தமிழோவியம்
போட்டி : காதலர் தின போட்டி
-

SMS Loveகாதல் போன்ற கட்டுபாடுகளற்ற மகிழ்ச்சிக்கு ஏற்ற உருவம் எஸ்.எம்.எஸ். (SMS).  பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது தோன்றியதை உடனடியாக தோழிக்கு அனுப்பலாம். பின்னால் முடிச்சுப் போட்ட துப்பட்டாவுடன் ஸ்கூட்டியில் சிக்னலுக்காக நிற்கும்போது மனதில் உதிப்பதை தோழருக்கு அஞ்சல் செய்யலாம். நண்பர்கள் அனுப்புவதை மேம்படுத்தி, ·பார்வார்ட் செய்யலாம்.

நவீன காலத்துக்கு குறுமொழியே எளிதாக விளங்குவதால், காதலர் தினத்தை முன்னிட்டு தமிழோவியமும் 'குறுமொழி & நெடுங்காதல்' போட்டிக்கு தங்களின் எஸ்.எம்.எஸ். காதல்மொழிகளை அனுப்புமாறு அழைக்கிறது.

எஸ்.எம்.எஸ்.ஸின் மூர்த்தி சிறிதாக இருந்தாலும், எளிதாக அனுப்புநரை சென்றடைவதால் கீர்த்தி பெரிது. எனவே, நீண்ட காவியங்களைத் தவிர்க்கவும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களின் பெயரும் மின்னஞ்சல் முகவரியையும் அவசியம் இணைத்து மறுமொழியாக இங்கே இடுவதுதான்.

சிறந்த மூன்று குறுமொழிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். பின்னூட்ட வேண்டிய கடைசித் தேதி: காதலர் தினம் - பிப்ரவரி 14, 2006 நள்ளிரவு (இந்திய நேரம்). ஒருவரே எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் உதிர்க்கலாம்.

அனுப்புங்க... அனுப்புங்க...
அனுப்பிகிட்டே இருங்க

Copyright © 2005 Tamiloviam.com - Authors