தமிழோவியம்
கவிதை : கர்வம் கொள்
- பார்த்திபன்
என் தமிழனே!!!!!!!!!
 
உன் தாய்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
உலகின் முதன்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
தொல்காப்பியத் தொன்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
வள்ளுவன் வாய்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
ஒளவையின் அழகுமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
கம்பனின் கவிமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
சமயங்களின் சந்தமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
சங்கம் வலர்த்த சரித்திரமொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
பாரதியின் போர்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
பாவேந்தர் பண்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
கண்ணதாசன் காதல்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
இலக்கியச் செம்மொழி தமிழ்
என்று கர்வம் கொள்!!
 
உன் அன்னைமொழி அமிர்தம்
என்று கர்வம் கொள்!!
 
அது சிதையாமல் காக்கும் பணி
உனதென்று 
கருத்தில் கொள்!!!!!!!!!!!
 
Copyright © 2005 Tamiloviam.com - Authors