தமிழோவியம்
இயேசு சொன்ன கதைகள் : ஊதாரிப் பிள்ளை
- சிறில் அலெக்ஸ்

இயேசு சொன்ன கதைகளில் 'நல்ல சமாரியன்' கதையைப் போல வே பிரபலமானது 'ஊதாரிப் பிள்ளை' கதை.

ஒரு ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள். இரண்டாமவன் ஒருநாள் வந்து 'அப்பா சொத்தில் என் பங்கை பிரித்துக் கொடு.' என்றான். தந்தையும் அவ்வாறே செய்தார். சிறிது நாட்களுக்குப் JesusStories Useless Sonபின் இரண்டாமவன் சொத்தையெல்லாம் சேர்த்துக்கொண்டு வேறு நாட்டுக்கு பயணித்தான். அங்கே அவன் சொத்தெல்லாம் செலவழித்தபின்பு அந்நாட்டில் பஞ்சம் வந்தது. வறுமை வாட்டவே அங்குள்ள ஒருவனிடம் வேலையாளாகச் சேர்ந்தான். பன்றி மேய்க்கும் வேலை அவனுக்குத் தரப்பட்டது. பன்றிகளின் உணவையே உண்டு வாழ்ந்து வந்தான். ஒரு நாள் புத்தி வந்தது,"என் தந்தையின் பணியாட்கள் உண்டதுபோக மீதம் வைக்கவும் உணவு இருக்கையில் நான் பட்டினியில் வாடுகிறேனே" என வருந்தினான். "என் தந்தையிடம் சென்று 'தந்தையே வானகத்துக்கெதிராயும் உமக்கெதிராயும் பாவம் செய்தேன், உன் மகனாயிருக்கும் தகுதி எனக்கில்லை உம் வேலையாட்களில் ஒருவனாய் என்னை சேர்த்துக்கொள்ளும் என்பேன்" என நினைத்து எழுந்து தன் தந்தையிடம் வந்தான்.

இவன் தூரத்தி வருவதைக்  கண்ட தந்தை ஓடோடிச் சென்று அணைத்துக்கொண்டார். "தந்தையே வானகத்திற்கெதிராயும் உமக்கெதிராயும் பாவம் செய்தேன் எனை மன்னியும்" என்றான். தந்தையோ தன் வேலையாட்கலிடம்,"ஓடிப்போய் சிறந்த ஆடைகளைக் கொண்டுவந்து இவனுக்கு அணியுங்கள். இவன் கையில் மோதிரமும் கால்களுக்கு காலணியும் அணியுங்கள், கொழுத்த கன்றினைக் கொன்று விருந்து படையுங்கள். நாம் உண்டு களிப்போ, ஏனெனில் இவன் என் மகன், இறந்துபோயிருந்தான் இப்போது இயிர்த்து வந்துவிட்டான், காணாமல் போயிருந்தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்." என்றார்.

மூத்த மகன் வயலில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பினான். வீட்டில் பாட்டும் நடனமும் நிகழ்வதைக் கண்டு விசாரித்தான். தன் தம்பி பற்றி அறிந்தான். தந்தையிடம் சென்று,"இத்தனை வருடங்களாய் உமக்கு வேலை செய்கிறேன், உம் வார்த்தைகளுக்கு தவறாமல்  கீழ்படிகிறேன். ஆனால் ஒரு போதும் நீர் நான் என் நண்பர்களோடு களித்திருக்க ஏதும் செய்ததில்லை. ஆனால் இப்போது உம் சொத்தை விழுங்கிய மகன் வந்ததும் கொண்டாடுகிறீரே" என முறையிட்டான்.

தந்தையோ,"மகபே நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய் ஆனால் இவனோ இறந்திருந்தான் இபோது உயிர்பெற்றுள்ளான், தொலந்தவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்." என்றார்.

இந்தக் கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை என்றாலும், வீட்டில் தந்தையோடு இருந்த அண்ணனை ஊதாரிப் பிள்ளையாக வர்ணித்து பொருள் கொள்பவர்களும் உண்டு.

முன்னர் ஒரு கதையில் சொன்னதைப் போல பாவிகள் மனம் திரும்புகையில் கடவுளின் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதைச் சொல்லும் இன்னொரு கதை.

இயேசு இன்னொரு இடத்தில் சொல்லியிருப்பார்,"உங்களில் எவன் தன் பிள்ளை அப்பம் கேட்க கல்லைக் கொடுப்பான், முட்டையைக் கேட்க தேளைக் கொடுப்பான்." உலகத் தந்தைக்கே எது நல்லது எனத் தெரியும்போது வானகத் தந்தைக்குத் தெரியாதா?

"பிரபஞ்சத்தின் தந்தை நானே, தாயும் நானே." கீதை 9.17.

Copyright © 2005 Tamiloviam.com - Authors