தமிழோவியம்
போட்டி : குறுமொழி & நெடுங்காதல்
-

காதல் பலவகைப்படும்.

சங்க காலத்துக் காதல் இலக்கணத்துக்குட்ப்பட்டது. வெண்பா, கழிநெடிலடி ஆசிரியப்பா, என்று அளவை போட்டு முறைப்பெயராக எழுதுவார்கள். இலக்கியத்தரமாய் புரியாத வார்த்தைகள் கொண்டிருத்தல் தெரிநிலை வினை.

அடுத்த காதல் புதுக்கவிதை. நிறைய நிறுத்தற்குறிகள்........... சொல்லாத சொற்களை fill in the blanks போட்டுக் கொள்ளும்.

சமீப காலம் வரை C++ நிரல் எழுதுவது போல் பொருட்களின் குணாதிசயங்களை ஹைகூவாக்கி காதல் சொன்னார்கள். ஆனால், ஹைக்கூவிற்கும் வில்லன்கள் வந்தார்கள். முதல் வரியில் இம்புட்டு ஓசை; மூன்றாம் வரியைத் தாண்டி நான்கு ரன்களுகு செல்லக் கூடாது என்று கட்டளைகள் வந்து கொண்டிருக்கிறது.

காதல் போன்ற கட்டுபாடுகளற்ற மகிழ்ச்சிக்கு ஏற்ற உருவம் எஸ்.எம்.எஸ். (SMS).  பேருந்து நிறுத்தத்தில் Oviyaகாத்திருக்கும் போது தோன்றியதை உடனடியாக தோழிக்கு அனுப்பலாம். பின்னால் முடிச்சுப் போட்ட துப்பட்டாவுடன் ஸ்கூட்டியில் சிக்னலுக்காக நிற்கும்போது மனதில் உதிப்பதை தோழருக்கு அஞ்சல் செய்யலாம். நண்பர்கள் அனுப்புவதை மேம்படுத்தி, ·பார்வார்ட் செய்யலாம்.

நவீன காலத்துக்கு குறுமொழியே எளிதாக விளங்குவதால், காதலர் தினத்தை முன்னிட்டு தமிழோவியமும் 'குறுமொழி & நெடுங்காதல்' போட்டிக்கு தங்களின் எஸ்.எம்.எஸ். காதல்மொழிகளை அனுப்புமாறு அழைக்கிறது.

எஸ்.எம்.எஸ்.ஸின் மூர்த்தி சிறிதாக இருந்தாலும், எளிதாக அனுப்புநரை சென்றடைவதால் கீர்த்தி பெரிது. எனவே, நீண்ட காவியங்களைத் தவிர்க்கவும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களின் பெயரும் மின்னஞ்சல் முகவரியையும் அவசியம் இணைத்து மறுமொழியாக இங்கே இடுவதுதான்.

சிறந்த மூன்று குறுமொழிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பின்னூட்ட வேண்டிய கடைசித் தேதி: காதலர் தினம் - ·பெப்ரவரி 14, 2006 நள்ளிரவு (இந்திய நேரம்). ஒருவரே எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் உதிர்க்கலாம்.

அனுப்புங்க... அனுப்புங்க...
அனுப்பிகிட்டே இருங்க

 

(மேலே உள்ள 'ஓவியா' படத்தினை வரைந்த ஓவியர்  நியுஜெர்சியை சேர்ந்த : அனுஷா சுப்பிரமணியம்)

SMS | போட்டி | காதலர் தினம் | ஓவியா

Copyright © 2005 Tamiloviam.com - Authors