தமிழோவியம்
கவிதை : இரும்புக் குரல் வேண்டும்
- சிதம்பரம் அருணாசலம்

 

திபெத்தை விழுங்கிய
திமிங்கிலம் இப்போது
ஆபத்தை விதைக்க
அடுத்த நாட்டைத் தேடுகிறது.

பாத்திரங்கள் விழுகும் போது
எழுகின்ற ஓசையைப்போல்
ஊர்ப்பெயர்களை வைத்துக்கொண்டு
அருணாசலப் பிரதேசம் என்னும்
அருமைப் பெயர் கொண்ட இடமும்
தன்னுடையது என்று
நரம்பில்லாத நாக்கால்
வரம்பில்லாமல் கொக்கரிக்கிறது.

இன்னும்
வாய்மூடி மெளனியாய்
அகிம்சை பேசிக்கொண்டிருந்தால்
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்
முட்டாளான கதை
முளைத்து வளரும் மீண்டும்.
இரும்புக் குரல் கொண்டு
இதற்குப் பதில் கொடுக்க வேண்டும்.

நிலைமையை இப்படியே
நீட்டிக்க விட்டால்,
அருணாஜலம் எனப்படுவதால்
திருவண்ணாமலையைக்கும் உரிமை கொண்டாடும்
கிறுக்குப் புத்தி உதித்து விடும்.

(அருணாசலப் பிரதேசத்திற்கு  சீனா உரிமை கொண்டாடுவதாக செய்தித் தாள்களில் வந்த செய்தியைப் படித்ததும்  எழுதியது)

Copyright © 2005 Tamiloviam.com - Authors