தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : சொன்னது யார் ?
-

 

"நாவலைக் கண்டு நான் மிரண்டு ஓடுகிறவன். அது என்னவோ மிகப்பெரிய அசுர-தேவ சாதனை என்று உள்ளூர எண்ணி, சிறந்த நாவன்ல் ஒன்றைப் படிக்க நேர்ந்தால் அவ்வாசிரியனைக் கண்டு பிரமித்துப்போகிறவன். நாவல் என்ற பேரில் அரைவேக்காட்டில் ஒன்றை அவித்துப்போட்டுத் தோற்றுப் போனேன் என்ற நினைப்போடு ஒதுங்கிக் கிடந்தவன் (நாவல் விஷயத்தில்). தமிழில் வரும் நாவல்களில் ஓரிரண்டைப் படித்தும் கூட நானும் ஓர் அரை வேக்காட்டு நாவலை எழுதிச் சலிப்புற்ற பின்னும் கூட நாவலின்மீது எனக்கிருக்கும் பிரேமை குறையவில்லை. என்றாவது ஒருநாள் தமிழில் இணையற்ற நாவலொன்றை நான் சிருஷ்டித்தே தீருவேன் என்று பேராசைப்படும் குணம் வளர்ந்து வருகிறது சமீப காலமாய் ."


மேற்கண்ட வாக்கியங்களை சொன்னது ஒரு பிரபல எழுத்தாளர்.  யார் தெரிகிறதா பாருங்கள்...

விடை :  Press  CTRL + A to see the answer.

எழுத்தாளர்  ஜெயகாந்தன்,  1961

Copyright © 2005 Tamiloviam.com - Authors