தமிழோவியம்
சமையல் : சைனீஸ் சாட்
- ஜெயந்தி நாராயணன்

சைனீஸ் சாட்

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ்       - 150 கிராம்
கேரட்        - 2
குடமிளகாய்  - 1
கோஸ் - 100கிராம்
ஸ்பிரிங் ஆனியன் - 2
சோயா சாஸ்    - 1 1/2 டீஸ்பூன்
தக்காளிசாஸ்    - 4 டீஸ்பூன்
வறுத்தவேர்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
மிளகுபொடி     - 1/2 டீஸ்பூன்
உருளைகிழங்குப ¢ங்கர் சிப்ஸ் - 100கிராம்
கொத்துமல்லி      - 1/4கப் பொடியாக அரிந்தது
சமையல் எண்ணை  - 100கிராம்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில்      - 2டீஸ்பூன்

செய்முறை : கடாயில் எண்ணைவிட்டு காய்ந்ததும்(சமையல் எண்ணை) நூடுல்ஸை நொறுக்கி எடுத்து பொரித்து எண்ணை வடித்து வைக்கவும். கேரட்,கோஸ்,குடமிளகாய் இவற்றை மெல்லியதாக நீளவாட்டில் அரிந்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு சூடானதும் காய்கறிகளை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இத்துடன் மிளகுபொடி,சோயாசாஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கிவைக்கவும். கிண்ணங்களில் வறுத்த நூடுல்ஸ் மற்றும் 4 உருளைகிழங்கு சிப்ஸ் ,2டீஸ்பூன்பொடித்தவேர்கடலை போட்டு அதன்மேல் வதங்கிய காய்கறிகளை பரவலாக தூவவும். இதன் மேல் பொடிதாக அரிந்த கொத்துமல்லி,ஸ்பிரிங் ஆனியன்தாள்களைத் தூவி சிறிது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாற மிகவும் சுவையாக இருக்கும். இதையே மொத்தமாகவும் கலந்து எடுத்தும்  பரிமாறலாம். குழந்தைகள் மிகவும் விரும்பும் சாட் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.நியூட்ரி டோஸ்ட்

தேவையானபொருட்கள்

பிரெட் துண்டுகள் -  6
நட்ஸ் - 3 டேபிள் ஸ்பூன்
தேன்  - 3 டீ ஸ்பூன்
வெண்ணை - 4 டீ ஸ்பூன்
பேரீட்ச்சை சிரப்  - 4 டீ ஸ்பூன்

செய்முறை :  சாதரணமாக சாண்ட்விச் செய்யும்போது காய்கறி வைத்து தயாரிப்பது வழக்கம். இதிலிருந்து மாறுபட்டு இந்தமுறையில் தயாரித்து தரலாம். பிரெட்துண்டுகளில் முதலில் ஒருபக்கம் 1/2டீஸ்பூன் தேன் தடவி அதன் மேல் சிறிது நட்ஸ் தூவி வைக்கவும். மற்றொரு துண்டில் 1/2டீஸ்பூன் வெண்ணைதடவி அதன் மேல் 1/2டீஸ்பூன் பேரீட்ச்சை சிரப்பை தடவி தேன் தடவிய துண்டின்மேல் வைத்து மூடி பிறகு லேசாக டோஸ்டு செய்து குழந்தைகளுக்கு தர சத்தாண சாட்விச் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத்தரும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors