தமிழோவியம்
நையாண்டி : தொகுதிப் பங்கீடு
- கோவி.கண்ணன்

(ஒரு கற்பனை)

கட்சித் தலைவரை பார்க்க வந்த பல்வேறு அமைப்புகளிலிடம் மாவட்ட செயலாளர் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மாவட்ட செயலாளர் : எல்லோரும் பொறுங்க, அம்மா எல்லோரையும் பாக்கிறேன்னு சொல்லியிருக்காங்க !

அமைப்புத் தலைவர்கள் ஒவ்வொருவராக சொன்னார்கள்,

அமைப்புத் தலைவர்கள் : சீக்கரம் ஏற்பாடு பண்ணுங்க, இல்லேன்னா நாங்க எதிர்கட்சிகாரங்கள சந்திக்க வேண்டியிருக்கும்,

மா.செ : கொஞ்சம் பொறுங்களைய்யா, அம்மா தான் பாக்கிறேன்னு சொல்றாங்கல்ல ...

அ.த : என்ன மா.செ எங்க வேல்யூ தெரிஞ்சு, எங்கள காக்கவெக்கறது நல்லா இல்லை ...

மா.செ : யோவ்... என்னைய்யா வேல்யூ ... நாங்க பாக்காத வேல்யூ வா... வேலூருல்லேர்ந்து நேரா இங்க வந்தவங்களுக்கே இங்க வேல்யூ இல்லை, இவனுங்க வந்துட்டானுங்க

என்று கோபமாக சொன்னார்

அதற்குள் கட்சித் தலைவி அம்மாவின் உதவியாளர் வெளியில் வந்து,

உதவியாளர் : மா.செ அண்ணே, அம்மா உங்களை, ஓவ்வொரு அமைப்பின் தலைவர்களை மட்டும் கூப்பிட்டுக்கிட்டு உள்ள வரச் சொன்னாங்க ...

மா.செ : யோவ் .. வாங்கைய்யா, தலைவன் யாரோ அவன் மட்டும் தான் வரனும், அங்க வந்து கைய கட்டிட்டிக்கிட்டு நிக்கனும், கேட்டா மட்டும் பதில் சொல்லனும் என்ன ?

அமைப்புத் தலைவர்கள்  : அப்படியே செய்யிறோம் மா.செ அண்ணே

மா.செ : சொல்லிட்டா போதுமா, கோசம் போடனும்மய்யா .... நீங்கள் எல்லாம் சீட்டு வாங்கி ... சே எல்லாம் என்னோட தலையெழுத்து ...

உடனே

அமைப்புத் தலைவர்கள் : தலைவி வாழ்க ... தலைவி வாழ்க ...

மா.செ : சரி சரி வாங்க ... சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ...

என்று அழைத்துக்கொண்டு உள்ளே சென்று  கட்சித் தலைவியின் முன், மூக்கு வாயை மூடியபடி எல்லோரும் நிற்கிறார்கள்

கட்சித் தலைவி : சொல்லுங்க மா.செ இவுங்களுக்கு என்ன வேண்டுமாம் ...

மா.செ : அது வந்தும்மா ... இவங்களுக்கு சீட்டு வேண்டுமாம் ...

கட்சித் தலைவி : சரி பரிசீலிக்கலாம், இவங்க தகுதி என்னனென்னு தெரிஞ்சுக்களாமா ?

மா.செ : சொல்லறம்மா ... அதோ அழுக்கு வேட்டியோடு நிக்கிறாரே அவரு தான் பிச்சக்காரர்கள் சங்கத்தலைவர் பிச்சாண்டி, 234 தொகுதியிலும் அவங்களுக்கு சங்கம் இருக்காம்.

கட்சித் தலைவி : அப்பறம் ? அதுக்கு  ?

ஆச்சர்யத்துடன் மா.செ வை ஏறிட்டார்

மா.செ : அம்மா அவுங்களுக்கு தமிழ் நாடு முழுவதும் வாக்கு வங்கி இருக்காம்

என்று சொல்லிவிட்டு, பிச்சக்காரர்கள் சங்கத்தலைவர் பிச்சாண்டியைப் பார்கிறார்

பிச்சாண்டி : அம்மா, எங்க சங்கம் 234 தொகுதியிலும் ஸ்டாரங்கா, இருக்கு, தொகுதிக்கு குறைஞ்சது 1000 பேராவது இருப்போம்

கட்சித் தலைவி : மிஸ்டர் பிச்சாண்டி, ஒரு தொகுதிக்கு 1000 பேர் என்பது ரொம்ப குறைவானது... அதுக்கு சீட்டெல்லாம் கொடுக்க முடியாது. வேனும்னா, நான் ஆயிரம் பேருக்கு மா.செ கிட்ட செல்றேன், இலவச பாத்ரம் அதுவும் புது பாத்திரமா தரச்சொல்கிறேன் வாங்கிட்டு கட்சிக்கு ஓட்டப் போடுங்க ...

என நிறுத்த ...

பிச்சாண்டி : அப்படியெல்லாம் ஒரேடியாக சொல்லிடாதிங்கம்ம, ஒரு தொகுதிக்கு 1000 பேர்தான் ஒத்துக்கிறேன், அந்த ஆயிரம் பேரும் 300 தெருவ கவர் பண்ணுகிறாங்க ... தெரியுமா ?

கட்சித் தலைவி :  அதுக்கு ...

பிச்சாண்டி :  அதாம்மா சொல்லவர்றேன்.. 300 தெருகாரங்களும் ரெகுலரா எங்களுக்கு பிச்ச போடரவங்க... எங்காளுங்க ஓட்டு போடச்சொல்றவங்களுக்குத்தான் போடுவாங்க ... மொத்தத்துல எங்க சங்கம் மட்டும் தான் தமிழ்நாடு முழுவதும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சங்கமா இருக்கு.

கட்சித் தலைவி :  என்ன மா.செ  ? இவுரு சொல்றது ...

தலையை சொறிந்தபடி

மா.செ : ஆமாம்மா, இவுங்க ஆளுங்க மட்டும் இல்லேன்னா, பழைய கொழம்பும், சோறு வீனாப் போயிடும்னு பொதுமக்கள் நினைக்கிறாங்க, அதுனால இவங்க சங்கத்து ஆளுங்க கைகாட்டும் கட்சிக்குத்தான் பொதுமக்கள் ஓட்டுபோடு போறதா பேசிக்கிறாங்க. இத கேள்விப்பட்டுத்தான் இவுங்களை வலைச்சு புடுச்சி கூட்டிட்டு வந்தேன்.

கட்சித் தலைவி : நீங்க சொல்றது சரிதானா ?

மா.செ : 100 சதவீதம் சரிதாம்மா, போன வாரம், இவங்க ஆளுங்கெல்லாம் ஒருநாள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க, அதனால ஜெனங்க பழைய சாதத்தெல்லாம் என்ன செய்றதுன்னு தெரியாம ... தெருவுல கொட்டி... அதுனால ஊரே நாறிப்போச்சு ... ஒரே ஈத்தொல்லை .. அப்புறமா... கூட காலையில இட்லியும் சேர்த்துப் போடுறோம்னு பேச்சு வார்த்தை நடந்ததால போரட்டத்தை திரும்ப வாங்கிட்டாங்க... இவங்க சொன்னால் ஜெனங்க கண்டிப்பா கேட்பாங்க ... அவுங்க கேட்கிற 45 சீட் வேண்டாம்... நான் பேசிட்டேன் ... ஒரு சீட் கொடுத்துட்ட போதும் ... நம்ப கட்சிதான் அடுத்த ஆட்சி.

கட்சித் தலைவி : சரி... இவங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கிடுறேன்.

மா.செ : அம்மா, அவுங்களே தொகுதிய முடிவுப்பண்ணிட்டாங்க ...

கட்சித் தலைவி : என்னது முடிவுபண்ணிட்டாங்களா ? என்ன தொகுதி ?

மா.செ : அம்மா, அது வந்தும்மா... ஆண்டிமடம் தான் இவுங்க கேக்கிற தொகுதி.

கட்சித் தலைவி : சரி சரி ஒதுக்கிடாலாம் ... பிரச்சாரத்த ஆரம்பிச்சிட சொல்லுங்க

மா.செ : அப்புறம் வந்து அம்மா... அவுங்க சங்க சின்னம் திருவோட நீங்கதான் மக்கள் கிட்ட அறிமுக படுத்தனும்.

மா.செ : யோவ். போட்டோ கிராபர்...  இவங்களையெல்லாம் சேர்த்து ஒரு போட்டோ எடு ...

பிச்சாண்டி : அம்மா, தாயே நீங்க நல்லயிருக்கனும் !

மா.செ : இங்கேயும் இதே பாட்ட பாடாதேயா, கேக்கவே நாரசமா இருக்கு, உங்காளுங்ககிட்ட சொல்லி தமிழ் நாடு முழுவதும் ... இனிமே காலையிலே ஓட்டக்காட்டி சோத்து பிச்ச கேட்கிறப்ப ... எங்க கட்சிக்கு ஓட்டும் சேத்து கேட்கனும் சரியா ?

பிச்சாண்டி : அப்படியே கேட்டுடுறோம் சாமி...

எல்லோரும் கட்சித்தலைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச்செல்கிறார்.

அடுத்ததாக, மா.செ கிளிஜோசியர் சங்கத் தலைவரையும், பாம்பாட்டிகள் சங்கத் தலைவரையும், தலைவிக்கு அறிமுகப்படுத்துகிறார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors