தமிழோவியம்
அறிவிப்பு : Stage Friends USA
-

அன்பு வாசகர்களுக்கு Stage Friends, USA குடும்பத்தினர் NJல் இருந்து எழுதும் அன்பு மடல்.

stagefriends usa1993ம் ஆண்டு, இயல் இசை நாடகம் என்ற முத்தமிழின் ஒரு பிரிவான நாடக வரிசையில் ஆர்வம் கொண்ட சில உள்ளங்களால் இந்த அமைப்பு வித்திடப்பட்டது. அன்று முதல் இன்று வரை நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து, நிமிர்ந்து வெற்றி நடை போட்டு வருகின்றது.

இது வரை நாங்கள் திரையிட்ட நாடகங்கள் பன்னிரெண்டு. "கலாட்டா கல்யாணத்தில்" ஆரம்பித்து, Tenant Commandments, டவுரி கல்யாணம், ஊர்வம்பு, உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, Honeymoon Couple, அய்யா அம்மா அம்மம்மா, சாத்திரங்கள் சொன்னதில்லை, ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு, வீட்டுக்கு வீடு வாசப்படி, ஆனந்தம் பரமானந்தம் என்று பன்னிரெண்டு நாடகங்கள் வெற்றி நடை போட்டன.

எங்கள் வெற்றிக்குக் காரணமான சிலரை நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். அவர்கள் "மெரிணா", "கிரேஸி மோகன்", "சோ ராமசாமி", "காத்தாடி ராமமூர்த்தி", "விசு" ஆகியோர். எங்களுக்கு கதை வசனத்தைக் கொடுத்து ஆர்வத்தை ஊட்டிய அவர்கள் அனைவருக்கும் நாங்கள் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.

எங்களுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளித்த நியுஜெர்சி தமிழ்ச்சங்கம், நியுயார்க் தமிழ்ச்சங்கம், பாஸ்டன் தமிழ்ச்சங்கம்,·பிலடெல்பியா தமிழ்ச்சங்கம், நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கம், பாரதி சொசைய்டி நியு யார்க், ஹிந்து டெம்பிள் நியு யார்க், ஹிந்து டெம்பிள் மார்ல்பரோ ஆகியோருக்கு பணிவுகலந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

பொருளாதார நோக்கத்துடன் நாங்கள் இந்த அமைப்பை நடத்தவில்லை. எங்கள் உதவியை நாடிய சில உள்ளங்களின் இருக்கண் களைய, அவர்கள் உள்ளம் மகிழ, அவர்கள் வாழ்வு மலர எங்களால் இயன்ற சிறு துளி உதவிகளைச் செய்து வருகின்றோம். ஒவ்வொரு நாடகத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானங்கள் அனைத்தையும் கீழ்க்கண்ட அமைப்புகளுக்கு உதவியாக அளித்துள்ளோம்.

v-excel Foundation, Chennai
Sindhanai Sirpigal
Hindu Temple Cultural Society, Marlboro NJ
AIM for Seva, Coimbatore
Ranganatha Swamy Temple, Pomona, NY
The Hindu Temple Society of North America, Queens, NY
New Jersey Tamil Sangam

சென்ற வருடம் சுனாமி துயரத்தால் நலிவடைந்த செருதூர் கிராமிய மக்களின் மறு வாழ்விற்காக எங்கள் அமைப்பின் வருமனத்தை அளித்தோம்.

இந்த வருடம் Apr 8 அன்று எங்களால் மேடையேற்றப்படும் அடுத்த முத்து "ரகசிய சிநேகிதியே".

இந்நாடகம் திரு மணிராம், sanjose அவருடைய கற்பனைத்திறத்தால், எண்ண அலைகளால் உருவாக்கப்ட்டது. இந்நாடகம் வெற்றி நடைபோட உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

இந்நாடகத்தின் வருமானம் அனைத்தும் தென்னாங்கூர் மருத்துவமனைக்கு அளிக்கப்படும்.

இறுதியாக எங்களுக்கு என்றென்றும் வாடாத அன்பையும் வற்றாத ஆதரவையும் அளித்துவரும் நியுஜெர்சி நண்பர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

ரமணி : info@stagefriendsusa.com

http://www.stagefriendsusa.com

Copyright © 2005 Tamiloviam.com - Authors