தமிழோவியம்
கவிதை : கண்ணே நீ அறிவாயா
- தியாகு

கண்ணே நீ அறிவாயா
பாடுவது நானாகவும்
எண்ணிக் கொண்ட நேரங்களில்
காதலை சொல்லாமல் விட்ட
தருங்களை நீ அறிவாயா?

மலர்கள் மலர்வது வண்டுக்கு
தெரியும் -என்
மனம் மலந்ததை நீ அறிவாயா?
அர்ச்சிக்கப்பட்ட மலர்களும்
பேசப்பட்ட வார்த்தைகளும்
உதிர்ந்துவிட்ட இலைகளும்
புலர்ந்து விட்ட பொழுதுகளும்-
திரும்ப நிகழ்வதில்லை-உன்னை
நினைத்துவிட்டநெஞ்சும்தான்!

உனக்கென்ன பார்த்துவிட்டாய்-உன்
பார்வையின் கணம் தெரியுமா உனக்கு!
கண்களை பார்க்கும் பெண்களை
கைது செய்யுங்கள் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors