தமிழோவியம்
கவிதை : மாற்றுவோம் சரித்திரத்தை#
- சத்தி சக்திதாசன்


இரவுகள் ஒரு போதும் விடிவதில்லை
இவர் வாழ்வில் பாவம்
கதவுகள் ஒரு போதும் திறப்பதில்லை
கடவுளின் ஆலயத்தில் இவர்தமக்கு

புலர்ந்த பொழுதுகளால் என்றும் தீரவில்லை இவர் துயரம்
புதுவாழ்வை நோக்கி ஏங்கித்தான் தவிக்கின்றார்
தத்துவம் பல பேசுகின்றோம் நாம் எப்போதாவது
தணிக்க முயன்றோமா இவர் சோகங்களை

தேடியலைகின்றோம் ஆண்டவனை ஆலயத்தில்
தென்படமாட்டான் கருணை மறந்த நெஞ்சங்களுக்கு
வாடும் மலர்களைக் கண்டால் வருந்தும் உள்ளங்களே
வாழ்வு முழுவதும் வாடி நிற்கும் வதனங்களை ஏன் மறந்தீர் ?
சமநிலையை வாழ்வில் இயற்கை பேணத்தவறின் மனிதர் நாம்
சரித்திரத்தை மாற்றி அமைப்போம் வாரீர் தோழர்களே

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors