தமிழோவியம்
கவிதை : என்னிடம் கேட்காதே !
- சத்தி சக்திதாசன்


வனிதையின் அவலத்தை
வரதட்சணை வழக்கத்தை
வாழ்க்கையின் கொடூரத்தை
வாடகை இதயத்தை
வாழும் உலகத்தின்
பாழும் கோலத்தை
என்னிடம் கேட்காதே !

பேதையின் விளக்கத்தை
பேய்கள் எனும் காரணத்தை
பெண்மையின் துன்பத்தை
பெண்கை விலங்குகளை
புரியாத உலக விந்தையை
என்னிடம் கேட்காதே !

ஆணாதிக்க அகந்தையை
அடக்கியாளும் அதிகாரத்தை
அறிவளிக்கா மடமையை
ஆசைப்பொருளாக்கும் காடையரை
ஆதரிக்கும் உலகைப்பற்றி
என்னைக் கேட்காதே !

கண்களை மூடிக்கொண்டு
காதுகளை அடைத்து விட்டு
கட்டாய அமைதி காக்கும்
கண்ணிருந்தும் குருடனிவன்
என்னைக் கேட்காதே !

Copyright © 2005 Tamiloviam.com - Authors