தமிழோவியம்
துணுக்கு : செய்தித் துளிகள்
-

ஹிந்தி கற்போம்

Viajayakanthதே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்கள் ஒரு கருத்துக் கூறியுள்ளார்.  தமிழ் இளைஞர்கள் தமிழ், ஆங்கிலத்தைத் தவிர ஹிந்தியையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்குமென்றும் கூறியுள்ளார். மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கருத்து. ஹிந்தி எதிர்ப்பு, இரு மொழிக்கொள்கை என்றே முழக்கங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு இது ஒரு துணிவான, புதிய செய்தி. அவர்கள் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க வைக்கும் செய்தி. இதைப் போல் புதிய சிந்தனைகள் தமிழ்நாட்டிற்குத் தேவை.ஸ்டீவ் பக்னர் ஓய்வு பெற வேண்டுமா ?


கிரிகெட் நடுவர் "ஸ்டீவ் பக்னர்" தற்பொழுது விமர்சனத்திற்குள்ளானவராகவே ஆகி வருகின்றார்.  இந்தியா - ஆஸ்த்ரேலியா இரண்டாவது சிட்னி டெஸ்டில் இவருடைய தீர்ப்புக்கள் தாறுமாறாக இந்தியாவிற்கு எதிராகவே அமைந்தன. இதனால் கோபம் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி,சி. யிடம் முறையிட்டு அடுத்த "பெர்த்" Steve Buknorடெஸ்டிலிருந்து நீக்கிற்று. சுமார் ஒரு மாதகாலத்திற்கும் மேலாக சும்மாயிருந்த பக்னர் தற்போது தென் ஆப்பிரிக்கா - பங்களாதேஷ் டெஸ்ட்களுக்கு நடுவராக உள்ளார்.  முதல் டெஸ்டில் இவருடைய தீர்ப்பு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அமைந்துள்ளது.  முதல் டெஸ்டில் வங்க தேச கேப்டன் அஷ்ரபுல் வீசிய பந்தை தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் எதிர் கொண்டார்.  அது "நோ-பால்"  ஆகும்.  ஆனால் அந்தப் பந்தை எதிர்கொண்ட டிவில்லியர்ஸ் "காச்" கொடுத்தார். இந்த நோபாலுக்கு அவுட் கொடுத்து விட்டார் நடுவர் பக்னர்.  இந்த முடிவைப் பார்த்து மற்றைய தெனாப்பிரிக்க வீரர்கள் எல்லோரும் திகைப்பிற்குள்ளானார்கள். 

வயதானதால் அவர் நடுநிலை வகிக்கும் தன்மையை இழந்தாரா? இல்லை கிரிக்கெட் விதிகளை மறந்தாரா? என்பதுதான் இப்போதைய கேள்வி.  இவரின் தவறான முடிவால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸ்ஸில் வங்க தேசத்திவிட 22 ரன்கள் குறைவாகவே பெற்றுள்ளது. 

வெங்கடராகவன் எடுத்ததைப்போல் ஸ்டீவ் பக்னரும் ஓய்வு பெறும் முடிவை எடுப்பது அவருக்கு நல்லது. கிரிக்கெடிற்கும் நல்லது.

கூட்டுக் குடிநீர்த் திட்டம்

தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகனேகல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு முதலமைச்சர் Stalinஅடிக்கல் நாட்டி, திட்டத்தைத் துவக்கிவைக்க உள்ளார். இந்த இரண்டு மாவட்டங்களில் காவிரி பாய்ந்தாலும், அந்த ஆற்று நீரை பயன்படுத்த முடியாமல் இரண்டு மாவட்டங்களும் தவிக்கிறது. குடகில் பிறந்த காவிரி தமிழ்நாட்டிற்குள் தர்மபுரி மாவட்டத்தி;ல் நுழைகிறாள்.  இந்த மாவட்டங்களில் காவிரியாறு மிகப் பள்ளத்தில் பாய்கிறது.  ஆகவே இந்த மாவட்ட மக்கள் இந்த நீரைப் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.  குடிநீருக்குக் கூட இந்த நீரைப் பயன் படுத்த முடியாத அவல நிலைதான் இங்கு காணப்படுகிறது.  தரைமட்டத்தில்இருந்து சுமார் 300 அடிப் பள்ளத்திலிருக்கும் நீரை மேலே கொண்டுவந்தால்தான் இந்த மாவடங்கள் இந்நீரைப் பயன் படுத்த முடியும். ஆகவே நீர்த் தேவையின் காரணமாக நிலத்தடி நீரை உறிஞ்ச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.  அளவிற்குமேல் ஆள்துளைக் கிணறுகள் அமைக்கப் பட்டதால் அதிக அளவிலான நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு தண்ணீரில் "புளோரைடு" என்னும் நச்சுப்பொருள் கலந்து விட்டது.  அதன் காரணமாக பற்களில் பாதிப்பு, முதுகில் கூன் விழுதல் போன்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு மக்கள் ஆளானார்கள். 

இவை எல்லாவற்றிற்கும் தீர்வுகாணத்தான் இத்திட்டம் செயல்பட உள்ளது. ஒகனேகல் நீர் வீழ்ச்சிக்கு முன்னதாகவே  630 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்கள் மூலம் நீரை எடுத்து அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப் படவுள்ள சுத்தீகரிப்பு ஆலைக்கு எடுத்துச் செல்லப் படும்.  ஆற்று நீரை சுத்தம் செய்ய 12 ஏக்கர் நிலப் பரப்பில்  குடிநீர் சுத்தீகரிப்பு நிலையம் அமைக்கப் படும். அங்கிருந்து நீரை வினியோகம்செய்ய 2275 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு, 2277 கிலோ மீட்டர் நீள பகிர்மான குழாய்கள் மூலம் நீர் வினியோகம் செய்யப்படும். இத்திட்டத்தினால் சுமார் 30 லட்சம் மக்கள் பயனடைவார்கள். 

இத் திட்டத்திற்கு 1334 கோடி ரூபாய் செலவாகுமென எதிர்பர்க்கப்படுகிறது.  இதைப் பரிமரிக்க ஆண்டொன்றுக்கு சுமார் 52 கோடியும் செலவாகுமனக் கணக்கிடப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆகும் செலவை ஜப்பான் அரசு கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. இது சம்மந்தமாகத்தான் சமீபத்தில் ஸ்டாலின் ஜப்பன் சென்று அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்திருக்கிறார்.

காமராஜ் ஆட்சிக் காலத்திலும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலும் இதேபோல் திட்டங்கள் திட்டப்பட்டன. ஆனால் அதற்குக் கோடிக் கணக்கான ரூபாய் தேவைப்பட்டதால் அத்திட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போதுள்ள திட்டத்தால் தண்ணீர்ப் பஞ்சமும் களையப்படும்; புளோரோசிஸ் நோயும் கட்டுப்படுத்தப் படும்.

எப்படியோ தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தண்ணீர்த்தாகம் தீர்ந்தால் சரிதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors