தமிழோவியம்
கவிதை : வெற்றிடம் !
- கோவி.கண்ணன்

 

ஒளியின் வெற்றிடம் இருள் !
உறவின் வெற்றிடம் பகை !
நம்பிக்கையின் வெற்றிடம் துரோகம் !
அறிவின் வெற்றிடம் அஞ்ஞானம் !
அன்பின் வெற்றிடம் சினம் !
திருப்தியின் வெற்றிடம் ஆசை !
மகிழ்ச்சியின் வெற்றிடம் துக்கம் !
அடக்கத்தின் வெற்றிடம் தற்பெருமை !
நாணயத்தின் வெற்றிடம் சூழ்ச்சி !

வெற்றிடங்கள் என எதுவுமில்லை உலகில் !
வெற்றிடங்களில் எது நிறைந்திருக்கிறது,
என்பதன் பொருளில்
வெற்றிடங்கள்,
வெற்றித் தடங்கள்
அல்லது
வெற்றுத் தடங்கல்
என்று அறியப்படுகிறது !

Copyright © 2005 Tamiloviam.com - Authors