தமிழோவியம்
அரும்பு : குகனின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.  அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)

முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


குகன்


Guhanஅது வரை அவமானங்கள் மட்டும் சந்தித்த நான், முதல் முதலாக ஒரு வெற்றியை சந்தித்தேன். என் கல்லூரி நண்பர்கள் பார்வையில் ஒரு ஏமாளியாக, எதிர்த்து பேச தெரியாதவனாக... இன்னும் உண்மையை சொல்லப்போனால் ஒரு கோமாலியாக தான் இருந்தேன். ஒரு முறை தற்கொலை முயற்சிக் கூட ஏடுப்பட்டதுண்டு. நண்பர்களை நம்பி சில சமயம் பணத்தை கூட இழந்தேன். யார் அனுதாபத்திற்காகவும் சொல்லவில்லை. ஒரு சிறு வெற்றி நாம் பெற்ற பல தோல்விகளை மறக்க செய்யும் என்பதற்கு உதாரணம் நான். என் விரக்தி, என் தோல்வி, என் அவமானம் எல்லாம் மாற்றியது என் 'உறங்காத உணர்வுகள்' - கவிதை நூல் வெளியீடு தான்.

எங்கள் கல்லூரி செய்தி பலகை தவிர என் கவிதைகள் இது வரை எதிலும் அரங்கேறியதில்லை. அப்படி இருக்க, எடுத்தவுடனே ஒரு கவிதை தொகுப்பு போடும் போது அடுத்த தோல்விக்கு நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். காரணம், ஒவ்வொரு முறை அந்த தோகுப்பை நூலாக்க நினைக்கும் போதெல்லாம் ஒரு தடங்கல் வந்துக் கொண்டே இருக்கும். 2001 யில் கவிதைகள் சரியில்லை என்று ஒரு பதிப்பகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.

என் இறுதி முயற்சியாக.... என் 'உறங்காத உணர்வுகள்' கவிதை தொகுப்பை நம்பியிருந்தேன். கவிதை நூல் நன்றாக இருந்தால் பாராட்டு, இல்லை என்றால் இன்னொரு தோல்வி... அவ்வளவு தான். அப்பா படிக்க கொடுத்த பணத்திலும், மாதம் என் செலவுக்கு கொடுக்கும் பணம் எல்லாத்தையும் மிச்சம் பிடித்து என் கல்லூரி இறுதி ஆண்டில் 'உறங்காத உணர்வுகள்' நூல் வெளியிட்டேன். அதுவும் கல்லூரி செலவவிலே....!!

'CompSem-2003 ' - கம்ப்யூட்டர் டிப்பார்ட்மென்ட் நடத்தும் நிகழ்ச்சியில் என் கல்லூரியின் துணை வேந்தர் வெளியிட்டார். என் கல்லூரி நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது. பலர் என்னை பாராட்டினார்கள். அதெல்லாம் விட என்னை அவமான படுத்தியவர்களே என் நூல் வெளியிடும் பொது கைதட்டியது தான்.

என் தாய் மொழி தெலுங்கு. பிழையில்லாமல் தமிழ் எழுத கூட வராது. என் கல்லூரி நாட்களில் நான் ஒரு எழுத்தளராக வேண்டும் நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால், நான் கல்லூரி படிப்பு முடிக்கும் போது... எனக்கும் எழுத தெரியும் காட்டினேன். அதன் பிறகு சில இணையதளங்களும், சிற்றிதழ்களும் என் படைப்பை பிரசுரம் பொது சிலரின் மோதிர விரலால் குட்டு வாங்கி என் எழுத்துக்களை மெரு எற்றிக் கொண்டேன்.... இன்னும் மெரு எற்றிக் கொண்டு தான் இருக்கிறேன். நான் இன்னும் தொடர்ந்து எழுத உத்வேகமாய் இருந்தது என் படைப்பு நூலான 'உறங்காத உணர்வுகள்' தான்.

நான் போக வேண்டிய தூரம் அதிகம். கற்று கொள்ள வேண்டியதும் அதிகம். எல்லாம் முடியும் என்ற மன  உறுதியோடு பயணம் செய்கிறேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors