தமிழோவியம்
கவிதை : வாழ்க்கை
- மேலூர் தென்றல், கோவை

பத்தாம் வகுப்பில்
பத்மா அழகானவள்
அவளைக் கவர்வதற்காக
எத்தனையெத்தனை முயற்சிகள்.

பிளஸ்- டூ படிக்கும்போது
பிரேமா அழகானவள்
பிரேமா பேசிய
ஒவ்வொரு வார்த்தையுமே
கவிதை கவிதை

கல்லூரியில்
காயத்ரி அழகானவள்
கண்பாஷை,
கவிதை...

இரவும், பகலும்
மாறி மாறி
நாட்காட்டிகளை
மெலிய வைத்தன.

நிரந்தர வேலையின்றி
மனம் நொந்து திரிந்த
சந்தர்ப்பங்களில்...

பத்மாவை பரமக்குடியிலும்,
பிரேமாவை மதுரையிலும்,
காயத்ரியை கணக்கன்பட்டியிலும்
பார்த்தேன்.

தலைநிறைய மல்லிகைப்பூ,
தளும்பிய தொந்தி,
கைகளில் குழந்தைகள்.

பாழாய்ப்போனது
மூவரின் அழகு மட்டுமல்ல.
என் வாழ்க்கையும்தான்...

Copyright © 2005 Tamiloviam.com - Authors