தமிழோவியம்
நையாண்டி : ஆண்களால் எழுதப்பட்ட விதி
-

எப்பொழுதும் விதி முறைகளை கேட்டே பழகிப்போன ஆண்களால் எழுதப்பட்ட விதி முறைகள். எல்லாமே முக்கியம் என்பதால் அனைத்துக்கு 1 என்ற எண் தரப்பட்டுள்ளது.

1. ஷாப்பிங் போவது விளையாட்டல்ல, அதை ஒரு நாளும் அப்படி நினைக்கும் எண்ணமுமல்ல.

1. சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்ல வேண்டும். பூடகமாக சொல்வது, அரைகுறையாக சொல்வது வேலைக்காவது.

1. ஆமாம், இல்லை இரண்டில் ஒன்றே நாங்கள் எதிர்பார்க்கும் பதில்கள்.

1. எங்களிடம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். அனுதாபம் கல்யாணத்துக்கு முன்புதான்...

1. நீண்ட நாள் தலைவலி பிரச்சனைதான், அதற்கு சரியான இடம் மருத்துவமனை.

1. ஆறு மாதத்திற்கு முன்பு நாங்கள் சொன்னது எதுவும் இப்போது செல்லாது. எல்லாம் ஒரு வாரத்தோடு காலாவதியாகிவிடும்.

1. உங்களுக்கு நீங்கள் குண்டாக இருப்பதாக தோன்றினால் அது சரிதான், அதை எங்களிடம் கேட்க வேண்டாம்.

1. நாங்கள் சொல்லும் எதற்கும் தப்பிதமாக ஒரு அர்த்தம் உண்டு என்றால் நாங்கள் அப்படி சொல்லவில்லை.

1. எங்களிடம் கேட்கும் உதவியை உங்களால் நன்றாக செய்ய இயலும் என்றால் எங்களை கேட்காதீர்கள்.

1. டிவி பார்க்கும் போது, விளம்பரங்கள் வரும் போது பேச பழகிக்கொள்ளுங்கள்.

1. அமெரிக்காவை கண்டுபிடிக்க கொலம்பசுக்கு மேப் தேவைப்படவில்லை, அதேதான் எங்களுக்கும்.

1. முக்கியமாக வெளியே செல்லும் போது நீங்கள் எதைப் அணிந்தாலும் அது சிறப்பான உடைதான்.

1. இத்தனை விதிகளையும் மறுப்பு சொல்ல முடியாமல் படித்தமைக்கு நன்றி.

1. இதை எழுதிய பிறகு படுக்கை சோபாவில் என்றாலும் எழுதிய திருப்தி எங்களுக்கு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors