Tamiloviam
டிசம்பர் 31 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : நடந்து வந்த பாதையிலே . .
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
  Printable version | URL |

மாதங்கள் ஒவ்வொன்றாய் பண்ணிரண்டும் ஓடி வருடத்தின் முடிவென்னும் மைல் கல்லில் நிற்கின்றோம். நடந்து வந்த பாதையிலே நாம் கடந்து வந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் அசைபோட்டுப் பார்க்கின்ற பொன்னான வேளையிது.

வருடத்தின் ஆரம்பத்திலே சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அந்த புரட்சிக்கு அமெரிக்க மக்கள் வித்திட்டார்கள். ஆம் ஒரு கறுப்பு இனத்தவரை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி ஒரு சாதனையை சரித்திரத்தின் ஏட்டினிலே தமதாக்கிக் கொண்டார்கள் அமேரிக்க மக்கள்.

வருவாரா? வரமாட்டாரா? என்ற பல வாத, பிரதிவாதங்களுக்கு மத்தியில் தேர்தலிலே வெற்றியீட்டி முதலாவது கறுப்பு அமெரிக்க ஜனாதிபதி என்னும் பெருமையை திரு. பராக் ஓபாமா அவர்கள் 2009ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தமதாக்கிக் கொண்டார்.

எதிர்பார்ப்புக்களின் உச்சத்தில் உள்ளே நுழைந்தவரின் முன்னால் பூதாகரமாக நின்றது உலகப் பொருளாதார வீழ்ச்சி என்னும் பயங்கரமான பிரச்சனை. அதை அவர் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதிலேயே அவரது திறமையை அளக்க சர்வதேசமும் ஆவலோடு காத்திருந்தது.

அமேரிக்கா மீது மற்றைய நாடுகள் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றும் முகமாக தான் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக ஓபாமா அறிவித்தார்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி கொடுத்த தாக்கத்தை சமாளிப்பதற்காக பல நிதி சம்பந்தமான பொருளாதார சீராக்கலை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஜரோப்பிய ஆசிய நாடுகள் மேற்கொண்டன.

இங்கிலாந்துப் பிரதமர் கோர்டன் பிரவுண் அவர்களது செல்வாக்கு மேலும் மோசமாக வீழ்ச்சியடைந்தது. ஆனாலும் பொருளாதரத்தைச் சீராக்கி நாட்டை மெம்படுத்துவதே தனது தலையாய நோக்கம் என்று அறைகூவல் விடுத்து தொடர்ந்தும் பல சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார் இங்கிலாந்துப் பிரதமர்.

ஜனவரி மாத முடிவில் ஜஸ்லாந்து வங்கிகள் முருவடைந்தன அதைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் தனது பதவியை உடனடியாக ராஜினாமாச் செய்தார்.

ஈழத்திலே நடந்த பல பயங்கரமான நிகழ்வுகள் ஈழத்தமிழர்களின் சரித்திரத்தையே மாற்றியமைக்கும் அளவிற்கு தாக்கங்களைக் கொடுத்தது.

பொருளாதரத் தாக்கத்தினால் பல நாடுகளில் பலர் தமது வேலைகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வங்கிகள் பல அவர்களது அரசாங்கங்களினால் மீட்கப்படவேண்டிய நிலைக்கு வந்து தேசிய உடமைகளாகியது.

உலகப்பொருளாதாரத் தாக்கங்களின் விளைவுகள் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்தியத் தேர்தலிலே பலரின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக இந்திரா காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றியீட்டி மீண்டும் அரசமைத்தது.

ஈராக் யுத்தம் முடிவுக்கு வந்ததைப் போலவொரு தோற்றத்தை 2009ம் ஆண்டின் ஆரம்பம் ஏற்படுத்தி இருந்தாலும், அங்கு இடம்பெறும் குண்டுவெடித் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

இங்கிலாந்து இராணுவம் தனது படைகளின் பெரும்பகுதியை ஈராக்கிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. ஈராக் நாட்டின் பாதுகாப்பை அவர்களின் இராணுவத்திடம் கையளிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என அமெரிக்காவும், பிரித்தானியாவும் வலியுறுத்தியிருக்கின்றன.

ஆனாலும் 2009ம் ஆண்டின் முக்கிய பிரச்சனையாக ஆவ்கானிஸ்தான் முன்னிற்கிறது. ஈராகிலிருந்து வாபஸ் வாங்கப்பட்ட இங்கிலாந்து இறாணுவம் ஆவ்கானீஸ்தானுக்கு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆவ்கானிஸ்தான் யுத்தம் பிரித்தானிய மக்களின் மனதில் இன்னமும் மிகவும் குழப்பமாகவே இருக்கிறது. அங்கு நடைபெரும் யுத்தத்தின் காரணம் இன்னமும் மக்களுக்குச் சரியாகத் தெளிவு படுத்தப்படாத நிலை போலவே தென்படுகிறது.

பன்றிக்காய்ச்சல் கொடுத்த பதட்டம் அனைத்து நாடுகளிலும் எதிரொலித்தது. இங்,கிலாந்து பன்றிக்காய்ச்சல் தடுப்புக்கான மருந்தைத் தயாரித்து மிகப்பெரிய அளவில் மக்களுக்கு தடுப்பூசி மூலம் செலுத்தியது.

இதுவரை சுமார் 105 பிரித்தானிய இராணுவவீரர்கள் ஆவ்கானிஸ்தானில் உயிர்துறந்திருக்கிறார்கள். இவர்களின் மரணம் பிரித்தானிய மக்களின் மனதில் இவ்யுத்தததைப் பற்றிய கண்ணோட்டத்தை எதிர்மறையாகப் பாதித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டியுள்ளது.

ஈராக், ஆவ்கானிஸ்தான் போரை ஓபாமா அரசி முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்னும் நம்பிக்கையில் இருந்தவர்களுக்குப் பேரிடியாக மேலும் 30000 அமெரிக்க ராணுவ வீரர்களை ஆவ்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய நிலையில் தானுள்ளதாக கூறிய ஓபாமாவின் கூற்று அமைந்தது.

மற்றுமோர் துயரகரமான நிகழ்வாக அவுஸ்திரேலிய சரித்திரத்தில் கண்டிராத வகையில் இடம்பெற்ற காட்டுத்தீ பரவலினால் 173 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

யூன் மாதம் இடம் பெற்ற எயார் பிரான்ஸ் விமான விபத்தில் அனைத்துப் பயணிகளும் உயிரிழந்தார்கள்.

ஆகஸ்ட் மாதம் 1988ம் ஆண்டு ஸ்கொட்லார்ந்தில் இடம் பெற்ற அமெரிக்க விமான வெடிகுண்டிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட விபிய நாட்டுப் பிரஜையை விடுவித்த சம்பவம் இங்கிலாந்தில் மிகப்பெரிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பி ஏற்கனவே செல்வாக்கிழந்திருந்த பிரதமரை மேலும் சங்கடத்துள் தள்ளியது.

செப்டெம்பர் மாதத்தில் அமெரிக்காவிலுள்ள பிட்ஸ்பேர்க் எனும் இடத்தில் கூடிய G-20 நாடுகள் தாம் உலகளாவிய வகையில் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதன் மூலம் 2008ல் இடம்பெற்ற உலகப் பொருளாதாரச் சரிவைப் போன்றதொரு சரிவு எதிர்காலத்தில் ஏற்படாதிருக்க வழிவகுக்கப் போவதாக பிரகடனப்படுத்தினார்கள்.

டிசம்பர் மாதம் டென்மார்க்கிலே நடைபெற்ற காலநிலை மாற்றத்துக்கான ஜக்கியநாடுகள் சபையின் கூட்ட முடிவில் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமை பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஆக மொத்தம் மிகவும் பாரதூரமான பல நிகழ்வுகளைத் தாங்கிய 2009ம் ஆண்டு ஒருவாறு தனது இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டது.

நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் களைப்போடு திரும்பிப் பார்த்து 2010 ஜ நோக்கி ஒரு புதுவிதத் தெம்புடம் பெருமூச்சு விடுவது தெரிகிறது.

oooOooo
                         
 
சத்தி சக்திதாசன் அவர்களின் இதர படைப்புகள்.   அடடே !! பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |