தமிழோவியம்
கவிதை : தமிழ்மகள் குடிவந்தாள்
- சத்தி சக்திதாசன்


செவ்வாயில் ஓர் புன்னகை
          செந்தமிழில் ஒர் சொல்நகை
                     செங்கழுத்தில் பொன்னகை 

கடைக்கண்ணில் ஓர் மின்னல்
         கைதன்னில் பனிக் குளிர்மை
                     கருவிழியில் வாட் கூர்மை

இல்லாத இடை கொண்டு
         இதயத்தை ஆட் கொண்டு
                     இப்பொழுதைத் தனதாக்கி

மென்மையிலே தென்றல் போல்
        மேகத்தின் குழந்தை போல்
                    மோகத்திலே தவிக்க விட்டு

கருத்தினிலே கவிதை போல்
        காதலிலே காவியம் போல்
                    கனவுகளில் சுந்தரி போல்

தாகத்திற்கு குளிர்மோர் போல் 
        தவிக்கின்ற நெஞ்சினுள்ளே
                   தமிழ்மகள் தான் குடிபுகுந்தாள்: 

Copyright © 2005 Tamiloviam.com - Authors