தமிழோவியம்
கவிதை : நண்பனுக்கு ஒரு மடல்
- சத்தி சக்திதாசன்

உள்ளத்தில் தூய்மையில்லா
உணர்ச்சி உறங்கிய
கூட்டமொன்றை நான்
கண்டு வந்த
காட்சி சொல்ல ; நண்பனுக்கு
மடல் வரைந்தேன்

தேவைகளை உருவாக்கி
தோல்விகளை விலையாக்கி
மனிதனை மறந்து தாம்
மனிதத்தை இழந்த
மாக்கள் கூட்டமொன்று
மனதை உடைத்தது
அறிந்திடுவாய் நண்பனே !

பேதம் நிறைந்த மனம்
பேசுவது பொய்மை
வாதம் புரிவர் வீணே
வாக்கினில் சுத்தமின்றி
நோக்கினேன் நண்பனே
நெஞ்சம் கொஞ்சம்
நொந்தது

உள்ளம் காண மறந்தனர்
உண்மைகளை மறைத்தனர்
நெஞ்சங்களை வருத்தினர்
நேற்றைகளை மறந்தனர்
வசதிகளைப் பெருக்கியும்
மனங்களைச் சுருக்கினர்

மகிழ்ச்சியில் திளைத்தும்
மகிழ்விக்க மறந்தனர்
நெஞ்சம் கொஞ்சம்
நொந்தது என் நண்பனே

இம்மடலில் நான் கண்டு வந்த
இக்கட்டைச் சொல்லி விட்டேன்
உன்மடலைக் கண்டு இனி
உள்ளம் தனைத் தேற்றிக் கொள்வேன்

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors