தமிழோவியம்
கட்டுரை : காத்திருக்கிறேன் உன் வரவிற்காக
- லாவண்யா

காத்திருத்தல் தவம், காத்திருத்தல் வரம், காத்திருத்தல் சுகம்.

- நன்றி வைரமுத்து "இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல"

நம் வாழ்விலே ஒவ்வொரு நொடியும் ஏதற்காவது காத்திருக்க தான் செய்கின்றோன். அது வரிசையில் இருந்தபடி வாங்கும் அரிசி, பருப்பாகவும் இருக்கலாம் இல்லை வாழ்கை புறட்டி போடும் நேர்முக தேர்வாக இருக்கலாம். எந்த ஒரு விசயம் நடக்கவும் அதற்கான நேரம் காலம் வரும் வரை காத்திருக்க தான் வேண்டும் இது தான் எதார்தம் நிச்சமான நிதர்சனம்.

இந்த கவிதையை பாருங்கள்.

வெற்று காகிதத்தின் முன்னே
வார்த்தைகளுக்காக காத்திருக்கும்
கவிஞனை போல
காத்திருக்கிறேன் உன் வரவிற்காக...

- நன்றி செழியன் "வந்த நாள் முதல் (ஆனந்த விகடன்)"

காதலியின் வரவிற்காக காத்திருக்கும் கவிஞனினை பற்றியது இந்த கவிதை. அவள் வந்த பின்னே என்ன அனுபவம் கிட்டும் என்பது தெரியும். அதை எவ்வளவு ஙண்ணிய உதாரணம் கொண்டு விளக்கி இருக்கிறார் அந்த கவி, ஒரு கவிஞன் கவிதை எழுத அமர்ந்திருக்கிறான், அவன் சிந்தையில் ஆயிரம் எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் அந்த நொடியில் அவனை எந்த விசயம் அதிகம் பாதிக்கின்றதோ அதை பற்றியே அவன் அந்த காகிததில் பதிவாக்குவான். இப்போது இந்த கவிதைக்கு பொருந்தும் சில காத்திருப்புக்களை இங்கு காண்போம்.

பிரசவ வேதனையில் மனைவி, அதை காண பொறத கணவன் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கிறான் தன் வீட்டு புது வரவிற்காக. பிறக்கும் குழந்தை ஆணாக இருக்குமா, பெண்ணாக இருக்குமா. கண்கள் என்னை போல இருக்குமா, அவளை போன்று இருக்குமா? என் போல் கருப்பாக இருக்குமா இல்லை அவள் போல அழகாக சிவப்பாக இருக்குமா? கை விரல்கள் ஐந்து இருக்குமா இல்லை ஆறாக இருக்குமா? பார்க்க என்னை போலிருக்குமா இல்லை அவளைப் போல் இருக்குமா? இப்படி எத்தனையோ கற்பனையோடு அவள் படும் வேதனைக்கு இணையான வேதனையோடு காத்திருத்தல் தவமன்றோ?

man thinkingஅது ஒரு கல்லூரி வளகம். நுழைவு தேர்வெழுதி கொண்டிருக்கும் தன் மகளுக்காக காத்திருக்கும் தந்தை. அது அவனுக்கு கனவு கல்லூரி அவனால் முடியாதை அவன் பெண்ணாவது பெற வேண்டும் என நினைக்கிறான். அவள் வந்ததும் என்ன சொல்வாள். ஒருவேளை அவள் முகம் வாடி இருந்தால், "கல்லூரிக்கான கட்டணம், விடுதி கட்டணம் உடன் ஏற்பாடு செய்ய வேண்டும், அதன் பின் வரும் செலவுகளுக்கு சேமிக்க வேண்டும், பின்பு நல்ல வேலை தேட வேண்டும், அதன் பின் தகுந்த நல்ல வரன் தேட வேண்டும்" என்ற நீண்ட விரியும் கற்பனையை கவிதையை சுருக்கி அவளுக்கு அறுதல் சொல்ல வேண்டும் அடுத்த கல்லூரி பற்றி யோசிக்க வேண்டும் என்ற சிந்தனையில் காத்திருத்தல் வரமாகும்.

ஒரு புதிய தொழில் தொடங்கிய விரும்பும் கணவன். மனைவிக்கு மிகுந்த மதிப்பு தருபவன் அவன். அவள் வந்தது அவளுக்கு புரியும்படி இந்த தொழில் பற்றி விளக்க வேண்டும். அவள் நுணுக்கமாக கேட்கும் கேள்விகட்கு பொருமையாக பதில் தர வேண்டும். அவள் சிந்தனையில் இது நல்ல யுத்தி என்ற எண்ணதை உருவாக்க வேண்டும். நம் எதிர்காலத்தை புத்திபூர்வமாக யோசிக்கும் அவள் ஆலோசனை அவசியம் என்ற சிந்தனையோடு மனைவிக்காகக் காத்திருக்கும் கணவன். இந்த காத்திருத்தல் அவள் யோகம்.

அது ஒரு வானம் பார்த்த பூமி. கடந்த இரு வருடங்களாக மழை இல்லை. அதற்கு முந்திய வருடம் பேய் மழை கொட்டி பயிரெல்லாம் அழுகி போயின. இப்படி ஒரு வருடம் பெய்தும் மறுவருடம் காய்த்தும் அந்த விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் பருவ மழை வரும் காலம் அது. அதை நம்பி விதைத்து அந்த விதைகளும் வேர்விட்டு சிறிதாக புசுமை பூத்திருக்கும் நிலை. வானம் எங்கும் கருமேகம் கலை கட்டிவிட்டது. அந்த விவசாயிகள் காத்திருக்கின்றார்கள். வரும் மழை பயிர்களை வாழ்வித்து அவர்களின் வயிற்றில் பால் வார்க்குமா? அல்லது பயிர்களை அழித்து அவ்விவாசாயிகளில் கண்களில் கண்ணீர் பொழிவிக்குமா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors