தமிழோவியம்
கவிதை : திரையில்லா மேடை
- மதுமிதா

 

மேலிருந்து வழியும்
நூலின் வழியே
கட்டப்பட்ட பொம்மைகள்
மேடையில் பார்வைக்காய்
 
ஆட்டி வைக்கும் கரங்களின்
அனுமதிப்படி
ஆடிக்கொண்டும்
கரங்களின் இச்சைப்படி
வந்து கொண்டும்
போய்க் கொண்டும்
 
எல்லோரும்
எல்லா காட்சியும்
பார்க்க இயலாத வண்ணம்
பரந்ததெனினும்
நினைப்பதைக்
காண இயலாது

இருக்கும் இடத்தில்
நடப்பதைக் காண இயலும்
 
காணமாட்டேனென
இடையே
கண்களை மூட இயலாது

கடைசித்திரை
விழும் வரையிலும்
தினமும் தொடரும்
காட்சியிது
 
திரையேயில்லா
மேடையிது

Copyright © 2005 Tamiloviam.com - Authors