தமிழோவியம்
கட்டுரை : மீண்டும் தேர்தல்
- திருமலை கோளுந்து

சென்னை மாநகராட்சிக்கு மீண்டும் தேர்தல் என்ற செய்தியைக் கேட்டு தி.மு.க. கூட்டணி மகிழ்ச்சி அடைந்திருக்கிறதோ, இல்லையோ அ.தி.மு.க. மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அக்கட்சியினர் சொல்கின்றனர். வருமான வரித்துறையினரின் ரைடில் சிக்கி தவிக்கும் விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் ஆகியோர் அ.தி.மு.க.விற்கு சாதகமாக செயல்பட போவதாகவும் தகவல்கள் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. மீண்டும் நடைபெறுகின்ற தேர்தலில் தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரை மாற்றினால் தான் தேர்தலில் பங்கு பெறுவோம் என  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தாலும், இத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பங்கு பெறுவது உறுதி என்று அக்கட்சியின் முக்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தை பிறந்தால், வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் ஒரு வழி பிறந்துள்ளது. அடாவடி, அராஜகம், ரவுடியிஜம், கள்ளஓட்டில் வெற்றி பெற்று கவுன்சிலர், மேயர் பதவிகளை வகித்து வந்த தி.மு.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது. நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய 99 வார்டுகளில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்யச் சொல்லி இருக்கிறார். 98 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ஒருவர் மறுத்திருக்கிறார். மீண்டும் தேர்தலில் வென்று வெற்றிக் கொடி நாட்டுவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் சொல்வது நடக்கப் போவது கிடையாது. கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பலத்த கூட்டணி பலம் இருந்தும்  தி.மு.க.வால் சென்னையில் வெற்றி பெற முடியவில்லை. சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற நிலையை அ.தி.மு.க. தகர்த்து எறிந்தது. இதனை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் மக்களே மேயரை தேர்வு செய்யும் முறையை மாற்றி, கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்வு செய்வார்கள் என்று அறிவித்தனர். அந்தக் கவுன்சிலர்கள் தேர்விலும் தோல்வி அடைந்தாலும் அடைந்து விடுவோம் என்று பயந்து ரவுடிகளுக்கு கருப்பு பேண்ட், வெள்ளைச் சட்டையை கொடுத்து ஓட்டு போட வந்தவங்களை அடித்து விரட்டி ஓட்டுப் போட்டு வெற்றி பெற்றனர். இதனைப் பற்றி விவாதிக்கக் கூடிய செழியன், மாலன், துக்ளக் சோ, ராம் போன்றவர்களுக்கு அனுமதி கொடுக்காமல் அவர்களையும் காவல் துறையை விட்டு விரட்டி அடித்தனர். இந்த அராஜகத்தை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்த வழக்கில் தான் தற்பொழுது நீதி கிடைத்திருக்கிறது. தற்பொழுது நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. கண்டிப்பாக பங்கு பெற, தற்போதைய தமிழக தேர்தல் ஆணையரை மாற்றச் சொல்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார். இது கண்டிப்பாக நடக்கும். இந்த முறை நடக்கின்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக அதிக இடங்களில் வெற்றி பெறும். ஏனெனில் சென்னை வாக்காளர்கள் படித்தவர்கள். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று பார்த்து ஓட்டுப் போடுவார்கள். அதே சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் தொண்டர்கள் இந்த முறை அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருப்பார்கள் என்று எங்களுக்கு நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தி.மு.க. மீது அதிருப்தியில் இருந்த அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் செய்த அராஜகத்தைப் பார்த்து மேலும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த கோபத்தை மீண்டும் நடைபெறும் தேர்தலில் காட்டுவார்கள். கடந்த முறை 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அ.தி.மு.க. கூட்டணி இந்த முறை குறைந்தது 20 இடங்களை பிடிக்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அ.தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள். இதே கருத்தை ம.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியைச் சேர்ந்தவர்களும் நியாயப்படுத்துகிறார்கள்.

இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் இரண்டு நீதிபதிகளும் வேறு மாதிரியான தீர்ப்புகளைச் சொன்னார்கள். அதில் ஒரு நீதிபதி தேர்தலை மீண்டும் நடத்துங்கள் என்று சொன்னதை ஏற்று, ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் சொல்வதை தட்டக் கூடாது என்பதற்காகத் தான் மேயர், உள்ளிட்ட கவுன்சிலர்களை முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்ய சொன்னார். அதன் படி அனைவரும் செயல்பட்டுள்ளனர். சென்னையில் பிப்ரவரி மாதம் நடக்க உள்ள உள்ளாட்சி மறு தேர்தல் மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஆளும் கட்சியான தி.மு.கவிற்கு மிக முக்கியமான ஒன்று. இந்தத் தேர்தலில் சிறு தோல்வி அடைந்தாலும் அது அடுத்த தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனை எல்லாம் தி.மு.க. கூட்டணி உணர்ந்தே இருக்கிறது. அதனால் தான் மீண்டும் கூட்டணியோடு களம் இறங்க உள்ளோம். கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற 4 வார்டுகளிலும் தி.மு.க. வெற்றி பெறத் தான் போகிறது. சென்னையில் மீண்டும் தனது கட்சி  வெற்றி பெறாது என்பதை உணர்ந்து தான் முன்னாள் முதல்வர் தேர்தல் ஆணையரை மாற்றுங்கள், சென்னை மாநகர கமி~னரை மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். அப்படி மாற்றவில்லை என்றால் அ.தி.மு.க. தேர்தலில் பங்கு பெறாது என்று வேறு சொல்லி இருக்கிறார். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழக தேர்தல் ஆணையரை இன்றைய தி.மு.க. அரசு மாற்றாது. அதே சமயத்தில் இந்தத் தேர்தலை நியாயமாக நடத்தி, அரசின் மீதும், காவல் துறை மீதும் விழுந்த கரையை அகற்ற முயற்சி செய்வோம். இன்றைய தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் செயல்படுகிறது. அதே சமயத்தில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் சிறந்த முதல்வராக நான்காவது இடத்தை கருணாநிதி பெற்றுள்ளார். அவரை கடைசி இ;டத்தை பிடித்த ஜெயலலிதா இன்று குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார். npயலலிதா முதலில் தனது கட்சியில் கோ~;டி சேர்த்து மோதிக் கொண்டிருக்கும் தினகரனையும், மகாதேவனையும் சமதானம் செய்து வைத்துவிட்டு நாட்டு அரசியலுக்கு வரட்டும். ஜெயலலிதாவுக்கு வை.கோவும் ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கிறார். இது எல்லாம் வெத்து அரசியல் என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள.;

சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தலை வைத்து தி.மு.க.வும், அ.தி.மு.க.,வும் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். இனியும் செய்வார்கள். நமக்கு அது தேவையே இல்லை. ஆனால் 2006ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தல் எவ்வளவு கீழ்த்தரமாக, அராஜகமாக, அசாதாரணமாக நடந்தது என்பதைக் கண்டு நடுநிலையாளர்கள் கண்டு மனம் வெதும்பினார்கள். ஜனநாயக நாட்டில் இதனைப் பற்றி உள் அரங்கில் பேசுவதற்கு கூட அனுமதி கிடையாது என்று சொல்லி ஜனநாயகத்தை இன்றைய முதல்வர் கருணாநிதி அசிங்கப்படுத்தினார். இதனை எல்லாம் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தெளிவாக தனது தீர்ப்பில் கூறி இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கைபடி மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரை நீக்கினால் தான் இந்த மறு தேர்தல் சரியாக நடக்கும். தப்பாக, ஒரு தலைப்பட்சமாக முடிவு எடுத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயத்தை தேர்தல் ஆணையர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றால் தற்போதைய ஆணையராக இருக்கும் சந்திரசேகரை நீக்க வேண்டும். ஒரு நீதிபதி தனது அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததை பொருட்படுத்தாமல், மற்றொரு நீதிபதி தனது அரசுக்கு எதிரான தீர்ப்பை சொன்னதற்காக மேயர், கவுன்சிலரை ராஜினாமா செய்ய வைத்த முதல்வர் இந்த ஆணையரையும் மாற்றினால் மேலும் அவர் மீது இருக்கும் மதிப்பு அதிகரிக்கும். அதனை அவர் செய்வார் என என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறோம். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று. வெற்றியும், தோல்வியும் அடைபவர்கள் அதனை எந்த வித வருத்தமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் படி தேர்தலை நடத்த வேண்டும். அது தான் ஒரு தேர்தலின் வெற்றி. அதனை விட்டு விட்டு நடுநிலை பத்திரிக்கைகளும், பத்திரிக்கையாளர்களும், சிந்தனையாளர்களும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் படி தேர்தல் நடந்தால் அது திட்டமிடப்பட்ட தேர்தல். அது என்றும் ஜனநாயக தேர்தலாக காட்சி கொடுக்காது என்கிறார் ஹிந்து பத்திரிக்கையின் லெட்டர் டூ எடிட்டர் பகுதிக்கு அடிக்கடி கடிதம் எழுதும் ஜெயராமன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors