Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கறுப்பு வெள்ளை கனவுகள் - க்ரைம் கதை
- சத்யராஜ்குமார்
வேண்டாம். நான் சமூகக் கதை படிக்கிறேன்   இல்லை, இல்லை. சயன்ஸ் கதை வேண்டும்.  

ஓசை எழுப்பாமல்தான் உள்ளே நுழைய நினைத்தான். பாமரேனியன் இருட்டில் அவனை அடையாளம் தெரியாமல் வள்ளென்று குரைத்து விட்டது.

லைட் வெளிச்சம்.

வெப்பமாக அவனைப் பார்த்த பின் - உள்ளே மறைந்தார் அப்பா. இப்போதெல்லாம் அவர் எதுவும் கேட்பதில்லை. மவுனமாய் உமிழும் அந்த வெறுப்பான பார்வைக்கு பதில் முன்பைப் போல் கத்தி விடலாம்.

இருளின்
இட்டு நிரப்பாத
இடைவெளிகளில்
எல்லையற்று நீளும்
வெள்ளை நிழல்களின்
மவுன சப்தங்களை
மொழிபெயர்த்த பின்புதான்

பின்புதான்... பின்புதான்...

சமயத்தில் அவனுக்குள் புரண்டு வரும் கவிதை அந்தப் பார்வையில் அப்படியே பொசுங்கிப் போய் விடும். சத்தம் கேட்டு - கூந்தலை முடிச்சுப் போட்டபடியே லேகா வநதாள். " அண்ணா, வந்து சாப்பிட்டுப் போய்ப் படு. "

மணி பதினொன்றாகப் போகிறது. அவள் மட்டும் தூங்க மாட்டாள். அவன் சாப்பிடாமல் அவளுக்குத் தூக்கம் வராது. இந்த வீட்டில் அவனைப் புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அவள் மட்டுமே.

தினமும் அவன் முன்னால் ஐந்து நிமிஷமாவது உட்கார்ந்து, " அண்ணா, இன்னிக்கு நீ எழுதின கவிதையைச் சொல்லு. "

விழிகள் விரிய ஆர்வமாய் அவன் சொல்லும் கவிதையைக் கவனிப்பாள். " இந்த இடத்தில் அழகை-ங்கிற வார்த்தைக்குப் பதிலா எழிலை-ன்னு போட்டா இன்னும் நல்லாருக்குமோ? " நச்சென்று சில சமயம் திருத்தங்கள் சொல்வாள்.

காதல் கவிதைகளை அவன் வாசிக்கும்போது - அவள் கன்னத்து மேடுகள் பிங்க் சாயம் தீற்றிக் கொள்ளும். அதை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டே - " படவா அண்ணா, இப்படி மாய்ஞ்சு மாய்ஞ்சு வர்ணிக்கறியே. யார் அவ? " என்பாள். " ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நீ மிகப் பெரிய கவிப் பேரரசு ஆகத்தான் போறேண்ணா. " என்று சத்தியம் செய்வாள்.

அவனிடம் ஏதாவது லேசான மாறுதல் என்றாலும் அதைக் கவனிக்கும் முதல் ஆள் அவளாகத்தான் இருக்கும். யோசனையோடு சாதத்தில் கைகளை அளைந்து கொண்டிருக்கும் அவனிடம் என்னவோ பிரச்சனை என்பதை உணர்ந்து கொள்ள அவளுக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை.

இருந்தாலும் நேரடியாக, " என்ன பிரச்சனை அண்ணா? " என்று கேட்டு விட மாட்டாள். அவனிடம் எதைக் கேட்டால் தானாகவே விஷயம் வரும் என்று அவளுக்குத் தெரியும்.

" அண்ணா, உன்னோட கவிதை நோட்டு எங்கே? புதுசா ஏதாச்சும் எழுதியிருப்பியோன்னு காலைல இருந்து அதைத் தேடிட்டிருக்கேன். "

இந்த மாதிரி ஒரு கேள்விக்காகக் காத்திருந்தது போல உஷ்ணமாய்ப் பீறிட்டான். " கவிதையாவது, மண்ணாவது. இனிமே நான் எழுதப் போறதில்லை. எனக்குள்ள இருந்த சொப்பனாதித்யன்ங்கற கவிஞன் இன்னிக்கு சாயந்தரம் ஆறு மணி நாற்பது நிமிஷத்தோட செத்துட்டான். "

சற்றே திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் லேகா. " ஏன் இப்படி அபத்தமா பேசறே? அப்பா உன்னைத் திட்டினப்பவெல்லாம் நான் கவிதை எழுதறதை யாரும் தடுக்க முடியாது. நான் கவிதை எழுதாத நிமிஷம் ஒண்ணு இருக்குன்னா அது நான் உயிரோட இல்லாத நிமிஷம்ன்னு அவர் கிட்டே வீராவேசமா சண்டை போட்டே. "

" வாஸ்தவம்தான். ஆனா எல்லாம் முடிஞ்சு போச்சு. இந்த மெட்டீரியலிஸ்ட்டிக் உலகத்தில் கவிதையைப் புரிஞ்சிக்கிறவனும் இல்லை. கவிதை எழுதறவனைப் புரிஞ்சிக்கிறவனும் இல்லை. எதுக்காக நான் மெனக்கெட்டு எழுதணும்? "

" நான் இல்லையா? என்னை மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க. அவங்களுக்காக நீ எழுதணும். "

" உன்னை மாதிரிப் பத்துப் பேருக்கு என்னை மாதிரி கவிஞன் தேவையில்லை. மானே, தேனேன்னு எதுகை மோனை பண்ணிட்டிருந்தாப் போதும். அதுக்கும் இப்ப வழி இல்லை. எந்த நிமிஷமும் என்னைத் தேடி போலிஸ் வரலாம் லேகா. "

கடைசியாய் அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள். " போலிஸா? " அப்போதுதான் கவனித்தாள். அவன் சர்ட்டின் மேல் ஆங்காங்கே ரத்தத் தீற்றல்கள். அவள் உதடுகள் உலர்ந்து போயின. அவளையறியாமல் குரல் நடுங்கியது. " என்ன ஆச்சுண்ணா? "

" மாதவனை அடிச்சு நொறுக்கிட்டேன். ஆள் இப்ப ஆஸ்பத்திரில எமர்ஜென்சி வார்டில் கிடக்கறான். "

" என்ன பிரச்சனை? அவனை ஏன் அடிச்சே? "

" அவனோட பணத் திமிரை என் கிட்டே காட்டினான். நான் அவனுக்கு என்னோட கவிதைத் திமிரைக் காட்டிட்டேன். பிரேமா என்னோட கவிதைகளை ரசிக்கிறது அவனுக்குப் பொறுக்கலை. ஹைஸ்கூல் படிக்கிறப்ப இருந்து அவளை சைட் அடிக்கிறானாம். அவளுக்குப் பிடிச்ச மாதிரி லவ் கவிதைகள் எழுதிக் குடு. ஒரு கவிதைக்கு ஐநூறு ரூபா தரேன்னான். எனக்குக் கோபம் சுர்ன்னு ஏறிடுச்சு. காசுக்காக எழுத்தை விக்கிற இலக்கிய விபச்சாரின்னு நினைச்சிட்டியான்னு கேட்டு அவனைப் போட்டுப் புரட்டி எடுத்துட்டேன். ஆஸ்பத்திரில இருந்து அவன் உயிரோட திரும்புவானான்னு சந்தேகமா இருக்கு லேகா. "

" மை குட்னஸ். உனக்கு ஏண்ணா இவ்வளவு கோபம். சே. "

" கோபம்தான் என்னைக் கவிதை எழுத வெக்குது லேகா. கோபக்காரனாலதான் கவிதைக்காரனாகவும் இருக்க முடியும். "

அப்போது வாசலில் றீச் என்று டயர் தேயும் சப்தம்.

லேகா ஜன்னலில் எட்டிப் பார்த்தாள்.

போலிஸ் ஜீப்.

 
மாதவன் இறக்க விரும்புவோர் இங்கே தொடரலாம்   மாதவன் பிழைக்க விரும்புவோர் இங்கே தொடரலாம்  
  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |