தமிழோவியம்
அடடே !! : அவர்கள் சொன்னது எங்களுக்கு தோன்றியது
-

 

சொந்தப் படம் தயாரிக்க மாட்டேன் - இயக்குனர் 'பேரரசு'

- அப்படியே இயக்கவும் மாட்டேனு சொன்னா தமிழ் திரையுலகம் கொஞ்சம் பொழச்சுக்கும்.'முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் (jun 3) இருந்து, ஓட்டல்களில் இட்லி தோசை விலை குறையும்' - அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

- அதுக்கு பதிலா எதோட விலை ஏறுதுன்னு சொன்னா சாப்பிடாம இருக்க வசதியா இருக்கும்.சினிமா என்பது தீமைகளை விளக்கி மக்களை நல்வழிப்படுத்துவதாக இருந்தது. இப்போது சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிக்கின்றனர். ஸ்டைலுக்காக இப்படிச் செய்வதைப் பார்த்து பலர் அதை பின்பற்றும் அபாயம் உள்ளது. - நவ்யா நாயர்

- 'அன்பா' 'மணி' 'மணியா' உபதேசம் செய்யறீங்களே !!கர்நாடகாவில் காங். தோல்விக்கு விலை உயர்வு காரணம் - அர்ஜுன் சிங் புகார்

-  'அண்ணா' சேம் சைட் கோல் போடாம, விலை உயர்வை தடுக்க ஏதாவது உருப்புடியா ஐடியா இருந்தா சொல்லுங்க.

Copyright © 2005 Tamiloviam.com - Authors