தமிழோவியம்
நையாண்டி : ஜோக்ஸ் - 1
- குமரவேலன்

"என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்டவே மாட்டா."

"அட, பரவாயில்லையே."

"அதை கம்ப்ளீட்டா அழிச்சுடுவா."


"பெண் பார்க்க அடிக்கடி போனதிலே ரவி ரொம்ப கெட்டு போயிட்டான்"

ஏன் அப்படி சொல்லறே ?

"ஓட்டல்ல போய் பஜ்ஜி, காபி சாப்பிட்டு ஊருக்கு போய் லெட்டர் போடறேன்னு சொல்லறான்.


"'படி தாண்டாப் பத்தினி'ங்கற படத்தில  கதாநாயகியா நடிச்ச புதுமுக நடிகை என்ன ஆனாங்க ?

அஸிஸ்டென்ட் டைரக்டரோட ஓடிப்போயிட்டாளாம்."

Copyright © 2005 Tamiloviam.com - Authors