தமிழோவியம்
நெட்டன் பக்கம் : மைக்ரோஸாப்டும், வடிவேலுவும்
-

விரைவில் வெளிவருகிறது மைக்ரோஸாப்டின் புதிய மென்பொருள் Windows OneCare Live. இதை நிறுவினால் இது உங்கள் கணிணியை மைக்ரோஸாப்ட் பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்துக்கொள்ளும்.

http://www.microsoft.com/windows/onecare/default.mspx

- வரைஸ் இனி அண்டவே அண்டாது

- ஹேக்கர்ஸ் எட்டிப் பார்க்க முடியாது

- ஸ்பைவேர் தொட முடியாது

- விண்டோஸ் வேலை நிறுத்தம் செய்யாது

மற்றும் பல வசதிகளோடு..

இதற்கு தானியங்கியாக (இணைய வசதி இருந்தால்) புதுப்பித்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. ஆகையால் நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வேலையை கவனிக்கலாம்.

இந்த மென்பொருளை குறைந்த மாத/வருட சந்தாவில் தர திட்டமிட்டுள்ளது.  இதை படித்தவுடன் விகடனில் வந்த வடிவேலுவின் நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.

நம்ம சந்தேகம் : விண்டோஸ் காசு கொடுத்து வாங்கி, அதுல வர பிரச்சனையை சமாளிக்க Windows One Care (மாத சந்தாவில்). Windows One Careல் பிரச்சனை வந்தா ??வடி வடி வேலு... வெடிவேலு! (நன்றி : விகடன்)

‘அந்த நாள் ஞாபகம்’ங்கற படத்துக்காக ஒரு காமெடி ஸீன் நடிச்சேன்! அதுல நா ஒரு ஓட்டலு மொதலாளி. காலையில வந்து கடக் கதவத் தொறந்து, ஊதுவத்தி கொளுத்துனவாக்குல பரபரப்பாயிருவேன். வெளிய வேலையாளுகள வரிசையா நிறுத்தி ‘போ... நீ அந்த ஏரியா போ, நீ இந்த ஏரியா போ... புடிச்சுக் கொண்டா போ!’னு வெரசாப் பத்திவுடுவேன். அவனவனும் தெறிச்சு ஓடுவாய்ங்க. எதுத்தாப்புல ஒரு டீக்கடையில ரெண்டு போலீஸ§ நின்னு இது அம்புட்டையும் வாட்ச் பண்ணிக்கிருக்கும்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன பயக ஆளுக்கு நாலஞ்சு ஆளுகளோட வந்து எறங்குவாய்ங்க. நா என் ஆளுக காதுல மெதுவா ‘என்னடா வெளியூர்காரய்ங்கதான... பஸ் ஸ்டாண்டுப் பக்கம்தான புடிச்சீங்க’னு கேட்டு கன்ஃபாம் பண்ணிக்கிட்டு, அப்பிடியே நிமிந்து கும்புட்டு ஈஈஈஈன்ன்னு சிரிச்சமானிக்கு வரவேற்பப் போடுவேன். ‘வாங்க வாங்க... வந்து வகுறு முட்டச் சாப்புடுங்க’னு அம்புட்டுப் பேரையும் கூப்புட்டு உக்காரவெச்சி ‘போட்றா பந்திய!’னு எலயப் போட ஆரம்பிச்சிருவோம்.

‘ஏய்... அங்க சாம்பாரு ஊத்து’, ‘ந்தா அண்ணாச்சிக்கு பொங்கலப் போடு’, ‘அப்பத்தாவுக்கு பஜ்ஜி எடுத்து வை!’னு ஒரே அன்புத் தொல்ல அலம்பல் பண்ணி, பயபுள்ளைகள நல்லா எர எடுக்க வெப்பேன். திடீர்னு சாப்புட்டுக்கேயிருக்க ஒரு ஆளு ‘பவ்வு’னு கக்க ஆரம்பிப்பான்ல. வரிசையா அம்புட்டுப் பேரும் வாயையும் வயித்தையும் புடிச்சிக்கிட்டு சவுண்டு குடுக்க ஆரம்பிச்சிருவாய்ங்க. நா அப்பிடியே செம ஜாலியாகி ‘ஏ மாப்ள, ஏத்து... பயகள பார்சல் பண்ணி ஏத்து!’னு கொரலு குடுப்பேன். சர்க்கு சர்க்குனு வாசல்ல ரெண்டு மூணு வேனு வந்து நிக்கும். பூராப் பேரையும் தூக்கி போட்டுக்கிட்டு வேனு போயிக்கேயிருக்கும். நா அப்பிடியே சாமியக் கும்புட்டுட்டு ‘அப்பனே இன்னிய சோலி முடிஞ்சுதுரா’னு கடய இழுத்து மூடிப்புட்டுக் கௌம்பிருவேன்.

இந்தக் கூத்தயெல்லாம் பாத்துக்கிருந்த போலீஸு, ‘என்னா... இவன் இப்பிடிப் பண்றான்?’னு அக்கம்பக்கத்துல வெசாரிக்கும். ‘இது தெனம் நடக்குற கூத்துங்க. காலையில கடயத் தொறப்பாய்ங்க. வண்டியில ஆளுங்களக் கூட்டிக்கிட்டு வருவாய்ங்க. ஒரே ஒரு பந்திதேன் போடுவாய்ங்க. அத்தன சனமும் வாந்தி, வகுத்துவலினு வுழுந்து உருளுவாய்ங்க. ஒடனே வேனு வந்து நிக்கும். எல்லாப் பேத்தயும் அள்ளிப்போட்டு அனுப்பி வெச்சிட்டு, ஓனரு கௌம்பிருவாரு!’னு என்னயக் கையைக் காட்டிருவாய்ங்க.

‘என்னடா இது! மர்மக் கதையா இருக்கே?’னு போலீஸ§ என் பொடனியில சாத்திப் புடிச்சிரும். ‘அட! இது கஸ்டமர் கேருங்க. வந்தவுகள நல்லபடியாக் கவனிச்சி, அவுகவுக போய்ச் சேர வேண்டிய எடத்துக்கு வேன்லயே கொண்டுபோய் வுட்டு வர்றோம்’ம்பேன். ‘உண்மையச் சொல்றா என் உடுக்கு!’னு அப்பிடியே என்னய ஸ்டேஷனுக்குத் தூக்கிட்டுப் போய்ப் போட்டு, உரிச்சு ஊறுகா போடுவாய்ங்கள்ல. வலி தாங்க முடியாம, ‘சொல்லிர்றேன்ய்யா, சொல்லிர்றேன்ய்யா!’னு குத்தத்த ஒப்புக்குவேன். என்னான்னு?

‘மெட்ராஸ§ல இருக்கற பிரைவேட்டு ஆஸ்பத்திரி எல்லாத்துலயும் நானு கான்ட்ராக்ட்டு எடுத்துருக்கேன்ய்யா. தெனமும் ஆசுபத்திரிக்கு ரெவ்வெண்டு பேசண்டுகளப் புடிச்சுக் குடுக்குறதா ஒப்பந்தம். அதான் வெளியூர் ஆளுங்களா தேடிப் புடிச்சிக் கூட்டியாந்து பெருச்சாளி சாம்பாரு, பல்லிக் கொழம்பு, கரப்பான் பூச்சி பொறியல்னு வெதவெதமாப் போட்டு நாங்களே வேனு வெச்சி ஆசுபத்திரிக்கு அனுப்பிச்சிருவோம்’ம்பேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors