தமிழோவியம்
கவிதை : நிஜங்களின் சொரூபம்
- சத்தி சக்திதாசன்

 

வாழ்க்கை என்னும் சந்தை
வியாபரிகளின் மந்தை
இன்பத்தை வாங்கித்
துன்பத்தை விற்றிட
துடித்திடும் நெஞ்சங்கள்
தொலைவினில் இருந்தே கவனி
 
இல்லாதவைகளுக்காய் ஏங்கி
இருப்பதை தாமாய் நீங்கி
நிரந்தர மாயையில் தூங்கி
நூற்றிடும் வேதனை ஓங்கி
மாற்றிடும் வேஷங்கள் தாங்கி
 
கற்றிடும் பாடங்கள் யாவும்
கறிக்குதவா ஏட்டுச் சுரைக்காய்
சுற்றிடும் பொழுதுகள் யாவும்
சுரந்திடும் தெளிவிலா ஞானம்
கலைந்திடும் நிரந்தர மோனம்
காத்திடும் வேளைகள் யாவும்
 
வற்றிடும் குளத்தின் மீதினில்
ஒட்டிடும் கொக்குகள்  உண்டோ ?
நித்திய வாழ்க்கையில் கண்ட
நிஜங்களின் உண்மைச் சொரூபம்
நினவினில் நிறுத்தும் யாதார்த்தங்களை
நெஞ்சத்தில் மிஞ்சிடும் அமைதி
 

Copyright © 2005 Tamiloviam.com - Authors