தமிழோவியம்
நையாண்டி : சிரிங்க.. இல்லாட்டி..
-

என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது !

'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'

'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் !'

ooOoo

'அந்தப் பல் டாக்டர் வீட்ல ஏன் ரெய்டு நடக்குது ?'

'வருமானத்துக்கு அதிகமா 'சொத்தை சேர்த்துட்டாராம் !'

ooOoo

'என்னடா...இந்தத் தியேட்டர்ல ஒவ்வொரு ஷோ முடிஞ்சதும் கூட்டறாங்க ?'

'படம் ரொம்ப குப்பையாம் !'

ooOoo

'டார்லிங்! நமக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு கோயில்ல நேத்து பிரார்த்தனை பண்ணிகிட்டேன் பலிக்குமா?'

'அம்பது சதவிகிதம் பலிச்சிடுச்சி! வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க!'

ooOoo

உங்களுக்கு தலைவலி இருக்கா ?

இருக்கு டாக்டர் ! வெயிட்டிங் ரூம்ல..

ooOoo

'டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....

காட்டுங்க உங்க பர்ஸை !'

ooOoo

ஜெயிலில்........

'சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?'

'சிக்கன் செய்து தரலைன்னு மனைவியை அடிச்சேன்...  இப்ப வாரம் ரெண்டு தடவை சிக்கன் கிடைக்குது!'

ooOoo

சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறதுன்னு உங்களுக்கு தெரியுமா ?'

தெரியாதே !

'அப்போ இந்த நூறு ருபாய்க்கு சேஞ்சு கொடுங்க !'

ooOoo

Copyright © 2005 Tamiloviam.com - Authors