தமிழோவியம்
கட்டுரை : தை 1 தமிழ் புத்தாண்டு = திருவள்ளுவர் ஆண்டு
-

இனி தமிழர் திருநாளாம் தை மாதம் முதல் தேதியைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடுவது என தமிழக அரசு தீர்மானித்து இருக்கிறது.  இந்தத் தீர்மானம் 1921-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் திரு. மறைமலையடிகளார் தலைமையில் சுமார் 500 தமிழரிஞர்கள் கலந்து கொண்டு தீர்மானித்து இருக்கிறார்கள். இந்தத் தீர்மானத்திற்குத் தமிழக அரசு இப்போது செயல் வடிவம் கொடுத்து இருக்கிறது. தமிழுக்கென்று ஓர் ஆண்டு வேண்டுமென்று என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் இந்தச் செயல்பாடு.இது திருவள்ளுவர் ஆண்டு என அழைக்கப்படும். திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்தாரென்று முடிவு செய்யப்பட்டு அதிலிருந்து ஆண்டுகள் கணக்கிடப்படும். 

நாம் இப்போது கணக்கிடப்படும்  பிரபவ, விபவ என்னும் தமிழ் ஆண்டு சூரியனின் இயக்கப்படி கணக்கிடப் படுகிறது.  இது சௌரமானம் என்றழைக்கப்படும்.  அதாவது வான மண்டலத்தில் சூரியன் மேஷத்தில் பிரவேசிக்கும் நேரமே புத்தாண்டு பிறக்கும் காலமாகக் கணக்கிடப்படுகிறது.  மேஷத்தில் ஆரம்பித்து மீனத்தில் சஞ்சாரத்ததை சூரியன் முடிப்பதற்கு 365 1/4 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகிறது.  இதைத்தான் ஒர் தமிழாண்டு என்கிறோம்.  இத்தமிழாண்டு 12 மாதங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் சித்திரை, வைகாசி  என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது.  அதேபோல் மாதம் என்பது சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் கால அளவேயாகும்.  அதனால்தான் சில மாதங்களுக்கு 32 நாட்கள் இருக்கின்றன. ஆகவே தற்போது நாம் கடைப்பிடித்துவரும் ஆண்டு, மாதங்கள் எல்லாம் வானவியலை அடிப்படையாகக் கொண்டவை. It has a strong astronomical base.

இந்தத் திருவள்ளுவர் ஆண்டுக்கு மாதங்கள் கணக்கீடு இருக்கிறதா? எனத் தெரியவில்லை.  தனித் தமிழாண்டு வேண்டும் என்பதைப்போல் தனித் தமிழ் மாதங்கள் வேண்டாமா? வேண்டுமென்றால் அந்த மாதங்களுக்குப் பெயர் வைக்க வேண்டாமா? எப்படிக் கணக்கிட்டுப் பெயர் வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

சூரியன் பொங்கலன்று மகர ராசியில் பிரவேசம் செய்கிறார்.  ஆக ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு ஆகும்.

ஆக திருவள்ளுவர் ஆண்டும் "சௌரமானக்" கணக்குப்படிதான் அமைந்து இருக்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors