தமிழோவியம்
அரும்பு : சுரேஷின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.  அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)

முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


சுரேஷ்

Suresh N2005 ஆம் வருடம் முதல் எனது எண்ணங்களை எழுதி வருகிறேன்.
 
கீற்றில்  "அம்மா" என்ற எனது கவிதை முதன் முதலாய் வெளியானது.
 
அன்று எனது நண்பர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தேன்.

அதன் சுட்டி இதோ :
 
http://keetru.com/literature/poems/suresh.php
 
ஒரு தாயின் மனநிலையைச் சொல்லும்  பதிவாக இது இருந்தது. எல்லோராலும் பாராட்டப்பட்டது. 2005 முதல் இன்று வரையான இரண்டரை  வருடங்களில் இது வரை ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். முன்னனி இணையதள இதழ்களிலும் தமிழோசைப் பத்திரிகையிலும், குங்கும், மங்கையர் மலர் அமுதசுரபி, பெண்ணே நீ, ராணி போன்ற முன்னனி வார/மாத இதழ்களிலும் எனது கவிதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இருப்பினும்....
 
உண்மை சொல்கிறேன்!
 
கீற்று வெளியிட்ட "அம்மா" என்ற கவிதையைக் கண்ட நாள் என் மனதில் விழுந்த அதே சந்தோஷ மலர்கள், ஒவ்வொரு முறையும் வெளியாகும் எனது கவிதைத் தொகுப்புகள் மற்றும் அவ்வப்போது வெளியாகும் எனது படைப்புகள் இவை கண்டு என் மனதை தொடர்ந்து ஆனந்தத்தால் நிறைக்கிறது. மீண்டும் எழுத ஊக்கம் தருகிறது சரி... இனி நீங்கள் குறிப்பிட்டது போல், தாக்கப்பட்ட கிழிக்கப்பட்ட ஒரு கவிதையைப் பற்றி சொல்கிறேன்.
 
பலரால் பாராட்டப்பட்டு சிலரால் அதிகமாக தாக்கப்பட்டு கிழிக்கப்பட்ட என் கவிதை " காதலே என் கணவனே" என்ற ஒரு கவிதை.
 
ஒரு பெண்ணின் மனநிலையை கண்ணீரோடு சொல்லும் ஒரு கவிதையிது.  இதை எனது வலைப்பூவில் கண்டு பலர் பாராட்டினார்கள்.  அன்புடன் குழுமம் அதன் கொள்கையின் அடிப்படையில் எனது சம்மதத்தோடு எடுத்துவிட்டார்கள்.
இந்த கவிதையின் சில பத்திகளை மட்டும் தேர்வு செய்து, தமிழோவியமும், மங்கையர் மலரும் சிபியும் வெளியிட்ட போது சிலரால் காயப்பட்ட அந்த கவிதை மருந்திடப்பட்டு  எனது அடுத்த கவிதைத் தொகுப்பில் முழுவதுமாய அரங்கேற்றம் செய்ய உள்ளது.
 
தமிழோவியம் எனது படைப்புகளுக்கு எப்பொழுதும்  முக்கியத்துவம் தந்து தொடர்ந்து வெளியிடுவது நான் தொடர்ந்து எழுத ஒரு முக்கிய காரணம் என்ற உண்மையை இங்கு நெஞார்ந்த நன்றியுடன் பதிவு செய்கிறேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors