தமிழோவியம்
கவிதை : சில நிமிஷங்கள்
- சத்தி சக்திதாசன்

 

நீ நடந்து வர
நான் தொடர்ந்து வர
கலந்திருந்த சூழல்
சில நிமிஷங்கள் தான் !

உன் ஆடை தழுவிய
இனிய தென்றலோடு
கலந்திருந்தது
சில நிமிஷங்கள் தான் !

மழைவெள்ளம் உன் பாதம் தொட்டு
மெதுவாக என் பாதம் தழுவிச்
சென்றது கூடச்
சில நிமிஷங்கள் தான் !

உன் முகம் பார்த்து
தரைபார்க்கும் - நிலா
எனைப் பார்க்கும் நேரங்கள்
சில நிமிஷங்கள் தான் !

ஆனால் என்னவளே !

அந்தச்
சில நிமிஷங்கள் நான்
உயிர் வாழ்ந்தால்
உயிர் சிறக்குமென்பேன்

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors