்கள் இத்தாலிக்குக் கடத்தப்பட்டனவா?

  சோனியா எப்படி, தான் படிக்காதப் படிப்பை, இல்லாத கல்வித் தகுதியை தேர்தல் ஆணையத்திடம் பொய்யாகச் சமர்ப்பித்தார் என்பதை ஆதரங்களுடன் வெளியிட்ட சுவாமி அடுத்து எறிந்த குண்டு, பழம் பெருமை உள்ள இந்தியப் பண்பாட்டுச் சின்னங்கள் பலவும் வெளிநாடுகளுக்கு சோனியாவின் நிறுவனம் மூலம் கடத்தப் படுகிறது என்பது. இது குறித்து சுவாமி ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அது பற்றிய விபரங்கள்:

  இந்தியச் சட்டங்களுக்கு சோனியா என்றுமே ம்ரியாதை அளித்தவரல்லர் என்கிறார் சுவாமி. 1974, நவம்பர் 19 அன்று சுவாமி பாராளுமன்றத்தில் அன்றயப் பிரதமர் இந்திராவிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். 'இத்தாலியக் குடிமகளான உங்கள் மருமகள், உங்கள் வீட்டின் முகவரியைக் கொடுத்து, ஓரியண்ட்டல் இன்ஷ¤ரன்ஸ் கம்பெனியின் ஏஜெண்ட்டாக தன்னைப் பதிவு செய்துள்ளார். ஒரு இத்தாலியர் அது போன்ற வேலையில் இருப்பது, இந்திய அந்நியச் செலவாணிச் சட்டத்திற்கு முரணானது.'. அந்தக் கேள்வியினால் மிகுந்த சங்கடத்துக்குள்ளான இந்திரா, அது தவறுதலாக நடந்து விட்டது என்றும், அந்த வேலையை சோனியா தொடரவில்லை என்றும் பாராளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். ஆனால் சட்டங்களை மதிக்காமல், இத்தாலியக் குடிமகளாக இருந்து கொண்டே, பல்வேறு பதவிகளை சோனியா வகிப்பது தொடர்ந்துள்ளது. 1977ல் உச்ச நீதிமன்ற நீதிபதி குப்தா தலைமையில் அமைக்கப் பட்டக் குழுவானது, சோனியாவின் மீது இந்திய அந்நிய செலவாணி சட்டம், மற்றும் பொருளாதாரக் குற்ற்வியல் சட்டங்களை மீறியதாகப் பல்வேறு குற்றசாட்டுக்களை சுமட்டியுள்ளது. இந்தியக் குடியுரிமை பெறாமலேயே, மாருதி நிறுவனத்தில் ஒரு இயக்குனராக, இந்தியச் சட்டங்களையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு விட்டு இயங்கியுள்ளார். 1980ம் ஆண்டு இந்திரா மீண்டும் பிரதமர் ஆனவுடன், சோனியா தன்னை வாக்களார் பட்டியலில் பதிவு செய்துள்ளார். இந்தியக் குடியுரிமை பெறாத ஒருவருக்கு ஒட்டுரிமை கிடையாது என்பதை அறிந்தும், இந்தியச் சட்டத்தை சட்டை செய்யாமல் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது பத்திரிகைகளில் பிரச்சினை ஆனவுடன், டெல்லி, தேர்தல் அதிகாரி அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளார். இருப்பினும் மீண்டும் 1982ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இத்தாலியக் குடிமகளான சோனியா பதிவு செய்துள்ளார். இந்தியக் குடியுரிமை பெறாமலேயே, வாக்களிக்க முயன்றுள்ளார். இது சட்டப் படி குற்றமாயினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படவேயில்லை. இந்தியச் சட்டங்களை மதியாத போக்கு, சோனியாவிடம் நெடுங்காலமாகவே காணப்படுகிறது என்கிறார் சுவாமி. தான் என்ன செய்தாலும் இந்த நாட்டின் கையாலாகாத சட்டங்களினால் தண்டிக்கப் படப் போவதே இல்லை என்பதை உணர்ந்து கொண்ட சோனியா, பிற்காலங்களில் துணிந்து வெளிப்படையாகவே பல சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு இந்தியாவைச் சூறையாடும் தொழிலைத் தொடர்ந்து செய்து வருகிறார் என்ற சுவாமியின் மிகக் கடுமையானக் குற்றசாட்டுக்களும் அதற்கு அவர் சமர்ப்பித்த ஆதாரங்களும், அதிர வைத்தன.

  எவ்வாறு பெரு நாட்டின் அதிபரான பூயுஜி மூரிக்கு எதிர்ப்பு வலுத்த பொழுது அந்த நாட்டிலிருந்து தப்பி, தனது சொந்த நாடான ஜப்பானுக்கு தான் கொள்ளையடித்த சொத்துக்களுடன் ஓடிச் சென்றானோ, அது போன்று சோனியாவும் இத்தாலிக்கு ஓடிச் செல்லலாம். அங்கு பிறந்ததால் அவருக்கு அந்த நாட்டின் குடியுரிமை என்றுமே செல்லும். இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிக்கும் நாடு இத்தாலி. ஆக சோனியா அந்த நாட்டின் குடியுரிமை வேண்டாமென சொன்னால் கூட, பிறப்பின் அடிப்டையில் அவருக்கு அந்த உரிமை என்றுமே உண்டு. அதை ரத்து செய்யவே இயலாது. பின்னாளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பாட்டால் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் பூஜி மோரி போல தனது பிறந்த நாட்டிற்கு ஓடிச் சென்று விட முடியும். 77 ஜனதா வெற்றி பெற்றவுடன் தன் கணவன் ராஜீவ், மற்றும் இரு குழந்தைகளுடன் இத்தாலிய தூதரகத்துக்கு ஓடிச் சென்று ஒளிந்தவர்தான் சோனியா என்ப்தை மறந்து விடக் கூடாது என்கிறார் சுவாமி.

  இந்தியாவில் எவ்வித சட்ட மீறல்களைப் புரிந்தாலும் தான் தண்டிக்கப் பட போவதில்லை என்பதை அறிந்து கொண்ட சோனியா, தொடர்ந்து சட்ட மீறல்களைப் புரிய ஆரம்பித்துள்ளார். அதன் தொடர்ச்சிதான், இந்தியாவின் பாரம்பரிய மிக்கக் கலைப் பொருட்களை இத்தாலிக்குக் கடத்திச் சென்று பிற நாடுகளில் உள்ள கலைப் பொருள் சேகரிப்பாளர்களுக்கும், பிற அருங்காட்சியகங்களுக்கும், பல மில்லியன் டாலர்கள் விலையில் விற்க ஆரம்பித்தது. அதற்காக இத்தாலியில் சோனியாவின் சகோதரிகள் இரு கடைகளை நடத்தி வருவதாக சுவாமி குற்றம் சாட்டுகிறார். இந்திராவின் காலத்திலும், பின்னர் ராஜீவின் காலத்திலும் தமிழகத்திலிருந்தும், பிற இடங்களிலிலுருந்தும் பல்வேறு விலைமதிப்பற்ற, பழம் பொருட்கள் இத்தாலிக்குக் கடத்திச் செல்லப் பட்டுள்ளன என்கிறார் சுவாமி. முக்கியமாக, வெளிநாடுகளுக்கு அனுப்பத் தடை செய்யப் பட்டுள்ள சிலைகள், பழங்கால நாணயங்கள், சாட்டோஷ் சால்வைகள், பிச்வானி ஓவியங்கள், இந்தியக் கடவுள்களின் சிலைகள் போன்ற பொருட்கள், சுங்கச் சோதனைகள் எதுவுமின்றி பெரும்பாலான நேரங்களில் இத்தாலிய விமானமான அலிட்டாலியா மூலமாகவும், ஏர் இந்தியா மூலமாகவும் கடத்தப் பட்டுல்ளன என்கிறார் சுவாமி. அவ்வாறு கடத்தப் பட்டப் பொருட்கள், முதலில் இத்தாலியின்  உள்ள இரு கடைகளில் விற்பனைப் பார்வைக்காக வைக்கப் பட்டுப் பின்னர், அதிக விலை கோருபவர்களிடம் விற்கப் படுவதாக சுவாமி கடுமையான புகார் ஒன்றை வைத்தார். சோனியாவின் சகோதரியான அனுக்ஷா எனப்படும் அலெஸ்ஸான்ரா மொயினோ வின்சி என்பவர், ரிவோல்ட்டா என்னும் இடத்தில் 'எட்ரிக்கா' என்னும் ஒரு கடையும், ஆர்பாசனோ என்ற நகரில் 'கணபதி' என்ற பெயரில் ஒரு பழம் பொருள் விற்பனைக் கடையும் நடத்தி வருகிறார். போலியான பில்களில் இங்கு முதல் விற்பனை செய்யப் பட்டு, பின்னர், லண்டனில் உள்ள புகழ் பெற்ற  ஏலக் கடைகளில் பல கோடிகளுக்கு ஏலத்துக்கு விற்கப் படுகின்றன என்கிறார் சுவாமி.

  இந்த ஏலங்களில் மூலம் திரட்டப் படும் பல மில்லியன் டாலர்கள் முதலில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் வங்கியிலும்,ஹான்காங்க் சாங்காய் வங்கியிலும் பின்னர் கே மான் தீவில் உள்ள பாங்க் ஆ·ப் அமெரிக்காவில் உள்ள ராகுல் காந்தியின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளில் போய் ஐக்கியமாகின்றன என்கிறார் சுவாமி.

  இது வரை பாரதா நாட்டின் சொத்துக்களை எண்ணற்ற கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர், முகது கோரி, நாதிர் ஷா, ராபர்ட் கிளைவ் என்று கணக்கிலடங்கா கொள்ளையர்களால் தொடர்ந்து கொள்ளையடிக்கப் பட்டது தேசம். ஆனால் அவர்கள் எல்லோரும் கொள்ளையடிப்பதுதான் தங்கள் நோக்கம் என்பதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுக் கொள்ளையடித்தார்கள். இது போல் தியாகி வேஷம் போட்டுக் கொண்டு கொள்ளையடிக்கவில்லை என்று உணர்ச்சி வசப்பட்டார் சுவாமி. இது குறித்து டெல்லி உயநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை சுவாமி தொடர்ந்து, மிகவும் மந்தமாக அந்த வழக்கு நடத்தப் பட்டு வருகிறது. குற்றசாட்டில் ஏதும் ஆதாரம் இருக்கிறதா என்பதை இன்டர் போல் அமைப்பைத் தொடர்பு கொண்டு கண்டறியுமாறு நீதிபதி உத்தரவிட்டதின் பேரில், சி பி ஐ இண்ட ர்போலைத் தொடர்பு கொண்டதாகவும், அவர்களும் இரு மிகப் பெரிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகவும் சுவாமி குறிப்பிட்டார்.

  இந்தக் கடத்தல் குற்றசாட்டின் தொடர்பாக சுவாமி இதுவரை அரசுக்கு எழுதியுள்ள கடிதங்களையும், அது தொடர்பாக இதுவரை எடுக்கப் பட்டுள்ல நடவடிக்கைகளையும், இந்தப் பழம் பொருட்கள் கடைகள் தொடர்பான செய்திகளையும், சுவாமி வழங்கினார். அந்த ஆவணங்களை இங்கு காணலாம்.

  (ஆவணங்கள் pdf கோப்பாக)

  (தொடரும்....)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |