தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : ஹைக்கூகூகூகூ.......
- அரை ப்ளேடு

இன்று பொங்கல் தினம்.
பானை பொங்கி வழிந்தது.
காய்ச்சப்பட்டது கள்ளச் சாராயம்.

விவசாயமின்றி வறண்ட பூமி.
வேடிக்கை பார்த்தாள் முதிர் கன்னி.
நடந்தது கழுதைகளின் கல்யாணம்.

காகிதக் கப்பல்கள் மிதந்தன.
விளையாடிக் கொண்டிருந்தன குழந்தைகள்.
மழையில் வீட்டுக்குள் புகுந்த நீர்.

கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும்
திரையில் தலைகோதிய நாயகன்.
வழுக்கை தலையில் இரவல் முடி.

நான் பார்க்காத ஃபிளைட் இல்லை.
பெருமையாய் சொன்னான் அவன்.
விமானதளத்தை ஒட்டிய சேரிவாசி.

நீயே வைத்துக்கொள் வேண்டாம்
வீசியெறிந்த பிச்சைக்காரனும் தலைகுனிந்த நானும்.
தரையில் ஒரு ரூபாய். பணவீக்கம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
முழங்கிய அரசியல்வாதி. ஒலித்தது செல்போன்.
டாடி ஹவ் ஆர் யூ ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors