தமிழோவியம்
அடடே !! : சுஜாதாவிடம் கேட்க விரும்பிய கேள்வி
-

Writer Sujathaசுஜாதா பாணியில் ஒரு வார்த்தை / ஒரு வரி பதில் சொல்ல முடியுமா ?  என்று சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை சிலரை கேட்டோம் ..

கேள்விகள்
 
1. சுஜாதா என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ?
 
2. சுஜாதாவின் படைப்புகளில் உங்களை பாதித்த படைப்பு எது ?
 
3. மற்றவர்களிடம் இருந்து சுஜாதா வேறுபடுவது எப்படி ?
 
4. சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைத்துறை இதில் உங்களுக்கு பிடித்த சுஜாதா யார் ?
 
5. சுஜாதாவிடம் கேட்க விரும்பிய ஒரு கேள்வி ?பதில்கள்

பினாத்தல் சுரேஷ்

1. Versatility

2. கணையாழியின் கடைசிப்பக்கங்கள்

3. மற்றவர்கள் எழுத்தாளர்கள், சுஜாதா குரு!

4. கட்டுரை ஆசிரியர் சுஜாதாவை இருட்டடிப்பு செய்யும் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

5. எப்படி சார் நீங்க எல்லா மேட்டர்லேயும் அப்டேட்டட் ஆ இருக்கீங்க?

ஜெயந்தி சங்கர்

1. தமிழ் விஞ்ஞானப்புனைகதை

2. நகரம் (சிறுகதை)

3. பரவலான ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் துள்ளல், துடிப்புடன் தமிழைக் கையாள்வதில்

4. சிறுகதை எழுத்தாளர்

5. வயதையும் உடல் சிரமங்களையும் கடந்து இத்தனைத் துடிப்புடன் இன்றைய இளைஞனின் 'பல்ஸ்' அறிந்து உங்களின் மொழியையும் நடையையும் அவர்களுக்கேற்றாற்போல் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க முடிவதன் ரகசியம் என்ன‌ ?

செல்வன்

1. வசந்த்

2. அடிமையின் காதல்

3. சுஜாதாவாக ஆக வேண்டும் என்று தான் மற்றவர்கள் எழுதவே வந்தார்கள்.ஆக முடியாத வெறுப்பில் திட்டினார்கள்.

4. நாவல் தான் இவை அனைத்துக்கும் அடிப்படை.ஆக நாவலாசிரியர்தான் எனக்கு பிடித்தமானவர்

5. மெக்சிகோ சலவைக்காரி ஜோக்கை கடைசிவரை சொல்லாமலே போய் சேர்ந்துவிட்டீரே ஐயா....:((((

எம். கே குமார்

1. இளமை / குசும்பு

2. கடைசியாக “சின்னாத்தா”

3. எப்போதும் இளைஞன்

4.  நண்பன் சுஜாதா

5. நிச்சயமா மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் இல்லை!

அருணா ஸ்ரீனிவாசன்

1. அவரது எழுத்து நடை. "நறுக்"....

2. கற்றதும் பெற்றதும்

3. எளிதில் புரியாத  விஞ்ஞானம், மெய்ஞானம்  போன்ற  ஆழமான விஷயங்களையும்   சாதாரணமானவர்களும் ரசிக்கும்படி எழுதிய எழுத்தாளர்.

4. முதலாவது - கட்டுரையாளரையும் சேர்க்கவும்.

5. அப்படி எதுவும் இல்லை. அப்படியே எனக்கு ஏதாவது  தோன்றினாலும்  "Too Late..." என்று அவர் பாணியில் நறுக்கென்று சொல்லிவிடுவார் - அசரீரியாக....

சொக்கன்

1. சுவாரஸ்யம். எடுத்தால் கீழே வைக்கமுடியாத புத்தகங்களைதான் அவர் கடைசிவரை எழுதிக்கொண்டிருந்தார், அவருடைய படைப்புகளில் யாருக்கு எந்த விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு (இரண்டு?) தலைமுறையையே வாசிக்கவைத்தவர் என்பதை மறுப்பதற்கில்லை. என் தலைமுறைக்கு, கிரிக்கெட்டில் டெண்டுல்கர், இசையில் இளையராஜாபோல், புத்தகம் என்றால் சுஜாதா! அவரைப்போல் எழுதியவர்கள்தவிர, அவர் இல்லாவிட்டால் எழுத வந்திருக்கமாட்டார்கள் என்றே ஒரு தனிக் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருவன்.

2. நிலா நிழல், வாய்மையே சிலசமயம் வெல்லும்

3. வாழ்நாள்முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தவர், அதைப் பகிர்ந்துகொண்டே இருந்தவர். அவருடைய எழுத்துகளாலேயே அவருக்கு ஓர் ஆட்டோபயக்ரஃபி எழுதிவிடமுடியும், தேசிகன் போன்றோர் முய்ற்சி செய்யலாம்.

4. நீங்கள் கேட்டிருக்கும் அதே வரிசையில் எனக்கு அவரைப் பிடிக்கும்.

5. அ. நீங்கள் எழுதுவது ஒரு பாணி, நீங்கள் சிபாரிசு செய்வதெல்லாம் இன்னொரு பாணி, இந்த முரணை எப்படி இத்தனை வருடம் சமாளித்து, ஜெயித்துக்கொண்டும் இருந்தீர்கள்?

ஆ. இன்னொரு சுஜாதா எங்களுக்கு நிச்சயம் கிடைக்கப்போவதில்லை, எல்லாவற்றுக்கும் நன்றி!

"வினையூக்கி" செல்வா

1. "கற்றதும் பெற்றதும்"

2. "ஆ"

3. ஜனரஞ்சகமான எழுத்து

4. சிறுகதை எழுத்தாளர்

5. அயோத்தியாமண்டபம் கதையின் அவசியம் என்ன ?

Sujathaகேள்விகள்  (மீண்டும்..)
 
1. சுஜாதா என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ?
 
2. சுஜாதாவின் படைப்புகளில் உங்களை பாதித்த படைப்பு எது ?
 
3. மற்றவர்களிடம் இருந்து சுஜாதா வேறுபடுவது எப்படி ?
 
4. சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைத்துறை இதில் உங்களுக்கு பிடித்த சுஜாதா யார் ?
 
5. சுஜாதாவிடம் கேட்க விரும்பிய ஒரு கேள்வி ?

"பொன்ஸ்' பூர்ணா

1. பெயர் மட்டும் பயன்படுத்தி பெரிய விசயம் போல் பில்டப் கொடுக்கும் நடை. கூகிளாண்டவர் துணையோடு அவர் கதைகளைப் படிக்க முடிந்திருந்தால், கதை மீது ஆர்வமே இல்லாமல் போயிருக்கும்.

2. கணேஷ் வசந்த் கதைகள் எல்லாமும்

3. இலக்கியமும் இல்லாமல், வெகுஜனமும் இல்லாமல் அறிவியல் கலந்த அவரின் வேக நடை.

4. சுஜாதா ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் மட்டுமே..
5. ம்ஹூம்.. ஒன்றுமில்லை..

ஐகாரஸ் பிரகாஷ்

1. எல்லோருக்கும் வாத்தியாராய்த் திகழ்ந்தது.

2. பெரும்பான்மையான படைப்புகள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமமெனில், காகிதச் சங்கிலிகள் (குறுநாவல்), தனிமை கொண்டு ( சிறுகதை), சிலிகான் சில்லுப் புரட்சி ( அறிவியல் தொடர்), ரத்தம் ஒரே நிறம் ( நாவல்), முதல் நாடகம் ( நாடகம்)

3. தன்னை விடுத்து பிற நல்ல படைப்பாளிகளை வாசிக்கச் சொல்லி, அப்படிப்பட்ட படைப்பாளிகளை தொடர்ந்து அடையாளம் காட்டியது.

4. சிறுகதை ஆசிரியர்

5. இந்த மாதிரி நடுவிலேயே த்ராட்ல விட்டுட்டுப் போய்டுவேன்னு சொல்லவேயில்லீங்களே ?

காசி ஆறுமுகம்

1. ஏன் எதற்கு எப்படி?

2. கரையெல்லாம் செண்பகப்பூ

3. சொல்விரயமின்மை, காலத்தோடு ஒட்ட ஒழுகுதல், இளமை

4. நாவலாசிரியர்

5. அங்கவை சங்கவையெல்லாம் தேவையா?

ராம்

1. ஸ்ரீரங்கத்து தேவதைகள்

2. சீனு'ன்னு பெயர் இருக்கிற கதை... ஸ்ரீரங்கத்து தேவதைகள்'லே இருக்கும், தலைப்பு மறந்து போச்சு... :)

3. தனியான எழுத்து நடை

4. சிறுகதை எழுத்தாளர்

5. இவ்வளவு எழுதியிருக்கீங்களே? இதிலே எதாவது ஒன்னாவது ஒங்களுக்கு மனசு நிறைவா இருந்துச்சா? :-)

"தென்றல்" வசந்தம்

1. திருக்குறளுக்கு உரை, சங்க இலக்கியங்கள், புறநானூறு பற்றிய எளிய அறிமுகம், அறிவியல் கேள்வி-பதில்கள், கட்டுரைகள் என்று பிரமிக்க வைத்தவர் ..... எப்படி 'சிவாஜி' மாதிரி திரைப்படங்களுக்கு(ம்) வசனம் எழுத முடியுது?

2. சமீபத்தில் படித்த 'அனிதா-என் இளம் மனைவி'-- பாதிப்பு என்பதைவிட 20 வருடங்களுக்கு முன்பிருந்தே இருக்கும் அந்த வசிகரமான எழுத்து நடை...

3. அறிவியல் தமிழை புரியும் படி சொன்னவர். நமது தலைமுறைக்கு அவரின் எழுத்து ஒரு "டிரென்ட் செட்டர்"!.

4. சிறுகதை எழுத்தாளர்

5. உங்கள் வாழ்க்கையின் கடைசி தருணங்களைப் பற்றி ஒரு வரியில் .........

ஆசிப் மீரான்

1. அவரது தனித்துவமிக்க எழுத்து நடை

2. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சிறுகதைத் தொகுப்பு

3. கூர்ந்த அவதானிப்பும், வலியத் திணிக்காத சீரான நகைச்சுவையுணர்வும், எளிய மொழிநடையும்

4. சந்தேகமில்லாமல் சிறுகதை எழுத்தாளர் சுஜாதா

5. இதய நோயோடு மல்லாடும் நீங்கள் உங்கள் உடல்நலத்தையும் கொஞ்சம் கவனிக்கக் கூடாதா? :-(((((

 

முத்து

1. புன்னகையோடு கணினியில் ஆசிரிய விருத்தம் எழுதும் ரோபோ..

2. மஹாபலி

3. கல்லூரியில் தமிழ், இயற்பியல் மற்றும் கணினி விரிவுரையாளர்களால் ஒரே நேரத்தில் மேற்கோள் காட்டப்படுவதன் மூலம்.

4. சந்தேகமேயின்றி முதல்வர்தான்.

5. இலக்கிய வாசகனாக மட்டும் நிறுத்திக்கொண்டிருந்தால் இன்னும் அதிக அறிவியல் பங்களிப்பு செய்தியிருக்கலாமோ "கலாம்" போல என்று எப்போதேனும் தோன்றியதுண்டா ?

ரவி சுப்பிரமணியம்

1. Srirangathu DevathaigaL & Madhyamar.

2. (Pookkutti) - The story about a rich girl, who is lonely in this world.  She befriends a slum boy living in the adjacent quarters and learns to love and be loved, which the adult world cannot relate to.  The adult world crushes their tender love and eliminates the boy from her life.

3. His fierce individuality and maverick writing style.  His understanding of human vagaries and its soft emotions is clearly captured in his characters.  He has a fine sense of humor and is brave to coin new words and phrases in Tamizh. 

4. Novel Writer.  Karaiellam Shenbagapoo, Pirivom Sandhippom cannot be comprehended in any other forms.

5.
a. His struggle with strict adherence to Hindu religion and its ritual aspects.  How it metamorphosed in the later years of his life. 
b.His thoughts on Indian marriage, and his reflection on his own married life.

ரஜினி ராம்கி

1. ரைட்டிங் ஸ்டைல். நாலு வரியில் நாற்பது விஷயம் சொல்லும் விறுவிறு ஸ்டைல்..

2. கரையெல்லாம் செண்பகப்பூ கதாநாயகனின் மனசாட்சி, பூக்குட்டியில் வரும் தாச்சுக்கோ உரையாடல், கற்றதும் பெற்றதும் சிலவை. சிவாஜி படத்திலிருந்து சில வசனம்,  சர்க்கரை வியாதி பற்றி விகடனி்ல் எழுதிய கட்டுரை.

3. கரையெல்லாம் செண்பகப்பூ கதாநாயகனின் மனசாட்சி, பூக்குட்டியில் வரும் தாச்சுக்கோ உரையாடல், கற்றதும் பெற்றதும் சிலவை. சிவாஜி படத்திலிருந்து சில வசனம்,  சர்க்கரை வியாதி பற்றி விகடனி்ல் எழுதிய கட்டுரை.

4. சிறுகதை அல்ல தொடர்கதை எழுத்தாளர்,  சினிமா வசனகர்த்தா.

5. கேட்டாச்சு நிறைய கேள்விகள், ஆனால் எதற்கும் பதில் வரவில்லை, புன்னகை மட்டும்தான், உதாரணத்திற்கு சந்திரமுகி படம் பற்றி ?
 
இவரையெல்லாம் நேரில் பார்ப்போமோ என்று நினைத்த காலம் உண்டு. நேரில் சந்தித்து, பேசி, அதையே அனுபவமாக எழுதி, அதையும் அவர் படித்து, அவர் படித்தாரா என்பதையும் சரிபார்த்து, பின்னர் அவரிடமே நினைவுபடுத்திக் கேட்டு,,,, நடந்ததெல்லாம் நிஜமா என்று ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. நன்றி சொல்ல வேண்டியது தேசிகனுக்கும் உஷா ராமசந்திரனுக்கும்
 
சுஜாதாவிடமிருந்து கற்றுக்கொண்டது நிறைய அதில் டாப் 2
1. ரைட்டிங் ஸ்டைல்
2. விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை.

"திண்ணை" துகாராம்

1. நகைச்சுவை உணர்வு

2. நில்லுங்கள் ராஜாவே

3. நகைச்சுவை உணர்வு

4. நாவலாசிரியர்

5. ஏன் சமரசம்?

"நிலாச்சாரல்" நிலா

1. குறும்பு

2. பெரிதாய் எதுவும் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை

3. உலகஞானம்

4. நாவலாசிரியர்

5. தாய் மொழிக்கல்வி பற்றி அதிகம் எழுதி இருக்கிறீர்கள். ஒரு மொழி ஏன் அழியக் கூடாது என்பதற்கு அழுத்தமான காரணங்கள் எவை எனக் கருதுகிறீர்கள்?

பத்மா அர்விந்த்

1. வசீகரம்

2. எத்தனை ஆர்வமாக படித்தேனோ அதே வேகத்தில் மறந்தும் போய் விடுவதால் நினைவில் பதிந்து போனதாய் எதுவும் இல்லை.

3. எளிமை, ஆரம்பம் முதல் கடைசி வரை படிக்க வைக்கும் சுவாரஸ்யமான நடை.

4. சிறுகதை எழுத்தாளர்

5. நிறைய நாடுகளுக்கு சென்றும் நிறைய எழுத்தாளர்களை படித்தும், மேலோட்டமாக அவர்கள் கலாச்சாரத்தை பற்றி எப்படி எடை போட முனைந்தீர்கள்?

Copyright © 2005 Tamiloviam.com - Authors