தமிழோவியம்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் B1 C12 H17 CIN4OS
- பத்மா அர்விந்த்

வைட்டமின் B1 தயமின் என்று அழைக்கப்படுகிறது. 1920 இல் கண்டறியப்பட்ட இந்த வேதிப்பொருள் முதன் முதலில் உணவில் சேர்க்கப்பட்ட வைட்டமின் ஆகும்.

தயமின் உடலின் பல செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு மண்டலம், தசைகளின் செயல்பாடுகள், நரம்புகளுக்கு இடையிலான மின்னணு தொடர்புகள், பலவித புரதங்களின் வேலைப்பாடுகள், கார்போஹைடிரேட் செரிமானம், மற்றும் வயிற்றுள் சுரக்கும் ஹைடிரோ குளோரிக் அமிலம் ஆகியவை அனைத்தும் திறம்பட நடக்க தயமின் அவசியம். உடலில் சேர்த்துவைக்க இயலாதாகையால் 14 நாட்களுக்கு ஒருமுறை உடலுக்கு தயமின் அதிகம் தேவைப்படுகிறது.

பெரிபெரி எனப்படும் வைட்டமின் நோய் குறைபாடு பல வகையான நரம்பு தசை இவற்றை செயலிழக்க செய்துவிடும். உடல் மிண்ணனு ஓட்டம் தடைப்பட்டு, செரிமானம் பாதிக்கப்பட்டு, நரம்பும் தசைகளும் ஒத்து வேலை செய்ய முடியா நிலை வரும்.

பெரி பெரி யில் மூன்று வகை உண்டு. உலர்ந்த அல்லது வறண்ட பெரி பெரி உடலில் தசைகளுக்கு அருகே உள்ள நரம்புகளை பாதிக்கிறது. நீர்ப்பசை உள்ள பெரி பெரி என்பது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. மூளையை பாதிக்கும் பெரி பெரி மூன்றாவது வகை பெரி பெரி ஆகும். இதனால் மறதி குழப்பம் போன்றவை ஏற்படும்.

தயமின் குறைபாடு குறைவான தயமின் உட்கொள்ளுதலால் ஏற்படுகிறது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு தயமின் குறைபாடு ஏற்படும். தயமின் அழிக்க கூடிய எதிர்வினையாற்றும் பொருட்களை சேர்த்துக்கொள்வதாலும் குறைபாடு வரக்கூடும்.

தயமின் உட்கொள்ள வேண்டிய அளவு: உணவில் தயமின் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள்: மாட்டிறைச்சி, ஈஸ்ட், துவரம் பருப்பு, மற்ற பருப்புவகைகள், பால், கொட்டைகள், ஓட்ஸ், ஆரஞ்சு பழங்கள், அரிசி, கோதுமை, மற்றும் தோல் நீக்காத தானியங்கள் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.  வளர்ந்த நாடுகளில் அரிசி மாவு போன்றவை வாங்கும் போது தயமின் சேர்த்த பொருட்களாக வாங்குவதும் அவசியம். தயமின் 5 முதல் 500 மில்லிகிராம் அளவுள்ள மாத்திரைகளாக கிடைக்கிறது. மாத்திரைகள் உண்டால் 20 முதல் 120  நிமிடத்துள் இரத்தத்தில் தயமின் அ  ளவு  அதிகரிக்கிறது.வாய்வழி ஒருநாளைக்கு அதிக அளவில் 15 மில்லிகிராம் உறிஞ்சப்படுகிறது. இதனை அதிகரிக்க விரும்பினால் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ளும் தையாமினை நான்கு பாகமாக பிரித்து உண்ண வேண்டும். நல்ல சிறுநீரகங்களின் செயல்பாடு இருந்தால் ஒரு நாளைக்கு 10% தயமின் வெளியேற்றப்படுகிறது.

18 வயதுக்கு மேலான ஆண்கள்  ஒரு நாளைக்கு 1.2 மில்லிகிராம், பெண்கள்  1.1 மில்லிகிராம் அளவு  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க உணவு நிறுவனம் நிர்ணயித்திருக்கிறது. குறைவான தயமின் குறைபாடு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முதல் 30 மில்லிகிராம் அளாவு தயமின் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  மது அருந்துபவர்கள், நரம்பு மண்டல நோய் உள்ளவர்கள் இன்னும்  அதிகமாக உட்கொள்ள வேண்டும். மது அருந்துவதை நிறுத்தும் முயற்சியில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 1 கிராம்  இரத்தத்தில் நேரடியாக சிறைகள் மூலம் செலுத்தப்பட வேண்டும்.

செரிமானத்தில் குறைபாடு உள்ளவர்கள் : தயமின் செரிமான குறைபாடு  இருந்தால் ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டிய தயாமினை 4 முறையாக பிரித்து உட்கொள்ளுதல் வேண்டும். லே நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 600 மில்லி கிராம் தயமின் வரை உட்கொள்ள வேண்டியதாக பரிந்துரைக்கப்படுகிறார்கள். 10 முதல் 20 மிலி கிராம் தயமின் தீவிரம் அல்லாத நரம்பு மண்டல கோளாறு உள்ளவர்களுக்கும் 30-40 மில்லி கிராம் தயமின் அதிக தீவிரம் நரம்பு மண்டல நோய் உள்ள வர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதம் வரை: 0.2 மில்லிகிராம்/ஒரு நாளைக்கு தேவை படும். 3 வயது வரை உள்ள குழந்தைகள் நாளொன்றுக்கு 0.5 மில்லிகிராம் அ  ள  வு தயமின் தேவைப்படுகிறது. அதன் பின் 9 வயது வரை நாளொன்றுக்கு கிட்டதட்ட 0.9 மில்லி கிராம் தேவையாய் இருக்கிறது. 18 வயது வரை 1.2 மில்லி கிராம் தயமின் தேவை ஏற்படுகிறது.

தயமின் தண்னீரில் கரைந்து விடுவதால், சிறு நீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. எனவே அதிக தயமின் நச்சு விளைவுகள் ஏற்படுவது இல்லை.

சிலருக்கு தயமின் ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு, தோல் தடிப்பு ஏற்படக்கூடும். இவர்கள் உடனே மருத்துவரை நாடுதல் அவசியம்.

மருந்துப்பொருட்களுடன் தயமின் வினை புரிதல்: வயிற்றில் சுரக்கும் அதிக அளவு அமிலத்தை தடை செய்ய எடுத்துக்கொள்ளும் மருந்துகளுடன் தயமின் வினை புரிவதால், அதன் பயன் குறைகிறது.

சிறுநீரை அதிக அ  ளவில் வெளியேற்றும் மருந்துகள் (Diuretic) தயாமினையும் வெளியேற்றி விடுவதால், தயமின் குறைபாடு ஏற்படலாம்.

புகை பிடிப்பதால் உட்செல்லும் நிகோடின் தயாமினை செயல் இழக்க செய்கிறது. சில பாக்டீரியாக்களுடன் எதிர்வினை புரியும் மருந்துகள் தயாமினை செயல் இழக்க செய்துவிடும்.

இந்த மருந்துகளை அவசியம் எடுத்து கொள்பவர்கள் தயமினை கூடுதலாக உனவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

No More Coffeeஉணவு பொருட்களுடன் தயமின் எதிர்வினை : அதிக காப்பி தேநீர் பருகினால் அதில் உள்ள டானின் என்ற வேதிப்பொருள் தயாமினுடன் வினை புரிந்து ஒரு வித செயல் அற்ற பொருளாக்கி விடுவதால் தயமின் குறைபாடு ஏற்படும். வளார்ந்த நாடுகளில் அதிக அ  ளவில் தயாமினும் வைட்டமின் C யும் சேர்த்து கொள்வதால் இந்த பிரச்சினை இல்லை.

அதிக கார்பண்டை ஆக்ஸைடு கொண்ட சில பானங்கள் அருந்துவதால் தயமின் செயல் இழந்து விடும்.

கடல் வாழ் உணவு (நண்டு, ஷ்ரிம்ப்) செலரி, ஆர்ட்சோக் ஆகியவை தயமினை செயல் இழக்க செய்துவிடுவதால், தயமின் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இரத்த ஓட்டம் சீராக இருக்கவும், நினைவுத்திறன், தசைகளில் வல்லமை இருக்கவும் தயமின் அவசியம். எனவே அதிக B1 இருக்கும் உணவு பொருட்களை சேர்த்து கொண்டு சிக்கலான நோய்கள் வருவதை தடுக்க முயற்சிக்கலாம்.

காபி | வைட்டமின் | சோடா

Copyright © 2005 Tamiloviam.com - Authors