தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : மன தகைவும் (Stress) அதன் விளைவுகளும்
- பத்மா அர்விந்த்

காலத்தின் மாற்றத்தால் சில சமூக நியதிகளுகு உட்பட்டு நாம் அனைவரும் ஒயாது உழைத்துக்கொண்டே இருக்கிறொம். வெற்றியின் அளவுகோல்களும் விருப்பத்தின் அளவுகோல்களும் மாறிவிட்டபின் அதற்கேற்றார்போல உழைக்கவும், கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மனதகைவு சோர்வுக்கும் பின் பல வித உடல் உபாதைகளுக்கும் இடமளிக்கும். முக்கியமாக வயிற்று அல்சர், இரத்த கொதிப்பு, தலைவலி போன்றவை பல நேரங்களில் தகைவை சேர்ந்ததே. 6 மாத குழந்தைக்கு கூட அன்னையோ தந்தையோ காப்பகத்தில் விட்டு செல்லும் நாள் முதல் தகைவு ஆரம்பிக்கிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கொ நாடு விட்டு நாடு வாழும் போது மற்ற மாணவர்களுடன் ஒத்து போவதிலிருந்து, திடீரென்று வேறு ஊர்களுக்கு செல்ல நேர்ந்தால் நண்பர்களைவிட்டு செல்ல வேண்டிய அவசியம் போன்ற காரணத்தினால் தகைவு வருகிறது.

முதன் முதலில் 1932 இல் இந்த தகைவின் காரணிகளை பற்றி படிக்கும் போது கானன் என்பவர் தகைவை மிருகங்கள் சமாளிக்க சண்டையிடுதலோ அல்லது ஓடவோ செய்கின்றன. இன்றும் மனிதன் அதீத தகைவு வந்தால் சினந்து கொள்ளவோ அல்லது விட்டு விலகவோ செய்கின்றான்.

பின்பு வந்த ஹன்ஸ் செல்யே என்பவர் ஓடுவது சண்டையிடுவது இவற்றுடன் மனிதன் தன்னை மாற்றி கொள்ளவும் செய்கின்றான் என்று கூறினார். அதன் பின் உளவியல் துறை நிபுணர்கள் 1960 லிருந்து 70 வரை ஆய்வுகள் செய்து கீழ் கண்டவாறு முடிவுக்கு வந்தனர்.

மனிதன் ஒரு தகைவின் காரணியை எப்படி உணர்கிறானோ அதற்கேற்றார் போல எதிர்வினை ஆற்றுகின்றான். உதாரணமாக நாம் நம்மை ஒருவன் பின்தொடர்வதாகவும், அவனால் நமக்கு தீமை ஏற்படும் என்று  நினைத்தால் உடனே ஓடவோ வேகமாக நடக்கவோ அல்லது அ  ருகில் உள்ள ஒரு கடையில் நுழையவோ செய்கிறோம்.

தகைவு ஒரு காரணிக்கு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் பொறுத்தே இருக்கிறது. உதாரணமாக தேர்வின் முடிவைப்பற்றி கவலைபட தேவையில்லாத ஒருவன் தேர்வை குறித்து தகைவு கொள்ள தேவையில்லை. அதே போல பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வு பலருக்கு தகைவை தந்தாலும், அதன் மீது விருப்பம் இல்லாதவருக்கு தகைவை தருவதில்லை. இது போன்ற அனுமானங்களே தகைவின் அளவை தீர்மானிக்கின்றன.

சில சமயங்களில் சூழ்நிலை  மாற்றம் கூட தகைவை ஏற்படுத்தும். சூழ்நிலை மாற்றங்கள் சமூகம், மனிதனின் மனநிலை மற்றும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுத்த அவை மாறு வழியில் தகவை ஏர்படுத்தும் வல்லமை கொண்டவை. சாலை பணி நடந்து கொண்டிருக்கும் போது போக்குவரத்து மிகவும் மெதுவாக செல்லும். சில சமயம் இது விபத்துக்களில் முடியும் அதனால் போக்குவரத்து ஸ்தம்பிக்க கூடும். இதனால் முதலில் அலுவலகத்திற்கு தாமதமாகிறதே என்று மனநிலையில் பதற்றமும், பின் குறுக்கே நுழைய எத்தனிக்கும் வாகனங்களின் மீது சினமும் உண்டாகும். இந்த சினத்தால் ஏற்படும் மன அமைதியின்மை தொடர்ந்தால் தலைவலி போன்ற உடல் நிலை மாற்றங்கள் ஏற்படுத்தும். இதில் மனிதன் செய்ய முடிவது எதுவுமே இல்லை. பணிக்கு சற்றே விரைவில் கிளம்பி சென்றால் தாமதம் பாதிக்காது. அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், மனைவியும் பணிக்கு செல்ல நேர்ந்தால் எளிதில் முடிகிற காரியம் இல்லை. அதேபோல அரசியல் மாற்றங்களால் ஏற்படும் மாறுதல்கள் தகைவை உருவாக்க கூடியவை.

இது போன்ற சமயங்களில் எப்படி தகைவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதை வரும் வாரம் கவனிக்கலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors