தமிழோவியம்
டெலிவுட் : சால இஷ்டம்
- சில்லுண்டி

நம்ம தெலுங்கு ஆடியன்ஸோட டேஸ்ட்டே தனிதான். பொழுது விடியறதே சினிமாக்காரங்க மூஞ்சுலதான்னு நினைக்கிறேன். ஏதாவது ஒரு டைரக்டரோ அல்லது புரொட்யூசரோ வரப்போற படத்துக்கோ இல்லாட்டி வந்து ஓடாம இருக்குற படத்துக்கோ வாயாலேயே ஒரு டிரைலர் கொடுத்துட்டிருப்பாங்க. கேரக்டர், சால இஷ்டம், பெர்மான்ஸ், ஒக்க சூப்பர் ஹிட்டு, இந்த மாதிரி வார்த்தைங்களுக்கு அர்த்தம் தெரிஞ்சுருந்தா போதும். தெலுங்கு தெரியாட்டி பரவாயில்லை. ·பாலோ பண்ணிக்கலாம். இந்த புரொகிராமுக்கு இன்னொரு ஸ்பெஷாலிட்டி சினிமாவை பத்திதான் பேசிட்டிருப்பாங்க ஆனா கிளிப்பிங்ஸே காட்ட மாட்டாங்க. கண்ணை தெறிக்கிற கலர் பேக்ரவுண்டில் சம்பந்தப்பட்டவர் போடுகிற பிளேடு, நூல், சோப்பு சங்கதிகளில் சிக்கித்தவிக்கிற கோடானுகோடி குல்ட்டீஸ்......ரொம்ப பாவம்தான்!

ஞாயிற்றுக்கிழமை நம்மூர் டிவிகளில் வரும் காலை நிகழ்ச்சிகளையெல்லாம் கையில் அடக்கிவிடலாம். டாக் ஷோ, டாப் சினிமா, பாட்டுக்கு பாட்டு எல்லாம் ஒரே மாதிரியான சங்கதிகள். இது பாட்டகாவலா இல்லை. கொஞ்சம் ஆட்டகாவலா! ஜெயா டிவியின் நல்ல புரொகிராமில் இதுவும் ஒன்று. பரதநாட்டியத்தின் நுணுக்கங்களை ஜதி சுத்தமாக அலசுகிறார்கள். கொஞ்ச நாள் வரை சுகன்யா அம்மிணி நடத்திட்டிருந்தாங்க.. அம்மிணி இப்போ சீரியல்ல பிஸியாகிட்டதால யாரோ ஒரு பேரிளம்பெண் தலைமையில் போய்க்கொண்டிருக்கிறது. பளபள லைட்டிங், பளிச் முகங்கள், பட்டுப்புடவை சரசரப்பது கூட காதில் விழுகிறது. பரதநாட்டியத்துக்கும் குத்து டான்ஸ்க்கும் வித்தியாசம் தெரியாட்டியும் பரவாயில்லை...அந்த பளபள எவர்கிரீன் டான்ஸ் மாஸ்டர் மிஸ்டர் நடராஜரருக்காகவாது பார்க்கலாம்!

ராஜ் டிவியில் லோகோ மாற்றியதும் ஏகப்பட்ட மாற்றம் இருக்கும்னு நினைச்சது தப்புதான். ஆடியோ கொஞ்சம் தேவலைங்கிற நிலைமைக்கு வந்திருக்கிறது. சன், ஜெயா பெரியண்ணாக்கள் ரேஞ்சுக்கு வர இன்னுமொரு பத்து வருஷமாகுமோ என்னவோ. ஒரு பத்து லேட்டஸ்ட் பாட்டு கிளிப்பிங்ஸை வரிசை மாறாமல் ஒரு நாளைக்கு எட்டு தடவை போட்டு இன்புறுத்துகிறார்கள். கண்ணில் பட்டது 'காத்தாடி போல' சுற்றிக்கொண்டிருந்த சூர்யா-ஜோ ஜோடி. பின்னணியில் லாலா பாடுவதும் அதே ஜோடி. முன்னணியில் ஆடுவதும் அதே ஜோடி. டெக்னாலஜி! இதே மாதிரி ஹீரோ, ஹீரோயினே ஸ்கீரின் முழுக்க வந்தா சைடு ஆர்ட்டிஸ்டுங்க பொழைக்கிறது எப்படி? மிஸ்டர் பாரதிராசா, அட்டென்ஷன் ப்ளீஸ்!

நாலஞ்சு கன்னட, தெலுங்கு, மலையாள வார்த்தைகள் தெரிஞ்சுருந்தா ஜல்லியடிக்க நிறைய உபயோகமா இருக்குமேன்னு எப்பவாது பீல் பண்ணியதுண்டா? அதை ஏன் கேட்குறீங்க... நெசமா நிறையதடவை கன்னத்துல கைவெச்சுக்கிட்டு உட்கார்ந்தது உண்டுன்னு சொல்றீங்களா.. அப்ப கன்னத்துலேர்ந்து கையை எடுத்து ரிமோட்டுல வையுங்க மொதல்ல. எஸ்.எஸ் டிவியில ரீச் அவுட் புரொகிராம். பேசும்போது கொஞ்சம் உஷாரா இருக்கணும். கிண்டல் பண்ணி கலாய்ச்சுடும் காம்பியர் குறும்பு பார்ட்டிங்க. பேசாத காலையும் பேசவைக்கும் பார்ட்டிங்க. நல்லா இருக்கீங்களா...சாப்பிட்டீங்களாங்கிற மாதிரியான சில்லி கேள்வியெல்லாம் கிடையாது. யார் எப்போ எங்கேயிருந்து லைனுக்கு வருவாங்கன்னு சொல்லமுடியாது.

'hey... where u callling from'

'i'm anu from vishkapatnam...சால மஞ்சினி மாட்லாட்டுத்துன்னே'

'...r u college going girl? how many colleges in vishak?'

'@#$%#@#$...song from Bunny.. சால இஷ்டம்"

'hello.. r u hear me...இன்னாபா லைன் பேஜாரா கீது' 

'i dedicate the song to my grand son...'

'தேவுடா... தேவுடா!'

Copyright © 2005 Tamiloviam.com - Authors