தமிழோவியம்
துணுக்கு : கடவுளா ? கல்லா ?
-

கடவுளா ? கல்லா ?

"சுருக்கெழுத்து, கைரேகை பற்றி எல்லோருக்கும் மேலெழுந்தவாரியாகத் தெரியும். இந்த கலைகளைப் பற்றிப் படித்தவர்களுக்குச் சிறப்பாகத் தெரியும். மற்றவர்களுக்கு ? வெறும் கோடு, வளைவு, புள்ளிகள்தானே ?

இதுபோலதான், கோயிலில் உள்ள கடவுளின் திருவுருவம், படம் போன்றவையும், மனதில் பக்தி உள்ளவர்களுக்கு தெய்வமாகத் தெரியும். மற்றவர்களுக்கு வெறும் கல்தான்.

(ஜெயராம் சர்மாவின் உபன்யாசத்தில் கேட்டது)


பதவி வேண்டுமா ?

மூன்று கட்டளைகள் தருகிறேன். நீ எப்போதும் பசித்திரு, தனித்திரு, விழித்திரு. இதற்கு விளக்கம் பசித்திறு - சுறுசுறுப்பு உள்ளவர்களிடம் பசி இருக்கும். தனித்திரு - படித்ததையெல்லாம் செயல்வடிவம் செய்ய தனித்திரு. விழித்திரு -  எந்த ஒரு காரியத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களைப் பின்பற்றினால் நாற்காலி கிடைக்கும். புரியவில்லையா..?

சித்திரு
னித்திரு
விழித்திரு

(புலவர் கீரனின் இலக்கியச் சொற்பொழிவுகளில் கேட்டது)

Copyright © 2005 Tamiloviam.com - Authors