தமிழோவியம்
கவிதை : நெஞ்சம் நிறைய அம்மா !
- சத்தி சக்திதாசன்

 

ஆயிரம் சொல்லுண்டு அகிலத்தில்
    ஆனாலும் ஒன்றுண்டு நெஞ்சத்தில்
அன்பிற்குமுண்டு பலவகை
   அம்மாவின் வகையொன்றேதான்
அணைப்புகள் கொடுத்திடும் சுகங்கள்
   அன்னையின் அணைப்பிற்குண்டோ ஈடு
அன்றவள் இருக்கையில் இல்லை
   அறிவு ஏழை என் வசம்
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
   அழுகுது இதயம் வெறுமையாகவே
அன்னையர் தினம் வரும் வேளையிலே
   அனுபவம் தன்னிலே ஒரு சொல் கேளீர்
அருமையாய் பேணி அம்மாவைக் காத்திடும்
   ஆவியாய் அவள் மறைந்த பின்னாலே
அழுது புரளுவதும் , ஆயிரம் பேசுதலும்
   அமைதியத் தராது அடித்தே சொல்லுவேன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors