தமிழோவியம்
தராசு : எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே
- மீனா

கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பாதி விலைக்கு பொருட்களை தருவதாக கூறி கிட்டதட்ட 10 லட்சம் ரூபாயை பொது மக்களிடமிருந்து சுருட்டியுள்ளது. வழக்கம்போல இந்நிறுவனத்தில் பணத்தை போட்டு ஏமாந்த மக்கள் கலாட்டா சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

·பைனான்ஸ் கம்பெனிகள் செய்யும் மோசடியைப் பற்றி மக்களுக்கு விவரம் தெரிந்தும் இது போன்ற நிறுவனங்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பேராதரவு அளித்து வருவது வருந்தத்தக்க விஷயமாகும். பல வருடங்களாகவே இத்தகைய நிறுவனங்கள் செய்துவரும் விளம்பரங்கள் அனைத்தும் போலியானவை என்றும் கொடுக்கும் வாக்குறறுதிகளை அவர்களால் கண்டிப்பாக நிறைவேற்ற முடியாதென்பதையும் பல்வேறு நுகர்வோர் நிறுவனங்களும், வங்கிகளும் எடுத்துரைத்தும் கூட மக்கள் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாந்து போவதை என்னவென்று சொல்வது.

தங்கள் விளம்பர வார்த்தைகளை நம்பி, ஏமார மக்கள் தயாராக இருக்கும் வரை இத்தகைய ஏமாற்று நிறுவனங்கள் முளைத்துக் கொண்டுதான் இருக்கும். இதை தடுக்க ஏமாற்றும் நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பது போலவே, அந்நிறுவங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் மக்கள் மீதும் குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வகை செய்ய வேண்டும். அப்போதுதான் தண்டனைக்கு பயந்தாவது மக்கள் திருந்த வாய்ப்புள்ளது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors